உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம்.
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம்.
கிறிஸ்தவர்களே! அநேகர் இறந்துபோன தங்கள் தாய் தந்தையர்,கணவன்,மனைவி,சகோதர,சகோதரிகளை குறித்து ஒரு வருடத்தில் ஒரு பலி பூசை செய்வித்து,அவர்கள் பிறந்தநாளில் பிச்சைக்கார்களுக்கு சோறு கொடுத்து போதுமென்று அசட்டையாய் இருப்பார்கள்.
ஒரு சமயம் இறந்தவர்களின் பிள்ளைகள் கனமான நெருப்பு பிடித்து அவர்களைச் சுற்றி அழுது துடிக்கும்போது ஒரே ஒரு குடம் தண்ணீர் தெளித்தால் போதுமா? அல்லது நிறைய தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைக்க முற்படுவார்களா?சற்று சிந்தியுங்கள்.தாய்,தந்தை மற்றும் இறந்த ஆன்மாக்களை பற்றி கவலைப்படாமல் நன்றி கெட்டதனமாய் வருடத்தில் ஒரு பலிப்பூசை மற்றும் பிச்சைக்கார்களுக்கு ஒரு நாளைக்கு சோறு போட்டால் போதுமா?
கிறிஸ்தவர்களே !சற்றே சிந்தியுங்கள்.உங்கள் கடமையைச் செய்யுங்கள் ன.தினமும் ஞானத்தண்ணீராகிய அநேக தர்மங்கள்,திவ்விய பலிபூசை கண்டு,செபமாலை சொல்லி அவர்கள் ஆன்மாக்களுக்கு உதவி செய்ய வேண்டியது அவசியம்.அப்பொழுதுதான் உங்கள் பிள்ளைகளும் உங்களுக்கு உதவுவார்கள்.
ஓ ஆதியும் அந்தமும் இல்லாத பரம பிதாவே ,நான் உமது தெய்வீக குமாரன் இயேசுவின் அதிமிக்க விலைமதிக்கப்படாத பரிசுத்த இரத்தத்தைக் கொண்டு இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது திவ்ய பலிப்பூசையின் பரிபூரண பலன்களை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற அனைத்து பரிசுத்த ஆன்மாக்களுக்காக ஒப்பக்கொடுப்பதோடு எல்லா இடங்களிலும் இருக்கும் பாவிகளுக்காகவும், உலகம் எத்திசையிலிருக்கும் பாவிகளுக்காகவும்,என் வீட்டிலிருக்கும் அனைவருக்காகவும் என் குடும்பத்திலிருக்கும் அனைவருக்காகவும் முழு
மன சம்மதத்துடன் ஒப்புக்கொடுக்கிறேன் .ஆமென்.

Comments
Post a Comment