பாவத்தை விடாமல் கடவுளின் இரக்கத்தை பெறமுடியாது

 




கடவுளுக்கு அளவில்லாத இரக்கம் உண்டு.எனவே அவர் படைத்த ஆத்துமங்களை எப்படியும் மன்னிப்பார் நரகத்தில் தள்ளமாட்டார் என்று பலர் தங்கள் பாவ வாழ்வை விடாமலிருக்கிறார்கள்.இது எப்படிப்பட்டது என்றால்,தன் தகப்பன் பணக்காரன் என்று உடுத்திக்கொள்ளாமல்  நிர்வாணமாய் திரிகிறவனைப் போலவும்,ஆறுகள்,குளங்கள் மிகுதியாய் இருக்கின்றனவே என்று நினைத்து தாகத்துக்கு தண்ணீர் குடியாதவனை போலவும்,வாதநோயால் கைகால் முடங்கிய நிலையில் வைத்தியர்கள் மிகுதியாய் இருக்கிறார்களே அது போதுமென்று சிகிச்சை செய்து கொள்ளாதவனைப் போலவும் மடத்தனம் செய்கிறார்கள்.

கடவுள் பேரின்பக் கடலாகிய தயையுள்ளவராயிருக்கையில் அதை உணர்ந்து அனுபவிக்க அவரிடம் போக வேண்டாமா?மனந்திரும்பிப் பாவத்தை வெறுத்து நன்னெறியில் சேருகிற பாவிகளுக்கு இரங்குவார் என்பது சரி.ஆனால் மரணமட்டும் பாவத்தை விடாதவர்களை நீதிப் பிரகாரமாய் தீர்வையிட்டு நித்திய நரகத்திலே தள்ளுவார் என்பது தேவ வாக்கியத்தில் ஊன்றிய குன்றாத சத்தியமாமே.

வீரமாமுனிவர்.


இயேசுவுக்கே புகழ்!

அன்னை மரியாயே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!