Posts

Showing posts from June, 2021

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுளைப் பிரியப்படுத்தாத விஷயங்களில் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் என் வாழ்க்கையை வாழ்ந்ததால் நான் இறப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்." அர்ச்.கார்லோ அகுடிஸ் “I am happy to die because I have lived my life without wasting a minute on those things which do not please God.” St. Carlo Acutis  இயேசுவுக்கே புகழ் ! அன்னைமரியாயே வாழ்க!

ஒரே பாவம் அநேக நன்மைகளை இழக்கச் செய்யும்.

Image
  நாம் பல நாளும் பிரயாசைப்பட்டு தேடின புண்ணியங்கள் எல்லாம் ஒரே ஒரு பாவம் செய்த உடனே கெட்டுப்போகும்.சிறு வயது முதல் அரசனைச் சேவித்து வெகு திரவிய செல்வ வெகுமானங்களைப் பெற்ற ஒருவன்,அரசனுக்கு சதி,மோசத்துரோகம் செய்து சகல பாக்கியத்தையும்,உயிரையும் இழந்து போகிறது போல,நாம் செய்த தவம்,ஒருசந்தி உபவாசம்,செய்த தான தர்மங்கள்,பங்குபெற்ற பூசைகள் போன்ற அனைத்து புண்ணிய பலன்களை எல்லாம் இழந்து ஒன்றும் இல்லாதவனாய்ப் போய்விடுகிறோம். Rev.Fr.ஜோசப் பெஸ்கி(வீரமாமுனிவர்) இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க!

பாவத்தை விடாமல் கடவுளின் இரக்கத்தை பெறமுடியாது

Image
  கடவுளுக்கு அளவில்லாத இரக்கம் உண்டு.எனவே அவர் படைத்த ஆத்துமங்களை எப்படியும் மன்னிப்பார் நரகத்தில் தள்ளமாட்டார் என்று பலர் தங்கள் பாவ வாழ்வை விடாமலிருக்கிறார்கள்.இது எப்படிப்பட்டது என்றால்,தன் தகப்பன் பணக்காரன் என்று உடுத்திக்கொள்ளாமல்  நிர்வாணமாய் திரிகிறவனைப் போலவும்,ஆறுகள்,குளங்கள் மிகுதியாய் இருக்கின்றனவே என்று நினைத்து தாகத்துக்கு தண்ணீர் குடியாதவனை போலவும்,வாதநோயால் கைகால் முடங்கிய நிலையில் வைத்தியர்கள் மிகுதியாய் இருக்கிறார்களே அது போதுமென்று சிகிச்சை செய்து கொள்ளாதவனைப் போலவும் மடத்தனம் செய்கிறார்கள். கடவுள் பேரின்பக் கடலாகிய தயையுள்ளவராயிருக்கையில் அதை உணர்ந்து அனுபவிக்க அவரிடம் போக வேண்டாமா?மனந்திரும்பிப் பாவத்தை வெறுத்து நன்னெறியில் சேருகிற பாவிகளுக்கு இரங்குவார் என்பது சரி.ஆனால் மரணமட்டும் பாவத்தை விடாதவர்களை நீதிப் பிரகாரமாய் தீர்வையிட்டு நித்திய நரகத்திலே தள்ளுவார் என்பது தேவ வாக்கியத்தில் ஊன்றிய குன்றாத சத்தியமாமே. வீரமாமுனிவர். இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நாவில் நன்மை வாங்குவது அப்போஸ்தலிக்க பாரம்பரியமாகும்

