உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கம் மாதம் 14/11/2019
பிரிந்த சபையினரும் ஒருசில கத்தோலிக்கர்களும்,விவிலியத்தில் உத்தரிக்கிற ஸ்தலம் என்ற சொல் இல்லவே இல்லை என்று வாதிடுவார்கள்.விவிலியம் ஆதியிலே வாய்மொழியாகதான் வந்தது.பிறகுதான் எழுதப்பட்டது.கத்தோலிக்க பாரம்பரியத்தில் உத்தரிக்கும் ஸ்தலத்தை பற்றிய படிப்பினை ஆதி முதல் இருந்து வந்துள்ளது. உதாரணமாக பழைய ஏற்பாட்டில் 2 மக்கபேயர் 12:45 கூறுவதாவது :."ஆகவே இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி ,அவர் அவர்களுக்காக பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுத்தார்."மேலும்
லூக்கா 16:1-8
"அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: ``செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது.
தலைவர் அவரைக் கூப்பிட்டு, `உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது' என்று அவரிடம் கூறினார்.
அந்த வீட்டுப் பொறுப்பாளர், `நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப்போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.
பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார்.
முதலாவது வந்தவரிடம், `நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், `நூறு குடம் எண்ணெய்' என்றார்.
வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், `இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்' என்றார்.
பின்பு அடுத்தவரிடம், `நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், `நூறு மூடை கோதுமை' என்றார்.
அவர், `இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார்.
நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார்.
ஏனெனில், ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.''
மேலும் வாசிக்க உத்தரிக்கிற ஆன்மாக்கள் பற்றிய வேதாகம குறிப்புகள்.
ரூத் 2:20
மத்தேயு 5:25-26
மத்தேயு 12-32
1கொரி 3-15
1யோவான் 16-17
உத்தரிக்கும் ஸ்தலம் என்பது நாம் உலகில் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்யும் ஒரு நிலை.இது இரக்கம் நிறைந்த கடவுளின் மாபெரும் கொடை.மனித பலவீனத்தை அறிந்து,மனிதர்களின் இறப்புக்குப் பின் ,அவர்களுடைய ஆத்துமாக்களை தமது தேவ சிநேகா தூய்மையை அவை அடைந்ததும் ,தமது மோட்ச இராச்சியத்தில் ஏற்றுக்கொள்ளக் திருவுளம் கொண்ட இறைத் தந்தையை நாம் அளவற்ற நன்றியோடும்,நேசத்தோடும் வாழ்த்தி போற்றுவோமாக.
இந்த தற்காலிகமான நிலையில் அற்ப பாவம் செய்தவர்கள் கூட மிகக்கொடிய வேதனை கையை அனுபவிக்க வேண்டும்.காரணம் "நான் பரிசுத்தராய் இருப்பதுபோல் நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் (லேவி 19:2) என்று கடவுள் கூறுகிறார்.கடவுளைபோல பரிசுத்தராய் இருப்பவர் யார்?யாருமில்லை என்பதை உணர்ந்து, அவர் வாழும் மோட்சத்தில் நுழைய தகதியற்ற பாவிகளாகிய நாம் உத்தரிக்கிற ஸ்தலத்திலே ஆக்கினியாலேயும்,தாங்கிக்கொள்ள முடியாத வேதனையாகளாலும் சுத்திகரிக்கப்பட்டு இறைவன் விருப்பத்தினாலே மோட்சம் செல்ல தகுதி பெறுகிறோம்.

Comments
Post a Comment