ஒரே பாவத்தினால் சகலகேடும் வரும்போது அநேக பாவங்களை துணிந்து செய்வது ஏன்?
பிணம் நேரம் போகப்போக துர்நாற்றமாய் நாறிப் புழுவாய்ப் புழுத்து ஒருவரும் கிட்ட வராதபடி அருவருப்பு உண்டாகும்.அதேபோல பாவ ஆத்துமமானது பிணமாய்ப் போய் நாளுக்குநாள் துர்ச்செயல்கள் மிகுந்து,தலையான பாவங்களும் சூழ்ந்து,துர்நாற்றம் வீசி சர்வேசுரனுக்கும்,மோட்சவாசிகளுக்கும் அருவருக்கப்பட்டதாயிருக்கும்.இத்தனை கேடெல்லாம் ஒரு பாவத்தினாலே வருகிறதெனில் அநேக பாவங்களை செய்கிற உனக்கு எத்தனை கேடு மோசம் வருமென்று ஆழ்ந்து சிந்தித்துபார்.
Rev.Fr.ஜோசப் பெஸ்கி(வீரமாமுனிவர்)
இயேசுவுக்கே புகழ்!
அன்னை மரியாயே வாழ்க!

Comments
Post a Comment