உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கம் மாதம் 11/11/2019

ஆண்டவர் ஏழைகளுக்கு உதவுவதற்கென்றே அநேக மனிதர்களுக்கு செல்வத்தை அளித்திருப்பதைப் போல உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்கு உதவுவதுற்கென்றே பூமியிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு பலவகை புண்ணிய வழிகளை அருளியிருக்கிறார். நல்ல செல்வந்தர்களின் உதவியில்லாவிட்டால் ஏழைகள் துயருறுவதுபோல் உலகிலுள்ள கிறிஸ்தவர்கள் உதவியில்லாவிட்டால் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் நெருப்பிலே மிகவும் வேதனை அனுபவிக்க வேண்டியதிருக்கும்.

இம்மண்ணுலகில் பல செல்வந்தர்கள் ஏழைகள் மேல் சிறிதளவேனும் இரக்கம் காட்டாதவர்களாய் இருக்கிறார்கள்.அவர்களை போலல்லாமல் நாம் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் மீது பக்தியும் இரக்கமும் ஏற்படுவதற்க்கு வழி தேடுவோம்.

இறந்த ஆன்மாக்கள் பேரில் இரக்கமாயிருந்து அவர்களுக்காக பூசை கண்டு ஒப்புக்கொடுத்தல் ,செய்யும் தர்மங்களினாலும் வேண்டுதல்களினாலும் நாமும் உதவமுடியும் .இப்படிப்பட்ட உதவிகளால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் வாடும் அவர்களுடைய துன்பத்துக்கும் முடிவு வரும். அந்த ஆன்மாக்காளும் நன்றி மறக்கமாட்டார்கள். அந்த ஆன்மாக்காளுக்காக நாம் செய்யும் தர்மங்களாலும் வேண்டுதல்களாலும் அந்த ஆன்மாக்கள் மோட்சம் போனபின்
நீங்கள் கட்டாயம் மோட்சம் சேர உங்களுக்காகவிடாது ஆண்டவரிடம் பரிந்துரைப்பார்கள் என்பது உண்மை.

ஓ ஆதியும் அந்தமும் இல்லாத பரம பிதாவே ,நான் உமது தெய்வீக குமாரன் இயேசுவின் அதிமிக்க விலைமதிக்கப்படாத பரிசுத்த இரத்தத்தைக் கொண்டு இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது திவ்ய பலிப்பூசையின் பரிபூரண பலன்களை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற அனைத்து பரிசுத்த ஆன்மாக்களுக்காக குறிப்பாக கருக்கலைப்பு செய்யபட்ட ஆன்மாக்காளுக்காகவும் ஒப்பக்கொடுப்பதோடு எல்லா இடங்களிலும் இருக்கும் பாவிகளுக்காகவும், உலகம் எத்திசையிலிருக்கும் பாவிகளுக்காகவும்,என் வீட்டிலிருக்கும் அனைவருக்காகவும் என் குடும்பத்திலிருக்கும் அனைவருக்காகவும் முழு
மன சம்மதத்துடன் ஒப்புக்கொடுக்கிறேன் .ஆமென்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!