உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம்
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம். உதவி செய்பவர்கள்தான் உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்கள். ஆஸ்திரியா நாட்டில் படை வீரனொருவன் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் பேரில் வெகு அக்கறையும் இரக்கமும் கொண்டிருந்தான்.அதன் பொருட்டு அந்த ஆன்மாக்கள் மீட்பு பெற தர்மங்கள் செய்தான் கல்லறைகளை காணும்போதெலலாம் அவன் செபிக்க தவறியதில்லை. ஒரு நாள் அவ்வீரன் தனிமையில் வேறு ஊருக்கு பயணம் போகையில் வழியில் கண்ட பகைவர்கள் அவனை கொல்லத் துரத்தினார். பயந்த வீரன் வேகமாக ஓட வழியில் ஒரு கல்லறைத் தோட்டம் தெரிந்தது.கல்லறைகள் கண்டால் வழக்கமாக செபிக்கும் அவன் இப்போது யோசிக்கலானான்.."கல்லறை முன் நின்று நான் செபித்தால் துரத்த வரும் பகைவர்கள் என்னை பிடித்து கொன்று போடுவர்.ஆயினும் இந்த ஆன்மாக்களுக்காக செபிக்கிமால் என்னால் இருக்கவும் முடியாது.என்ன நேர்ந்தாலும் சரி உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களை நம்பி இங்கையே நின்று செபிப்பேன்".என்று தீர்மானித்தவனாய் செபிக்கத் தொடங்கினான். இப்படி அவன் கண்மூடி உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காக செபித்துக்கொணடிருக்கும் போது பகைவர...