ஒரே பாவம் அநேக நன்மைகளை இழக்கச் செய்யும்.
நாம் பல நாளும் பிரயாசைப்பட்டு தேடின புண்ணியங்கள் எல்லாம் ஒரே ஒரு பாவம் செய்த உடனே கெட்டுப்போகும்.சிறு வயது முதல் அரசனைச் சேவித்து வெகு திரவிய செல்வ வெகுமானங்களைப் பெற்ற ஒருவன்,அரசனுக்கு சதி,மோசத்துரோகம் செய்து சகல பாக்கியத்தையும்,உயிரையும் இழந்து போகிறது போல,நாம் செய்த தவம்,ஒருசந்தி உபவாசம்,செய்த தான தர்மங்கள்,பங்குபெற்ற பூசைகள் போன்ற அனைத்து புண்ணிய பலன்களை எல்லாம் இழந்து ஒன்றும் இல்லாதவனாய்ப் போய்விடுகிறோம்.
Rev.Fr.ஜோசப் பெஸ்கி(வீரமாமுனிவர்)
இயேசுவுக்கே புகழ்!
அன்னை மரியாயே வாழ்க!

Comments
Post a Comment