கடவுள்,மனிதர்கள் மீது வைத்துள்ள இரக்கத்தின்,அன்பின் முடிவு நற்கருணை
*கடவுள்,மனிதர்கள் மீது வைத்துள்ள இரக்கத்தின்,அன்பின் முடிவு நற்கருணை*
சர்வேசுரன் சர்வ வல்லபராக இருந்தாலும்,அவர் *திவ்விய நற்கருணைக்கு மேலான எதையும் நமக்குத் தர இயலாதவராய்* இருக்கிறார்.அவர் உன்னத ஞானமுள்ள வராக இருந்தாலும் *திவ்விய நற்கருணைக்கு மேல் எப்படித் தருவது என்று அறியாதிருக்கிறார்*,அவர் அளவற்ற செல்வமுள்ளவராயிருந்தாலும் திவ்விய *நற்கருணைக்கு மேல் நமக்கு தர எதுவுமில்லாதவராக இருக்கிறார்*.
புனித அகுஸ்தீனார்.
செங்கடலை இரண்டாக பிரித்த கடவுளை,
கல்வாரியில் மரித்து உயிர்த்த ஒரே கடவுளை
மனிதர்கள் நோகடிக்க முடியுமா ?
காயப்படுத்த முடியுமா ?
முடியும்.
எந்த மதத்தினராலும் முடியாது.ஆனால்
நற்கருணை உட்கொள்ளும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் மட்டுமே அவரை மிக மோசமாக காயப்படுத்த முடியும்.அவமானப்படுத்தமுடியும்.
எப்படி ?
பாவசங்கீர்தனம் செய்யாமல் பாவத்தோடு நற்கருணை வாங்கினால் இந்த உலகத்தில் எந்த மனிதரும், எந்த மதத்தினரும் தர முடியாத வேதனையை ,காயத்தை நாம் நம் நற்கருணை ஆண்டவருக்கு கொடுக்கின்றோம்.இதுவே சத்தியம்.
"முட்களும் கற்களும் நிறைந்த இருட்டு பள்ளத்தில் என்னை அழுத்துவதுப்போல வேதனை உண்ர்கிறேன்".என நம் ஆண்டவர் இயேசு புனித மார்கரீத் மரியம்மாளிடம் வெளிப்படுத்தியது.(திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட காட்சி).
*நற்கருணை பெறும்போது*
என் கடவுளை நற்கருணையாக பெறுகிறோம் என்ற அடிப்படை விசுவாசம் இல்லாமல் ஏதோ சுண்டல் வாங்குவதுப்போல பக்தி, மரியாதை இன்றி கடமைக்காக நற்கருணை வாங்கி அவசங்கைப்படுத்துகின்றோம்.
நொட்டாங்கையில் நற்கருணை வாங்கி வாயில் போடுவதே கடவுளுக்கு மனிதர்கள் கொடுக்கும் உயரிய மரியாதையா ?
*நற்கருணை பெற்ற பின்*
நற்கருணையாக நம் இதயத்தில் நிறைந்திருக்கும் ஆண்டவரோடு ஒரு 10 நிமிடம் கூட பேசாமால், கொஞ்சாமல், மன்றாடாமால்,ஆராதிக்காமல், அருகில் இருப்பவருடன் பேசுவதும், Phone யை நோண்டுவதும்,ஆலயத்தை விட்டு வெளியேறுவதும்,புனிதர்களிடம் செபிப்பதும்,வரவு செலவு, பாராட்டு, கைதட்டல், பொன்னாடை என நம்மை தேடி வந்திருக்கும் ஆண்டவரை கண்டுக்கொள்ளாமல் உலக விஷயங்களுக்கு முக்கியத்துவம் தந்து அவரை மிக மோசமாக அவமானப்படுத்துகின்றோம்.
நற்கருணை பேழையில் இருந்தால் ஒரு மணிநேரம் கூட மூழங்காலில் நின்று ஆராதிக்க தாயாராக இருக்கின்றோம்.ஆனால் நற்கருணை பேழையாக நம்மையே மாற்றி நம் இதயத்தில் தங்கியிருக்கும் போது அவரை கண்டுக் கொள்ளாமல் அடுத்த வேலையில் Busy ஆக இருக்கின்றோம்.
*கடவுள்,மனிதர்கள் மீது வைத்துள்ள இரக்கத்தின்,அன்பின் முடிவு நற்கருணை !*
ஏனெனில் தன்னையே(கடவுளையே) நற்கருணையாக தந்துவிட்டார்.மூவோரு இறைவனின் நீதிப்படி இதற்கு மேல் மனிதர்களுக்காக தருவதற்கு வேறேதும் மூவொரு இறைவனிடமே இல்லை இதுவே மறுக்குமுடியாத சத்தியம்.
விலக்கப்பட்ட கனியை,
ஏவாள் உண்பதற்காக
அலகை சதி செய்து
சாபமாக மாற்றியது.
அதேப்போல இன்றும்
ஆன்ம இரட்சிப்பிற்க்கு
கிறிஸ்தவர்கள் உண்பதற்க்காக
வழங்கப்பட்ட நற்கருணையை
தகுதியற்ற முறையில் உண்ண செய்து
சாபாமாக மாற்ற அலகை சதி செய்து,அதில் அநேகமாக வெற்றியும் அடைந்துவிட்டது. நாமோ இதெல்லாம் தெரியாமலேயே நற்கருணை அவசங்கை செய்யதுக்கொண்டு அவன் வழியிலே அவனுடன் பயணிக்கின்றோம் என்பதே உண்மை.
அரூபியான சம்மனசுகள் கூட தங்கள் கடவுளை உண்ண முடியாது.ஆனால் நாம் நற்கருணையாக நம் கடவுளையே உட்கொள்கிறோம் என்றால் , நம் இதயம் ஆண்டவர் தங்கும் ஆலயம் என்றால் நமது வாழ்வியல் முறை எவ்வாறு உள்ளது.? அயலாரை நேசிக்கின்றோமா ?, பகைவரை மன்னிக்கின்றேமா ? குடும்ப ஒற்றுமையோடு இறைன்பில் பிறரன்பில் வாழ்கின்றோமா ?
நற்கருணை பெறாத பிற மதத்தினரை விட, நற்கருணை பெறும் கிறிஸ்தவர்களின் வாழ்வியல் முறை மோசமாக இருந்தால் ஒருநாள் ஆண்டவர் நம்மிடம் நிச்சயம் கணக்கு கேட்பார்.
என்னையே உனக்கு
நற்கருணையாக கொடுத்தேனே !
நீ பெற்ற அனைத்து நற்கருணையையும்
வீணடித்து விட்டாயே !
உலகின் பாவங்களை போக்கும் என்னை உன்னிடத்தில் செயல்பட முடியாத கடவுளாக மாற்றிவிட்டாயே !
கடைசிவரை மனமாறாமலே உன் வாழ்க்கையை முடித்துவிட்டாயே !
என்ற வார்த்தைகளை கேட்கபோகின்றோமா ? சிந்திப்போம்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க.புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments
Post a Comment