Image
  திருச்சபையின் போதனைகள் நிலையானவை அவைக் காலத்திற்க்கும் சமயத்திற்க்கும் ஏற்றார் போல் மாறக்கூடிவை அல்ல. *திருச்சபை நமக்கு கற்பிப்பது* அர்ச்.முதலாம் சிக்ஸ்துஸ் பாப்பரசர்(115) "பரிசுத்த பூசை பாத்திரங்களை ஆண்டவருக்கு வசீகரிக்கப்பட்டவர்களை தவிர மற்றவர்கள் தொடவோ,கையாளவோ கூடாது." அர்ச்.பெரியபேசில்-திருச்சபையின் வேதபாரகர்(330-379) "கையில் நன்மை வாங்குவதை ஒரு ஒழுங்கீனம் என்றும்,அது மிகப்பெரிய தவறு. சாரகோசா பொதுச்சங்கம் (380) "கையில் திவ்விய நன்மை தொடர்ந்து வாங்கத் துணிபவர் எவரும் திருச்சபை விலக்கம் பெறுவர்.இக்கருத்தினை டோலிடோ சங்கம் (synod of Toledo) உறுதி செய்துள்ளது. ரோன் சங்கம்(650) "கையில் நன்மை வழங்கும் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் பரவுவதை நிறுத்தவும்,அவசங்கையிலிருந்து காக்கப்படவும் இப்பழக்கம் கண்டிக்கப்பட்டது. கான்ஸ்டாண்டி நோப்பிளில் நடந்த 6-வது பொதுச்சங்கம்.(680-681) "பரிசுத்த நன்மையை தங்கள் கைகளினால் விசுவாசிகள் வாங்குவது தடைசெய்யப்பட வேண்டும்.அத்தகையோரை திருச்சபை விலக்கம் மூலம் அச்சுறுத்தவேண்டும்." அர்ச்.தாமஸ் அக்வீனாஸ்(1225-1274) "சங்கை மரியா...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உலகை ஆளும் இராஜாவாக இருப்பதைவிட கடவுளின் பிள்ளையாக இருப்பது நல்லது. புனித அலோசியஸ் கோன்சாகா. It is better to be a child of God than king of the whole world!” St. Aloysius Gonzaga (1568-1591 )

ஒரே பாவத்தினால் சகலகேடும் வரும்போது அநேக பாவங்களை துணிந்து செய்வது ஏன்?

Image
  பிணம் நேரம் போகப்போக துர்நாற்றமாய் நாறிப் புழுவாய்ப் புழுத்து ஒருவரும் கிட்ட வராதபடி அருவருப்பு உண்டாகும்.அதேபோல பாவ ஆத்துமமானது பிணமாய்ப் போய் நாளுக்குநாள் துர்ச்செயல்கள் மிகுந்து,தலையான பாவங்களும் சூழ்ந்து,துர்நாற்றம் வீசி சர்வேசுரனுக்கும்,மோட்சவாசிகளுக்கும் அருவருக்கப்பட்டதாயிருக்கும்.இத்தனை கேடெல்லாம் ஒரு பாவத்தினாலே வருகிறதெனில் அநேக பாவங்களை செய்கிற உனக்கு எத்தனை கேடு மோசம் வருமென்று ஆழ்ந்து சிந்தித்துபார். Rev.Fr.ஜோசப் பெஸ்கி(வீரமாமுனிவர்) இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க!

தானம் தர்மம் செய்து புண்ணியங்களை சேர்ப்பது எப்போது ??

Image
கல்யாணம்,காட்சி,புகழ்,பெருமைக்கு உன் கையில் உள்ள பணமும் போதாமல் கடன் வாங்கியும் செலவழிக்கிறாய்.வீண் தியாகங்களுக்கும் குடி,சூது,பல விளையாட்டுக்கும் ஊதாரித்தனமாக செலவழித்து..,கோயில் காணிக்கைக்கும்,தான தர்மங்களுக்கும்,பிச்சைக்கும் கொடுக்கவே கதியில்லை என்று பின்வாங்கிப் போகிறாய்.உறவினர்,தோழர்,தலைவர்களை வெகு உபசாரம் செய்து வலிய விருந்துக்கு அழைக்கிறாய்.வயிறு எலும்போடு ஒட்டிப்போகப் பசித்துக் கிடக்ககிற பிச்சைக்காரனைக் கிட்டே வர விடாமல் துரத்திவிடுகிறாய். Rev.Fr.ஜோசப் பெஸ்கி(வீரமாமுனிவர்) இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க!  

ஆன்மாவை கண்டுக்கொள்வது எப்போது ??

