உத்தரிக்கிற ஆன்மாக்கள் புதுமைகள்



உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம்.

பிறர் நமக்கு செய்த தீமைகளை மன்னித்து நன்மை செய்யும் புண்ணியத்தை உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாவுக்கு ஒப்புக்கொடுத்தால் ஏற்படும் பெரும் நன்மை.

பொலோஞா என்ற நகரத்தில் உயர் குடியில் பிறந்த விதவைப் பெண் ஒருத்தி இருந்தாள்.அவளுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான்.அந்தத் தாய் தன் மகன் மேல் அளவற்ற பாசம் வைத்திருந்தாள்.ஒரு நாள் அந்த இளைஞன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது,கோபமும்,முரட்டுத்தனமும் கொண்ட படைவீரனொருவன் அவ்வழியே வந்து விளையாடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இடையூறு செய்தான்.
அப்பிள்ளைகளில் விதவை தாயின் மகன் கோபக்காரனாக இருந்ததால் அந்த வீரன் மேல் கோபம் கொண்டு அவனை திட்டினான்.மிகுந்த சினம் கொண்ட வீரன் தன் கையிலிருந்த ஆயுதத்தால் அவனைக் குத்த அந்த இளைஞனும் அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.அவன் இறந்ததை கண்டு அஞ்சிய வீரன் தான் காவலர்களிடம் அகபட்டுக் கொள்வோமே என்ற பயத்துடன் தப்பிப்பதற்க்காக இரத்தம் தோய்ந்த ஆயுதத்துடன் விதவை தாயின் வீட்டினுள் நுழைந்தான்.அப்பெண்தான் ,தன்னால் கொல்லப்பட்டவனின் தாய் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.தன்னிடம் அடைக்கலம் தேடி வந்திருக்கும் வீரன் தான் தன் மகனைக் கொன்றவன் என்பதை அறியாத அந்த தாயும்,காவலர்களுக்கு  பயந்து வந்து,தன்னிடம் கோபத்தில் ஒருவனை கொன்றுவிட்ட செய்தியை தெரிவித்து மன்றாடினார்.அவன்மீது இரக்கம் கொண்டவளாய் அந்த விதவைத்தாய் அவன் ஒளிந்துகொள்ள தன் வீட்டில் அனுமதியளித்தாள்.
  சற்று நேரத்திற்க்கு பின் கொலை செய்த வீரன் அந்த பெண்மணியின் வீட்டில் இருக்கிறானென்று காவலர்கள் அறிந்து அவனை தங்களிடம் ஒப்படைக்குமாறு கட்டளையிட்டனர்.அதற்க்கு அவள் சம்மதிக்கவில்லை‌.அவர்களோ "அம்மா உன் வீட்டில் நீ ஒளித்து வைத்திருப்பவன் தான் உன் மகனை கொன்றவன் என்றனர்.இதை கேட்டதும் தன் இதயமே வெடித்து போன்ற துயரத்தில் அவள் கணணீர்விட்டாள்.

அந்நேரம் தூய ஆவியின் வல்லமையால் எல்லாம் இறைவன் சித்தப்படி நடக்கிறது ,தீமை புரிந்தவர்களுக்கு பழிவாங்காமல் நன்மையே செய்யவேண்டும் என்ற வேத உண்மை நினைவுக்கு வர கொலைகாரனை அவள் காட்டிக் கொடுக்கவில்லை.இதனால் காவலர் சென்ற பிறகு சூரியன் மறைந்த பின்னர் அவனுக்கு எந்த ஆபத்தும் நேராதபடி இறந்த தன் மகன் பயன்படுத்தும் குதிரையையும்,வழி செலவுக்கு பணமும் கொடுத்து தப்பி போகுமாறு அறிவுறுத்தினாள்.

தீமை செய்தவனுக்கு நன்மை செய்த புண்ணியத்தை இறந்த தன் மகனின் ஆத்துமத்துக்காக அழுகையோடு வேண்டி செபித்தாள்.உடனே தன் மகன் அவளுக்கு தரிசனம் அளித்தான்.அவனுடைய முகம் சம்மனசுவின் முகம் போல் ஒளிர்ந்தது .அவன் சரீரத்தின் மேல் இருந்த தூய வெண்ணிடையில் ஏராளமான முத்துக்களும் ,இரத்தினங்களும் பதிக்கப்படிடருந்தன. அவன் கூறியது "என்னை பெற்றெடுத்த அன்னையே உனக்கொரு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன்.அழாதீர்கள்.துன்புறும் உம் இதயம் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும்.நீங்கள் என் பொருட்டு வேதனை கொள்ள வேண்டாம்.ஏனெனில் நான் மோட்ச பாக்கியம் உம்மால் அனுபவிக்கிறேன்.நான் கொல்லப்பட்டதுடன் என் ஆன்மா உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு  போக அங்கே என் பாவத்துக்காக பல ஆண்டுகள் உத்தரிக்க ஆண்டவர் எனக்கு கட்டளையிட்டார்.நல்ல வேளையாக நீங்கள் என்னை கொன்றவனை பழிவாங்காமல் அவனை மன்னித்து காப்பாற்றி அந்த மாபெரும் புண்ணியத்தை என் ஆன்மாவுக்கு ஒப்புக்கொடுத்ததால் ஆண்டவர் என்னை உத்தரிக்கிற ஸ்தலத்திலே வைக்காமல் மோட்ச பாக்கியத்தை அருளினார்" என்றான்.

கிறிஸ்தவர்களே ! எவராவது உங்கள் பேரில் பொய்யும், பொய்சாட்சியும் கூறி ,புரளியும் பேசி அநியாயம் செய்து அவமானத்தை வருவித்தால் அவரை பழிவாங்க வேண்டுமென்று உங்கள் மனம் துடிக்கும்.மாறாக அவர்களை பழிவாங்காமல் மனித்து ஆண்டவர் அவருக்கு பாக்கியத்தை கொடுக்க வேண்டிக்கொண்டு அப்புண்ணியத்தை உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு ஒப்புக்கொடுத்தால் நிச்சயம் அவருக்கு பெரும் நன்மையை கிடைக்கும். தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யும் புண்ணியத்தை ஆண்டவர் மிகவும் விரும்புகிறார்.சிலர் தங்களுக்கு பிறர் செய்யும் கெடுதல்களை  தாங்கள் பொறுத்துக் கொள்வதாக அடிக்கடி சொல்லி எங்கும் முறையிடுவார்கள்.உண்மையில் முழுதும் பொறுத்துக் கொள்வதாயிருந்தால்  அதை வெளியில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.அவர்களே இறைவனுக்கு ஏற்ற மக்கள்.

ஓ ஆதியும் அந்தமும் இல்லாத பரம பிதாவே ,நான் உமது தெய்வீக குமாரன் இயேசுவின் அதிமிக்க விலைமதிக்கப்படாத பரிசுத்த இரத்தத்தைக் கொண்டு இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது திவ்ய பலிப்பூசையின் பரிபூரண பலன்களை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற அனைத்து பரிசுத்த ஆன்மாக்களுக்காக ஒப்பக்கொடுப்பதோடு எல்லா இடங்களிலும் இருக்கும் பாவிகளுக்காகவும், உலகம் எத்திசையிலிருக்கும் பாவிகளுக்காகவும்,என் வீட்டிலிருக்கும் அனைவருக்காகவும் என் குடும்பத்திலிருக்கும் அனைவருக்காகவும் முழு
மன சம்மதத்துடன் ஒப்புக்கொடுக்கிறேன் .ஆமென்.

சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.



Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!