கத்தோலிக்க பெற்றோர்களின் ஞான அலுவல்
கத்தோலிக்க குடும்பத்தின் முக்கிய அலுவல் - தங்கள் பிள்ளைகளை மோட்ச இராச்சியத்திற்கு பிரஜகளை உண்டுபண்ணுவதற்காக வளர்த்தல்*
கத்தோலிக்க பெற்றோராகிய உங்களது பணி ஒரு புனிதமான ஞான அலுவலாக இருக்கிறது.நீங்கள் உங்கள் பிள்ளைகளை மருத்துவர்களாகவோ வழக்கறிஞர்களாகவோ, விஞ்ஞானிகளாகவோ உருவாக்கலாம்.ஆனால் அவர்கள் மோட்ச இராச்சியத்தை அடையாமலோ அல்லது அதற்கு தேவையான வாய்ப்பு வழிமுறைகள் அவர்களுக்கு வழங்கப்படாமலோ போயிருந்தால் நீங்கள் வெற்றிபெற வில்லை என அர்த்தம்.பிள்ளைகளை நித்திய வாழ்வை பெற்றுக்கொள்ளச் செய்வதுதான் கத்தோலிக்க பெற்றோர்களின் பிரதான நோக்கம்.
உங்கள் குழந்தைகள் உலகமெல்லாம் தங்களுடையதாக்கிக் கொண்டாலும் பாவ வாழ்க்கையால் மோட்ச பேரின்பத்தை இழப்பார்கள் என்றால் நீங்கள் அவர்களுடைய பெற்றோராயிருந்து என்ன பயன்?
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment