புனிதர்களின் பொன்மொழிகள்
ஒருவனை நடன அரங்கிற்கு அழைத்துச்சென்று அங்கே தலைகீழாகக் கட்டித்தொங்கவிட்டால் அங்குள்ள கேளிக்கைகளை அவனால் அனுபவிக்க முடியுமா?பாவியின் நிலையும் அதுதான்.
உலக உல்லாசங்களுக்கு நடுவில் கடவுளின்றி இருக்கிற ஒருவனது ஆத்துமம் தலைகீழாக திருப்பப்பட்டது போல் இருக்கிறது.அவன் உண்டு குடிக்கலாம்,நடனமாடலாம்,ஆடம்பரமான உடைகள் அணிந்து பிறரால் மதித்துப்போற்றப்படலாம் கெளரவிக்கப்படலாம்,பெரும் உலக செல்வங்கள் அவனுக்குச் சொந்தமாகலாம் ஆனால் அவன் சமாதானத்தை கொண்டிருக்கமாட்டான்.கெட்டவர்களுக்கு சமாதானமில்லை.சமாதானம் கடவுளிடமிருந்து மட்டுமே வருகிறது.கடவுள் தம் எதிரிகளுக்கு அல்ல,தம் நண்பர்களுக்கே அதை கொடுக்கிறார்.
அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment