உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம்
உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாவின் தண்டனையை குறைக்க 10 வழிகள்
1.திருப்பலி ஒப்புக்கொடுத்தல்
2.திருப்பலி காணுதல்
3.தானதர்மம் செய்தல்
4.ஒருசந்தி,சுத்தபோசனம்
5,தபசு செய்தல்
6.பரிபூரண பலன்கள்
7.தனிபலன்கள்
8.உத்தரிக்கிற ஸ்தலம் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவது
9.சிலுவைபாதை செய்வத
10.செபமாலை செபிப்பது.
குடும்பத்தில் இறந்தவர்களுக்காகவும்,மரித்த நண்பர்களுக்காகவும் இந்த வழிகளை பக்தியோடு பின்பற்றுங்கள் உத்தரிக்கற ஆன்மாக்களின் விடுதலையும் தண்டனை குறைப்பும் நமது விசுவாச பக்தியிலையே உள்ளது என்பதை உணருங்கள்.நாம் இப்போது செபித்து உத்தரிக்கிற ஆன்மாக்களின் விடுதலைக்கு உதவி செய்யாவிட்டால்
நாம் இறந்த பிறகு உதவியற்றவர்களாய் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனையடைவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
திருச்சபை நவம்பர் மாதம் முழுவதும் உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுத்து செபிக்க அழைக்கிறது என்றால் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து திருச்சபையின் அழைப்பை ஏற்று நவம்பர் 2 ஆம் தேதி /நவம்பர் மாதம் மட்டும் செபித்து முடித்துவிடாமல் நமது வாழ்க்கை முடியும்வரை உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக சிறப்பாக செபித்து திருப்பலி ஒப்புக்கொடுப்பது ஒவ்வொரு கத்தோலிக்கர்களின் கடமை.
ஓ ஆதியும் அந்தமும் இல்லாத பரம பிதாவே ,நான் உமது தெய்வீக குமாரன் இயேசுவின் அதிமிக்க விலைமதிக்கப்படாத பரிசுத்த இரத்தத்தைக் கொண்டு இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது திவ்ய பலிப்பூசையின் பரிபூரண பலன்களை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற அனைத்து பரிசுத்த ஆன்மாக்களுக்காக ஒப்பக்கொடுப்பதோடு எல்லா இடங்களிலும் இருக்கும் பாவிகளுக்காகவும், உலகம் எத்திசையிலிருக்கும் பாவிகளுக்காகவும்,என் வீட்டிலிருக்கும் அனைவருக்காகவும் என் குடும்பத்திலிருக்கும் அனைவருக்காகவும் முழு
மன சம்மதத்துடன் ஒப்புக்கொடுக்கிறேன் .ஆமென்.

Comments
Post a Comment