உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கம் மாதம் 12/11/2019
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம்.
கிறிஸ்தவர்களே! பூமியில் பெரும் பாவங்களை செய்துவிட்டு உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு சென்று பரிகாரம் தீர்த்துக்கொண்டு மோட்சம் போய் சேரலாம் என்று நீங்கள் கணக்குப் போடுவீர்களேயானால் ,அதை விட பெரிய முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது.ஏனேனில் உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஒரு நிமிட வேதனை பூமியில் ஓராண்டு வேதனைகளுக்குச் சமம். அவரவர் பாவ கணக்கிற்க்கு ஏற்ப்ப நெருப்பின் உத்தரிப்பு கூடக் குறைய இருக்கும்.உத்தரிக்ககற ஸ்தலத்தின் நெருப்பில் கொஞ்ச நேரம் துன்புறுவதைவிட, பூமியில் வாழ்நாள் முழுவதும் துன்பப்படுவது எவ்வளவோ மேலானது என்று பல புனிதர்கள் கூறியுள்ளார்கள்.
கன்னியாஸ்திரீயாய் வாழ்ந்த புனித மரிய மதலேன் தான் வாழும்போது இறைவனின் கட்டளைப்படியே உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளை கண்ணால் கண்ட அவர் ,உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைகளை பார்க்கும்போது நம் வேதசாட்சிகள் அனுபவித்த துன்பங்களெல்லாம் ஒன்றுமேயில்லை எனத் தோன்றுகிறது. வேதசாட்சிகளின் துன்பங்கள் ஏதேன் தோட்டத்து மகிழ்ச்சியென்றே கூறலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே அந்த தீயில் வெந்து காலவரையற்று,வேதனையுறுவதைவிட பூமியிலேயே நன்மையான வழியில் நடக்க முயற்சி செய்யுங்கள்.
ஓ ஆதியும் அந்தமும் இல்லாத பரம பிதாவே ,நான் உமது தெய்வீக குமாரன் இயேசுவின் அதிமிக்க விலைமதிக்கப்படாத பரிசுத்த இரத்தத்தைக் கொண்டு இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது திவ்ய பலிப்பூசையின் பரிபூரண பலன்களை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற அனைத்து பரிசுத்த ஆன்மாக்களுக்காக குறிப்பாக கருக்கலைப்பு செய்யபட்ட ஆன்மாக்காளுக்காகவும் ஒப்பக்கொடுப்பதோடு எல்லா இடங்களிலும் இருக்கும் பாவிகளுக்காகவும், உலகம் எத்திசையிலிருக்கும் பாவிகளுக்காகவும்,என் வீட்டிலிருக்கும் அனைவருக்காகவும் என் குடும்பத்திலிருக்கும் அனைவருக்காகவும் முழு
மன சம்மதத்துடன் ஒப்புக்கொடுக்கிறேன் .ஆமென்.
மன சம்மதத்துடன் ஒப்புக்கொடுக்கிறேன் .ஆமென்.

Comments
Post a Comment