Image
  சரீரத்தை அலங்கரிக்க ஒரு ஆடை போதாமல் உடுப்பு மேல் உடுப்பு,ஆபரணத்தின் மேல் ஆபரணம் அணிகிறாய்.உன் ஆத்துமத்தை அலங்கரிக்கிறதற்கு வேண்டிய நற்குணங்களையும்,திவ்விய நற்கருணையையும் தேடாதது ஏன்? வயிற்றுப் பசிக்குக் கஞ்சியும்,பருக்கையும் போதாதென்று பத்து வகை கறியும்,சோறும் தின்ன ஆசைப்படுகிறாய்.ஆத்துமப் பசிக்கு நீ அறிந்திருக்கிற மந்திரம் ஒன்றிடண்டே போதுமென்கிறாய். Rev.Fr.ஜோசப் பெஸ்கி(வீரமாமுனிவர்) இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க!

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மனம் விரும்பி பாவம் செய்கிறவன் கடவுளைப் பார்த்து இப்படிக் கூறுகிறான். "ஆண்டவரே,நான் செய்யப்போவது உம்மை நோகச்செய்தாலும் அதை நான் செய்யத்தான் செய்வேன்.நீர் என்னைப் பார்க்கிறீர்.இதை நான் செய்யக்கூடாது என்கிறீர்.ஆயினும் நான் என் இச்சைப்படிதான் நடப்பேன்.உம்முடைய சித்தப்படி நடிக்கமாட்டேன்". இதுபோல ஒரு சிறு காரியத்தில் ஒருவன் தேவ கட்டளையை மீறினாலும் அது கனமானது தான். அர்ச்.அவிலா தெரசம்மாள். இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க!

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒருவன் கடவுளை நோகச்செய்யக் கூடாது என்று கருதி பாவத்தையும், பாவசந்தர்ப்பத்தையும் திட்டமாக விட்டுவிடும் தன்மையே *தெய்வபயமாகும்*. தெய்வபயம் நம்மிடத்தில் நீடிப்பதற்கு பாவசந்தர்ப்பத்தை விலக்குவதில் உறுதியாக இருக்கவேண்டும். உதாரணமாக கெட்ட புத்தகத்தையோ, திரைப்படத்தையோ, கெட்ட நண்பனையோ நெருங்கமாட்டேன் என்று அவைகளிலிருந்து ஒதுங்கும் பழக்கத்தை திட மனதுடன் இருந்தால் மட்டுமே அவனிடம் *தெய்வபயம் நீடிக்கும்*. இப்படிப்பட்ட பாவ சந்தர்ப்பங்கள்,முன்பு நம்முடைய பாவத்துக்குக் காரணமாயிருந்தன.ஆனால் அவைகளை விலக்கி விடும் திடமனம் ஏற்பட்டிருந்தால் மட்டுமே பாவ சந்தர்ப்பங்கள் இப்பொழுது நமக்கு தெய்வபயம் என்னும் *புண்ணிய சந்தரப்பங்களாக மாறும்*. அர்ச.அவிலா தெரசம்மாள். இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க!

