உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம் 19/011/2019
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம்.
பூமியில் இருக்கிற துயரங்களை விட கடுமையான வேதனைகளைவிட உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பினால் ஏற்படும் வேதனை மிகக் கொடியது என்கிறார் புனித அகுஸ்தினார்.
ஆஸ்திரியா நாட்டில் ஒரு மடத்தில் இருந்த இரண்டு குருக்கள் தங்களுக்குள்ளே வெகு நட்பாயிருந்து பல புண்ணிய காரியங்களை செய்து புனிதர்களை போலவே வாழ்ந்தனர்.இவ்விருவரில் ஒருவர் ஒருநாள் நோய்வாய்ப்பட்டு அவதிப்படும் நேரம்.அவருடைய காவல் சம்மனசு அவருக்கு தோன்றி "அவர் சற்று நேரத்தில் இறந்து போவது மட்டுமல்லாமல்,அவருடைய அற்பப் பாவங்களுக்கு தண்டனை பெற உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பில் வாடும் போது அவருக்காக வேறு ஒரு குருவானவர் திருப்பலி ஒப்புக்கொடுக்கும்வரை உத்தரிக்கிற ஸ்தலத்து துன்பம் தொடரும் என்றும் திருப்பலி ஒப்புக்கொடுத்த பிறகு அவர் மோட்சத்துககு போய்விடுவார் என்றும் கூறி மறைந்தார்.
படுக்கையில் இறந்த குருவானவர் தன் நண்பராயிருக்கும் குருவானவரை வரவழைத்து நடந்த நிகழ்ச்சியை கூறி தாம் இறந்தவுடன் தாமதமின்றி உடனே ஒரு திருப்பலி நிறைவேற்றி தன் ஆன்மாவுக்காக ஒப்புக்கொடுக்கும்படி வேண்டினார்.நண்பர் குருவானவரும் சம்மதித்தார்.
மறுநாள் காலையில் நோயிலிருந்த குருவானவர் மரணமடைய அவரை கல்லறையில் அடக்கம் பண்ணுவதற்க்குள்,அவர் நண்பரான குருவானவர் உடனடியாக ஆலயத்தில் அவருக்காக திருப்பலி நிறைவேற்றி ஒப்புக்கொடுத்தார்.திருப்பலி முடிந்ததும் ஆலயத்தில் அவர் செபித்துக் கொண்டிருந்தபோது,இறந்த குருவானவரின் ஆன்மா அவரிடம் தோன்றி வருத்தத்தோடு பேசியது "நண்பரே உம்முடைய நட்பு என்னவானது ?நீர் ஏன் என் பெயரில் இரக்கமில்லாமல் போனீர்.?என்று கேட்க திகைப்படைந்த குருவானவர் "ஏன் இப்படிச் சொல்கிறீர்?என்று வினவ,இறந்த ஆன்மா பதிலாக " நான் இறந்தவுடன் எனக்காக உடனே திருப்பலி ஒப்பக்கொடுப்பேன் என வாக்கு கொடுத்ததை நீர் நிறைவேற்றாமல் நான் இறந்து ஒர் ஆண்டுக்குப் பின் திருப்பலி ஒப்பக்கொடுத்தீர்,இப்படி தவறவிட்டதால், உம்மால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் நான் ஒரு வருட காலம் கொடிய வேதனை அனுபவித்தேன்.என்று துயரத்தோடு கூறினார்.
குருவானவர் மறுமொழியாக "அது எப்படி இன்றைக்குதான் நீர் இறந்தீர்.இன்னமும் உமது உடலை கல்லறைக்கு கூட கொண்டு போகவில்லையே.உன் உயிர் பிரிந்தவுடனேயே ஆலயத்துக்கு சென்று திருப்பலி நிறைவேற்றி ஒப்புக்கொடுத்தேன். உண்மை இவ்விதமிருக்க,ஓராண்டுக்கு பிறகே நான் திருப்பலி நிறைவேற்றியதாக நீர் கூறுவது
எப்படி ? என்றார்.
இறந்த குருவானவர்"உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனை கொடுமையாக இருக்கிறதால் கொஞ்ச நேரம் கூட அநேக ஆண்டுகள் போலத் தெரிகிறது.நான் இறந்து சிறிது நேரத்தை உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஒரு வருடம் என்று எண்ணினேன்.ஆனால் நீ எனக்காக ஒப்பக்கொடுத்த திருப்பலியால் என் வேதனையெல்லாம் தீர்ந்தது.இப்போது நான் மோட்சம் போகிறேன்.எனக்கு நன்மை கிடைக்க உதவிய உமக்காக மோட்ச்சத்தில் எப்போதும் நான் தொடர்ந்து ஆண்டவரை வேண்டுவேன் " என்று மகிழ்ச்சியோடு கூறியவராய் மோட்ச்சத்திற்க்கு சென்றார்.
கிறிஸ்தவர்களே! மரித்த அந்தத் குருவானருக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்த சிறிது நேரம் கூட ஒரு வருடம் போல் தோன்றியது,அப்படியென்றால் நாம் நமது பாவத்தினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் அநேக காலம் இருக்க நேர்ந்தால்,அந்த வேதனையினால் ஒரு வருடம் கூட ஆயிரம் வருடம் போலத் தோன்றும்.எனவே இப்போதே பாவம் செய்யாதிருப்பதோடு மட்டுமில்லாமல் செய்த பாவங்களுக்காக இப்பொழுது இருந்தே பரிகாரம் செய்துவர ஆரம்பிப்போம்.
ஓ ஆதியும் அந்தமும் இல்லாத பரம பிதாவே ,நான் உமது தெய்வீக குமாரன் இயேசுவின் அதிமிக்க விலைமதிக்கப்படாத பரிசுத்த இரத்தத்தைக் கொண்டு இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது திவ்ய பலிப்பூசையின் பரிபூரண பலன்களை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற அனைத்து பரிசுத்த ஆன்மாக்களுக்காக ஒப்பக்கொடுப்பதோடு எல்லா இடங்களிலும் இருக்கும் பாவிகளுக்காகவும், உலகம் எத்திசையிலிருக்கும் பாவிகளுக்காகவும்,என் வீட்டிலிருக்கும் அனைவருக்காகவும் என் குடும்பத்திலிருக்கும் அனைவருக்காகவும் முழு
மன சம்மதத்துடன் ஒப்புக்கொடுக்கிறேன் .ஆமென்.

Comments
Post a Comment