உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம்
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம்.
உதவி செய்பவர்கள்தான் உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்கள்.
ஆஸ்திரியா நாட்டில் படை வீரனொருவன் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் பேரில் வெகு அக்கறையும் இரக்கமும் கொண்டிருந்தான்.அதன் பொருட்டு அந்த ஆன்மாக்கள் மீட்பு பெற தர்மங்கள் செய்தான் கல்லறைகளை காணும்போதெலலாம் அவன் செபிக்க தவறியதில்லை.
ஒரு நாள் அவ்வீரன் தனிமையில் வேறு ஊருக்கு பயணம் போகையில் வழியில் கண்ட பகைவர்கள் அவனை கொல்லத் துரத்தினார். பயந்த வீரன் வேகமாக ஓட வழியில் ஒரு கல்லறைத் தோட்டம் தெரிந்தது.கல்லறைகள் கண்டால் வழக்கமாக செபிக்கும் அவன் இப்போது யோசிக்கலானான்.."கல்லறை முன் நின்று நான் செபித்தால் துரத்த வரும் பகைவர்கள் என்னை பிடித்து கொன்று போடுவர்.ஆயினும் இந்த ஆன்மாக்களுக்காக செபிக்கிமால் என்னால் இருக்கவும் முடியாது.என்ன நேர்ந்தாலும் சரி உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களை நம்பி இங்கையே நின்று செபிப்பேன்".என்று தீர்மானித்தவனாய் செபிக்கத் தொடங்கினான்.
இப்படி அவன் கண்மூடி உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காக செபித்துக்கொணடிருக்கும் போது பகைவர்கள் அவனை சூழ்ந்து ஆயுதங்களால் அவனைக் கொல்ல முயன்ற நேரம் அநேக ஆன்மாக்கள் அங்கிருந்த கல்லறை வழியாக புறப்பட்டு வீரனை சுற்றி ஆயுதபாணிகளாக நின்றனர்.பகைவர்கள் பயந்து போயினர்.என்ன நடந்ததென்று தெரியாமல் குழம்பினான் வீரன்.உண்மையில் பகைவர்களின் கண்களுக்கு தெரிந்த ஆன்மாக்களின் தோற்றம் அவனுக்கு தெரியவில்லை.
பின்னொரு காலத்தில் எதரிகளோடு சமாதானமாகிவிட்ட வேளையில் அவர்கள் சொல்லும் போதுதான் இந்த உண்மை அவனுக்கு புரிந்தது.அவன் இதை கேட்டு மிகுந்த மகிழ்ச்சியுற்று,தான் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காக காட்டும் பக்தியையும் ,இரக்கத்தையும் அவர்களுக்காக விவரித்தான். இதைக் கேட்ட அவர்களுக்கும் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் பேரில் மிகுந்த பற்று உண்டாயிற்று.
கிறிஸ்தவர்களே !உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் பேரில் பக்தியாயிருக்கும் கிறிஸ்தவர்கள் பலர் மரணம்,கடின வியாதி ,பெருந்துன்பம்,வழக்குகள்,இவற்றால் தொல்லை படும்போது அந்த ஆன்மாக்கள் அவர்களை இத்தீமைகளிலிருந்து காத்து உதவினார்கள் என்பது உண்மை.
ஓ ஆதியும் அந்தமும் இல்லாத பரம பிதாவே ,நான் உமது தெய்வீக குமாரன் இயேசுவின் அதிமிக்க விலைமதிக்கப்படாத பரிசுத்த இரத்தத்தைக் கொண்டு இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது திவ்ய பலிப்பூசையின் பரிபூரண பலன்களை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற அனைத்து பரிசுத்த ஆன்மாக்களுக்காக ஒப்பக்கொடுப்பதோடு எல்லா இடங்களிலும் இருக்கும் பாவிகளுக்காகவும், உலகம் எத்திசையிலிருக்கும் பாவிகளுக்காகவும்,என் வீட்டிலிருக்கும் அனைவருக்காகவும் என் குடும்பத்திலிருக்கும் அனைவருக்காகவும் முழு
மன சம்மதத்துடன் ஒப்புக்கொடுக்கிறேன் .ஆமென்.

Comments
Post a Comment