உத்தரிக்கிற ஆன்மாக்களின் எச்சரிக்கைகள்


உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம்.

சில ஆன்மாக்கள் இவ்வுலக கடன்கள் தீருமட்டும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் கடுமையான துன்பம் அனுபவிக்கிறார்கள்!

ஆஸ்திரியா நாட்டில் அகுஸ்தீன் என்கிற இயேசு சபை குருவானவர் ஒருவர் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் பேரில் மிகவும் இறக்கமுடையவராய் இருந்ததால் ஒரு நாள் அவ்வூரைச் சார்ந்த இறந்த செல்வந்தன் ஒருவன் அவருக்கு தோன்றி உதவ கேட்டுக்கொண்டான்.நான் சில கடன்களைத் தீர்க்க வேண்டும் பலரிடம் கடன் வாங்கி அநேகரை ஏமாற்றினேன்.நகைகளை வாங்கினேன்.திருப்பி கொடுக்க முடிந்தும் கொடுக்காமல் ஏமாற்றினேன்.அதைத் தீர்க்கும் வரை என் உத்தரிக்கிற ஸ்தல வேதனைக்கு முடிவில்லை என்று கூறினான்.

குருவானவரை மடத்துக்கு வெளியே அழைத்துச்சென்று ஓரிடத்தில் பூமிக்குள் தான் புதைத்து வைத்திருந்த நகையையும்,பணத்தையும் பட்டுவாடா செய்ய வேண்டிய கொடுத்தவர்களின் பட்டியலையும் கொடுத்து கடனை தீர்க்க குருவானவர்தான் உதவ வேண்டும் என கெஞ்சி கூறி மறைந்து போனான்.அப்படியே குருவானவர் கடன் பட்டியலில் குறிந்திருந்தபடி பல கடன்காரகளுக்கும் கடனை திருப்பிச் செலுத்தினார்.

கடன் தீர்ந்து 8-ஆம் நாள் அந்த ஆன்மா மீண்டும் குருவானவருக்கு தோன்றி தனக்கு அவர் செய்த மாபெரும் உதவிகளு நன்றி கூறி "உம்முடைய உதவியால் தான் என் வேதனைகளை முடித்துக் கொண்டு மோட்சத்துக்குப் போகிறேன் அங்கே  உமக்காக ஆண்டவரிடம் கட்டாயம் செபிப்பேன் என்று கூறி மறைந்தது.

கிறிஸ்தவர்களே!நாம் இறந்த பிறகு நம் உறவினர்கள் ,பிள்ளைகள் அனைவரும் அவர்கள் பிழைக்க மட்டுமே வழியை  பார்பார்களேயொழிய ,நாம் வேண்டுமென்றே செய்த கடனை தீர்க்க முயற்சி செய்யமாட்டார்கள்.

ஆகவே நீங்கள் யாரிடம் கடன்பட்டிருந்தாலும்,சிறிய கடனோ,பெரிய கடனோ,யாரையும் ஏமாற்றும் நோக்கத்தில் இருந்தாலும் கடன் தீர்க்க வேண்டியதாக இருந்தால் பூமியில் வாழும்போதே அதை தீர்த்தவிடுங்கள் .இல்லாவிடில் உத்தரிக்கிற ஸ்தலத்தில் கடுமையான தண்டனை அனுபவிக்க வேண்டும்.

ஓ ஆதியும் அந்தமும் இல்லாத பரம பிதாவே ,நான் உமது தெய்வீக குமாரன் இயேசுவின் அதிமிக்க விலைமதிக்கப்படாத பரிசுத்த இரத்தத்தைக் கொண்டு இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது திவ்ய பலிப்பூசையின் பரிபூரண பலன்களை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற அனைத்து பரிசுத்த ஆன்மாக்களுக்காகவும் குறிப்பாக மண்ணுலக கடன் தீர்க்க முடியாமல் வேதனையுறும் ஆன்மாக்களுக்கு தீர்வு கிடைப்பதற்க்காக ஒப்பக்கொடுப்பதோடு எல்லா இடங்களிலும் இருக்கும் பாவிகளுக்காகவும், உலகம் எத்திசையிலிருக்கும் பாவிகளுக்காகவும்,என் வீட்டிலிருக்கும் அனைவருக்காகவும் என் குடும்பத்திலிருக்கும் அனைவருக்காகவும் முழு
மன சம்மதத்துடன் ஒப்புக்கொடுக்கிறேன் .ஆமென்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!