உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கம் மாதம் 16/11/2019
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம்.
கிறிஸ்தவர்களே! உங்கள் தாய், தந்தை,கணவன்,மனைவி,பிள்ளைகள், குருக்கள்,கன்னியர்கள்,உயிரோடு வாழும்போது நிறைய புண்ணியங்களை செய்திருப்பதை நீங்கள் அறிந்திருந்தாலும் ,அவர்கள் மரித்த பிறகு நேரே மோட்சத்திற்க்கு போயிருப்பார்கள் என்று நினைக்கூடாது.ஒரு வேளை உத்தரிக்கிறஸ்தலம் போனாலும் அங்கே கொஞ்ச நாட்கள் மட்டுமே இருந்து மோட்ச்சத்திற்க்கு போவார்களென்று முடிவு கட்டவும் கூடாது.இப்படி தவறான எண்ணத்தோடு அந்த ஆன்மாக்களுக்கு திருப்பலி ஒப்புகொடுத்தல்,தர்மம்,ஒருசந்தி,வேண்டுதல்,வழியாக உதவி செய்யாமல் போனால் அவர்கள் வெகு வேதனை அனுபவிப்பார்கள் .ஒருவேளை நீங்கள் புண்ணிய செயல் செய்யும் ஆன்மா உத்தரிக்கிறஸ்தலத்திலே இல்லாதிருந்தால் உங்களால் குறிப்பிடப்படும் மற்ற ஆன்மாக்களுக்குப் போய் சேரும்.
இறந்து போன இவர் பூமியில் வாழும்போது அவர்களிடம் ஒரு பாவத்தையும் காணவில்லையே ,அவர்கள் எப்படி மோட்சம் போகாமல் இருப்பார்கள் என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டாம்.
பார்வையுள்ளவனும்,பார்வைபற்றவனும் காணாத, காண முடியாதவற்றை நல்ல கண்ணுற்றவன் காண்பான்.அவ்விதமே வாழும்போது தங்களிடத்திலும்,பிறரிடத்திலும் காணாத பாவங்களை ஆண்டவர் காண்கிறார்.
நாம் சாவான பாவத்தை செய்யாதிருந்தாலும் ,சிந்தனையாலும்,சொல்லாலும்,செயலாலும் தினந்தோறும் அநேக அற்ப பாவங்களை காட்டிக்கொள்ளக்கூடும்.தோராயமாக நாம் ஒருநாளைக்கு 10,20,30,60,80,வரை பாவங்களை செய்யும் நாம் மொத்தத்தில் நம் வாழ்வின் முடிவில் இலட்சக்கணக்கில் வருமல்லவா?நிலமை இப்படி இருக்கும்போது நமது உத்தரிக்கிற ஸ்தல கடனை தீர்ப்பது எப்போது?
புனித வின்சென்ட் பெரெரியார் கூறியுள்ளது-
ஒருவன் தான் செய்த ஒர் அற்பப் பாவத்திற்க்காக உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஒரு வருடம் இருக்க மற்றொருவன் ஒரு மாதம் இருக்க ,மற்றொருவன் தன் அற்ப பாவத்திற்க்காக 15 நாட்கள் உத்தரிக்கிறஸ்தலத்தில் இருக்க கடவுள் கட்டளையிடுவார் என்று வைத்துக்கொண்டால் பல லட்சம் பாவங்களை கட்டிக்கொண்ட நாம் எத்தனை வருடம் உத்தரிக்கிற ஸ்தல வேதனையை அனுபவிக்க வேண்டுமென்று நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.
எனவே உத்தரிக்கிறஸ்தல ஆன்மாக்களும்,நீங்களும் நீண்ட காலம் அங்கே இராதபடிக்கு உங்கள் வாழ்நாள் முழுக்க அதாவது சாகும் நாள் வரை இடைவிடாமல் அநேக புண்ணியங்களை செய்வது மட்டுமன்றி,நீங்கள் பாவங்களை செய்யாமலிருந்து உங்களை காத்துக்கொள்வதோடு ,முன் செய்த பாவங்களுக்காக மிகுந்த மனஸ்தாபபட்டு பரிகாரம் தேடுவதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.முன்னெச்சிரிக்கையோடு உங்களை காத்துக் கொள்வதே உத்தரிக்கிறஸ்தலத்து தண்டனையின் கடுமையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள பூலோகத்தில் வாழ்கின்ற காலங்களில் பாவத்தைவிடுத்து,தபசு முயற்சி செய்து வந்தால் உத்தரிக்கிற ஸ்தலத்து கடின தண்டனையிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளமுடியும்.
ஓ ஆதியும் அந்தமும் இல்லாத பரம பிதாவே ,நான் உமது தெய்வீக குமாரன் இயேசுவின் அதிமிக்க விலைமதிக்கப்படாத பரிசுத்த இரத்தத்தைக் கொண்டு இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது திவ்ய பலிப்பூசையின் பரிபூரண பலன்களை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற அனைத்து பரிசுத்த ஆன்மாக்களுக்காக குறிப்பாக கருக்கலைப்பு செய்யபட்ட ஆன்மாக்காளுக்காகவும் ஒப்பக்கொடுப்பதோடு எல்லா இடங்களிலும் இருக்கும் பாவிகளுக்காகவும், உலகம் எத்திசையிலிருக்கும் பாவிகளுக்காகவும்,என் வீட்டிலிருக்கும் அனைவருக்காகவும் என் குடும்பத்திலிருக்கும் அனைவருக்காகவும் முழு
மன சம்மதத்துடன் ஒப்புக்கொடுக்கிறேன் .ஆமென்.

Comments
Post a Comment