ஜெபமாலையின் மகிமைகள்

Image
  நாம் ஜெபமாலை ஜெபிப்பதை காண்பது உண்மையிலும் உண்மையாக ஆண்டவருக்கும் மாதாவுக்கும் பேரானந்தம் தரும் காரியமாக இருக்கிறது. கவனத்தோடும்,ஆர்வத்தோடும் ஜெபமாலை ஜெபிப்பவன் கடவுளும்,தேவமாதாவும் தான் மன்றாடிக் கேட்பவற்றை தரும்படி மிக இனிமையான முறையில் அவர்களை வற்புறுத்துகிறான். From the book of Holy Rosary . ஜெபமாலையை கையிலேயே எடுக்காத கத்தோலிக்க குடும்பங்கள் உணர்வது எப்போது??. இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க! புனித சூசையப்பர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சோதனை வருவதைப் பற்றி கவலைப்படலாகாது‌.நீதிமானே தினம் ஏழுமுறை தவறுகிறான் என்று வேத புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே.வீணாக உன்னை  அலட்டாதே உனது தவறுதல்களைத் தாழ்ச்சியுடனும் நேர்மையுடனும் குருவிடம் வெளியிடு. குற்றங்களை விலக்க..., விடாது முயன்று வா. நீ காயப்பபடா வண்ணம் கடவுள் பார்த்துக்கொள்வார். அர்ச.பிரான்சிஸ் சலேசியார். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சாவான பாவத்தோடு இரவில் படுக்கைக்குச் செல்லும் ஒரு அறிவாளியைவிட(சாவான பாவம் நரகத்தண்டனைக்குரியது)ஒரு அற்ப பாவத்தினாலும் கூட நமது ஆண்டவரை மனம் நோகச்செய்யக்கூடாது என்று மனஸ்தாபப்பட்டு இரவில் தூங்கச்செல்லும் படிப்பறிவில்லாதவன் சிறந்த புத்திசாலி ஆவான். அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சாத்தான் லூசிபர் 😈 தன் கூலிகளாகிய பசாசுக்களிடம்😈 மனிதர்கள் நம் ஜென்ம விரோதிகள் அவர்களைக் கெடுத்து நரகத்திற்கு கொண்டு வருவது தான் நம்முடைய தலையாய ஒரே நோக்கம்.நாம் அவனுக்கு விஷத்தை பகிரங்கமாக கொடுத்தால் அதை குடிக்கமாட்டான்.அதேபோல பாவத்தை பாவமாகக் காட்டினால் அதனை பற்றி எச்சரிக்கை கொள்வான்.பாவமும் செய்யமாட்டான்.ஆகவே பாவத்தின் அரோசிகத்தை காட்டாமல் மறைத்து அதை இன்பகரமாக காட்டினால் சுலபமாக ஏமாந்து போவான்.நமக்கு வெற்றி நிச்சயம் !" அர்ச்.இஞ்ஞாசியார் பசாசைப் பற்றி ஒரு உவமானமாக கூறியது. இயேசுவுக்கே புகழ்! அன்னை மாமரியாயே வாழ்க!

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சர்வேசுனிடத்தில் சர்வ சக்தியுடனும்,சர்வ உரிமையுடனும் பரிசுத்த தேவமாதா மட்டுமே பரிந்துரை செய்ய முடியும் என்பது சத்தியம்.ஆனாலும் அதே சர்வ சக்தியுடனும்,உரிமையுடனும் அரச்.சூசையப்பராலும் பரிந்து பேசமுடியும்.இதே போல் அன்று நம் ஆண்டவராகிய சேசு கிறீஸ்துவை சாவின் ஆபத்திலிருந்து அவர் காத்தது போல (மத்2:13)இன்று நம் அனைவரின் ஆன்மாக்களையும் ஆன்ம நோயிலிருந்து சேசுவையும்,தேவமாதாவையும் ஒவ்வொருவரிடமிருந்து பறித்துக்கொள்ளப் போராடும் பசாசுக்களிடமிருந்து அவர் பாதுகாத்து வருகிறார்.ஏனெனில் நமது ஆன்மவாழ்வுக்கும் அவரே பாதுகாவலராக இருக்கிறார். -திருத்தந்தை 11-ஆம் பத்திநாதர். அர்ச்.சூசைப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இயேசுவுக்கே புகழ்! அன்னை மாமரியாயே வாழ்க!

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒரே ஒரு பாவத்திற்குப் பிறகு,அதற்க்காக தன் வாழ்நாள் முழுவதும் மனஸ்தாபத்தில் கழிக்க வேண்டிய கிறிஸ்தவன் இவ்வுலக இன்பங்களை அனுபவிப்பதிலேயே கவனமாகயிருக்கிறான். அர்ச்.ஜான் மரிய வியான்னி

மங்கள வார்த்தையின் மகிமைகள்

Image
  மகனே! உலகம் முழுவதும் மீட்க்கப்பயன்பட்ட சம்மனசின் மங்கள வார்த்தையைச் சொல்வதில் வெறுப்பும், அசமந்தமும், அலட்சியமும் கொண்டிருப்பது நித்திய தண்டனையடைவதின் ஏறக்குறைய நிச்சயமான கடைசி அடையாளம் என்பதை நீயும் அறிந்துகொள்.மற்ற எல்லாருக்கும் அறிவிக்கவும் செய்வாயாக. முத்.ஆலனுக்கு தேவ அன்னை வெளிப்படுத்தியது. குடும்ப செபமாலை செபிக்கும்  குடும்பங்களில் அலகையின் ஆட்சி முடிவுக்கு வரும்.இறையாட்சி மலரும். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.