கிறிஸ்துநாதர் அநுசாரம் -24
சர்வேசுரன் பொறுமையாயிருக்கிறார்;ஏனெனில் நித்தியராயிருக்கிறார்".என்று அர்ச்.அகுஸ்தீன் சொல்லுகிறார்.ஆனால் பொறுமையின் நாட்கள் கடந்து போன பிறகு நீதியின் நாள் வரும்.அது பயங்கரத்திள்குரிய நாள்.அந்நாளிலிருந்து தப்பித்துக் கொள்ளுவது முடியாது.தங்களுடைய *செயல்களுக்கும் நினைவுகளுக்கும் கணக்குக் கொடுக்க* நித்திய நீதி அதிபருக்கு முன்பாக சகல மனிதரும் வரவேண்டியது ஒருநாள்! அந்த பயங்கரமான நாளை நினைத்துப்பார்.இதோ கல்லறைகளினின்று தூசியெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து உருவமெடுக்கினறது.உலகத்தின் எத்திசையிலும் நின்று மரித்தோருடைய கூட்டம் நீதி அதிபருடைய சமூகத்தில் வந்து சேருகின்றது.அங்கே எல்லா இரகசியங்களும் வெளியாகின்றன.மறைவிடமான மனசாட்சியில்லை. ஒவ்வொருவனும் தன் தீர்வையை எதிர்பார்கிறான்.மனிதர் பிரிக்கப்படுகிறார்கள்.தீர்ப்புச்சொல்ப்படுகிறது.
நீதிமான்களுக்கு மோட்சம் திறந்திருக்கிறது.பாவிகளையோ நரகம் தன் வாயை அகலமாய் திறந்து விழுங்குகின்றது.பயங்கரத்திற்குரிய நாள்!சம்மனசுகளும் புண்ணியவானகளும் சேசுகிறிஸ்துநாதரைப் புடைச்சூழ்ந்து வர ,அவர் மகமையுள்ளவராய் மோட்சத்திற்கு எழுந்தருளிப் போகிறார்.பசாசுகள் பாவிகளைத் தள்ளிக் கொண்டு நரகத்தில் விழுகின்றன.எல்லாம் முடிந்தது.என்றென்றைக்கும் நீடித்திருக்கும்.
ஆனதால் நீ உலகத்திலிருக்கும் போதே இவ்விரண்டில் ஒன்றை தெரிந்துக்கொள்.*மறுசீவியத்தில் மனந்திரும்பலாம் என்று உன் கனவிலும் எண்ணாதே*.
கிறிஸ்துநாதர் அநுசாரம் -24
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment