கடவுளை முழுவதும் நேசிக்காமல் மோட்சத்திற்குள் நுழையமுடியாது
ஒவ்வொரு ஆன்மாவும் தன் வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் எப்போதும் என்னை நேசிக்க கடமைப்பட்டிருக்கிறது.அப்படி என்னை நேசியாமலிருந்தால் அதில் வெற்றிடம் ஏற்படும்.அப்படி நேசியாமல் எத்தனை நாள்,எத்தனை மணிநேரம்,எத்தனை நிமிடம் வெற்றிடம் ஏற்படுமோ அந்த வெற்றிடங்கள் அன்பால் நிரப்பப்படும் வரையிலும் அவ்வான்மா மோட்சத்திற்குள் நுழைய முடியாது.அதை நிரப்ப வேண்டுமானால் எஞ்சியுள்ள தன் வாழ்நாளில் என்னை இடைவெளியின்றி இரட்டிப்பாக நேசிக்க வேண்டும்.அப்படிச் செய்து என்னை நேசிக்கும் கடமையைப் பூர்த்தி செய்யாவிட்டால் உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பால் அது செய்யப்படும்.நான் உன்னை விட்டு பிரிந்து உனக்கு நான் இல்லாதிருக்கும்போது நீ என்மீது கொள்ளும் அன்புத் தேடுதல் உன் அன்பை இரட்டிப்பாக்குகிறது.இந்த மிகுதிப்பாடான அன்பைக் கொண்டு,நேசியாமல் நீ விட்ட வெற்றிடங்களை நிரப்புவாய்.
நமதாண்டவர் சகோதரி மரிய லூசியாவிடம் கூறியது.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment