உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கம் மாதம் 09/11/2019
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம்.
கிறிஸ்தவர்களே ! கர்ப்பத்தை மருந்தினால் கலைப்பதென்பது மிகக் கொடியது பாவம்,ஒரு மனிதனை கொல்வது பெரிய பாவமென்னும்போது ஒரு பாவமும் அறியாத சின்னஞ்சிறு சிசுவை அதன் தாயே கொல்வது என்பது மிகவும் கொடிய பாவம் செயல்.அரசாங்கம் அனுமதிப்பதால் சர்வசாதாரணமாக குற்ற உணர்வின்றி சிசு கொலை செய்தாலும் இறைவன் முன் குற்றவாளிகளே ,தண்டனைகுறியவர்களே!
ஞானஸ்நானம் பெறுவதற்க்கு முன் அதை கருவிலேயே அழிப்பதால் சிசு ஆன்மாவின் விண்க நுழவை தடைசெய்கிறீர்கள் இது மன்னிக்கமுடியாத பெரும்பாவமாகும்.
இப்படிப்பட்ட கொடிய மன்னிக்க முடியாத பாவம் செய்பவர்கள் தாங்கள் பயப்படுவதோடு இத்தகைய பாவத்துக்கு உதவியாக இருக்கும் மருத்துவர்களும் அஞ்ச வேண்டும் .சிலர் கருக்கலைப்புக்கு மருந்து கொடுப்பார்கள் சிலர் அம்மருந்து பற்றி தங்களுக்கு தெரியாதென்றாலும் ,தெரிந்தவர்களை அடையாளம் காட்டுவார்கள் .யார் இந்த பாவத்துக்கு சிறு உதவி செய்தாலும் இறைவன் முன் பெரும் குற்றவாளிகளே.
சிசு கொலையாளிகளே மனம்வருந்துங்கள் ,மருத்துவத்தை சிசு கொலைக்கு பயன்படுத்தி மருத்துவத்தின் புனிதத்தை இழந்த மருத்துவர்களே மனமாருங்கள்!கொலைக்கு பரிகாரங்களை செய்து இறைவனின் தண்டனையை குறைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
கருக்கலைப்பு செய்யபட்ட உருவமற்ற சதை பிண்டங்களாக்கப்பட்ட அனைத்து ஆன்மாக்களின் நித்திய இளைபாற்றிக்காக செபிப்போம் .
ஓ ஆதியும் அந்தமும் இல்லாத பரம பிதாவே ,நான் உமது தெய்வீக குமாரன் இயேசுவின் அதிமிக்க விலைமதிக்கப்படாத பரிசுத்த இரத்தத்தைக் கொண்டு இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது திவ்ய பலிப்பூசையின் பரிபூரண பலன்களை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற அனைத்து பரிசுத்த ஆன்மாக்களுக்காக குறிப்பாக கருக்கலைப்பு செய்யபட்ட ஆன்மாக்காளுக்காகவும் ஒப்பக்கொடுப்பதோடு எல்லா இடங்களிலும் இருக்கும் பாவிகளுக்காகவும், உலகம் எத்திசையிலிருக்கும் பாவிகளுக்காகவும்,என் வீட்டிலிருக்கும் அனைவருக்காகவும் என் குடும்பத்திலிருக்கும் அனைவருக்காகவும் முழு
மன சம்மதத்துடன் ஒப்புக்கொடுக்கிறேன் .ஆமென்.

Comments
Post a Comment