நாவில் நன்மை வாங்குவது அப்போஸ்தலிக்க பாரம்பரியமாகும்
திருச்சபையின் போதனைகள் நிலையானவை அவைக் காலத்திற்க்கும் சமயத்திற்க்கும் ஏற்றார் போல் மாறக்கூடிவை அல்ல.
*திருச்சபை நமக்கு கற்பிப்பது*
அர்ச்.முதலாம் சிக்ஸ்துஸ் பாப்பரசர்(115)
"பரிசுத்த பூசை பாத்திரங்களை ஆண்டவருக்கு வசீகரிக்கப்பட்டவர்களை தவிர மற்றவர்கள் தொடவோ,கையாளவோ கூடாது."
அர்ச்.பெரியபேசில்-திருச்சபையின் வேதபாரகர்(330-379)
"கையில் நன்மை வாங்குவதை ஒரு ஒழுங்கீனம் என்றும்,அது மிகப்பெரிய தவறு.
சாரகோசா பொதுச்சங்கம் (380)
"கையில் திவ்விய நன்மை தொடர்ந்து வாங்கத் துணிபவர் எவரும் திருச்சபை விலக்கம் பெறுவர்.இக்கருத்தினை டோலிடோ சங்கம் (synod of Toledo) உறுதி செய்துள்ளது.
ரோன் சங்கம்(650)
"கையில் நன்மை வழங்கும் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் பரவுவதை நிறுத்தவும்,அவசங்கையிலிருந்து காக்கப்படவும் இப்பழக்கம் கண்டிக்கப்பட்டது.
கான்ஸ்டாண்டி நோப்பிளில் நடந்த 6-வது பொதுச்சங்கம்.(680-681)
"பரிசுத்த நன்மையை தங்கள் கைகளினால் விசுவாசிகள் வாங்குவது தடைசெய்யப்பட வேண்டும்.அத்தகையோரை திருச்சபை விலக்கம் மூலம் அச்சுறுத்தவேண்டும்."
அர்ச்.தாமஸ் அக்வீனாஸ்(1225-1274)
"சங்கை மரியாதை முன்னிட்டு இந்தத் தேவதிரவிய அனுமானத்தை(திவ்விய நற்கருணை நாதரை)அபிஷேகம் செய்யப்பட்டவர்களை தவிர வேறு எதுவும் தொடாதிருப்பதாக.இதனால் தான் திருமேனிகத்துகில்,பூசைப்பாத்திரம் ஆகியவை வசீகரிக்கப்பட்டுள்ளன. குருவின் கரங்களும்,இந்தத் தேவதிரவிய அனுமானத்தைத் தொடுவதற்காகவே வசீகரிக்கப்பட்டுள்ளன.
திரிதெந்தீன் பொதுச்சங்கம் (1545-1565)
"உண்மையாகவே குருக்கள் மட்டுமே திவ்விய நற்கருணையைத் தங்களுடைய வசீகரிக்கப்பட்ட கரங்களால் வழங்குவது அப்போஸ்தலிக்கப் பாரம்பரியமாகும்."
திருத்தந்தை அர்ச்.ஆறாம் சின்னப்பர்(1963-1978)
நாவில் நன்மை வாங்கும் முறை,பழக்கம் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று(Memorial Domini)
திருத்தந்தை அர்ச்.2-ஆம் அருள் சின்னப்பர் (1978-2005)
"பரிசுத்த பொருட்களை(திவ்விய நன்மைகளைத்) தொடுவதும் அவைகளைத் தங்கள் சொந்தக்கரங்களினால் வழங்குதலும் குருப்பட்டம் பெற்றோரின் ஒரு சலுகை".
- from Magizine The Fathima Crusader.
மிகவும் நயவஞ்சகமான கொடூரமான தாக்குதல் நற்கருணை மீதான நம்பிக்கையை அணைக்க முயற்சிப்பதில், பிழைகளை விதைப்பதன் மூலமும், அதைப் பெறுவதற்கான பொருத்தமற்ற வழியை வளர்ப்பதன் மூலமும் அடங்கும்.
கர்தினால் சாரா.
ஒரு நல்ல நோக்கத்தைக் குறிப்பிடுவதன் மூலம் ஒரு தீய செயலை நியாயப்படுத்த முடியாது ”(cf. செயின்ட் தாமஸ் அக்வினாஸ், டிசம்பர். 6). முடிவு வழிகளை நியாயப்படுத்தாது. (CCC-1759)
கொரோனா முன்னெச்சரிக்கையாக
*திவ்விய நற்கருணை நாவில் தரப்படமாட்டாது கையில் மட்டுமே திவ்விய நற்கருணை வழங்கப்படும்.
*திவ்விய நற்கருணை வழங்குவதற்கு முன்னும், வழங்கியப்பிறகும் அபிஷேகம் செய்யப்பட்ட குருக்களின் கரங்களை sanitizerகளால் கழுவ வேண்டும்,
திவ்விய நற்கருணை எழுந்தேற்றத்தின் போது முககவசம்,கையுறைகள் அணிவது,
திவ்விய நற்கருணையை இறைமக்களே தங்கள் கரங்களில் எடுத்து உட்கொள்ள அனுமதிப்பது,
இதுப்போன்ற திவ்விய நற்கருணை நாதரை அவசங்கப்படுத்தும் வழிமுறைகள் கத்தோலிக்க திருச்சபையின் எந்தசட்டத்திட்டத்தில் உள்ளது ?
திருச்சபையின் சட்டத்தில் இல்லாதவற்றை எம் பாசமிகு ஆயர்களும் குருக்களும் பின்பற்றுவது ஏனோ?
*சாத்தான் பரிசுத்த கன்னிகைக்கெதிராக ஒரு இறுதித் தீர்மானம் போரில் ஈடுபட எத்தனிக்கிறான்.தீர்மானப் போர் என்றால் அதிலே ஒரு பக்கம் ஜெயிக்கும் போது,மறுபக்கம் தோற்கும்.ஆகவே நாம் இதுமுதல் கட்சி பிரிந்தே ஆகவேண்டும்.ஒன்றில் நாம் கடவுளுக்காக அல்லது சாத்தானுக்காக இருப்போம் .வேறு வழிக்கு சாத்தியமில்லை.*
சகோதரி லூசியா (பாத்திமா காட்சி)
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment