உத்தரிக்ககும் ஆன்மாக்கள் வணக்கமாதம்
அநேகர் தம் பெற்றோர்கள்,கணவன்,மனைவி, உறவினர்கள் ,நண்பர்கள் இறக்கும்போது அழுது அரற்றுவதோடு சரி,அதன்பின் அவர்களைப் பற்றி நினைப்பது மில்லை , அவர்களின் ஆன்மா நலனுக்காக வேண்டிக் கொள்வது மில்லை.உங்களுடைய அழுகையினால் அந்த ஆன்மாவுக்கு என்ன பயன்? நீங்கள் உண்மையாகவே அவர்களை நேசித்தால், நேசித்திருந்தால் அவர்களிடம் பலனடைந்திருந்தால் கண்ணீரை விட அவர்களுக்காக, அவர்கள் ஆன்ம இளைபாற்றிக்காக பலிபூசை ஒப்புக்கொடுத்து,தான தர்மங்கள் யாருக்கும் தெரியாமல் பலனை இறந்த ஆன்மாவிற்க்கு ஒப்புக்கொடுப்பது ,ஒரு சந்தி சுத்தபோனம் கடைபிடித்தல் செபமாலை சொல்வது இறந்தவர்களுக்கு நாம் செய்யும் கடமை.
ஓ ஆதியும் அந்தமும் இல்லாத பரம பிதாவே ,நான் உமது தெய்வீக குமாரன் இயேசுவின் அதிமிக்க விலைமதிக்கப்படாத பரிசுத்த இரத்தத்தைக் கொண்டு இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது திவ்ய பலிப்பூசையின் பரிபூரண பலன்களை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற அனைத்து பரிசுத்த ஆன்மாக்களுக்காக ஒப்பக்கொடுப்பதோடு எல்லா இடங்களிலும் இருக்கும் பாவிகளுக்காகவும், உலகம் எத்திசையிலிருக்கும் பாவிகளுக்காகவும்,என் வீட்டிலிருக்கும் அனைவருக்காகவும் என் குடும்பத்திலிருக்கும் அனைவருக்காகவும் முழு
மன சம்மதத்துடன் ஒப்புக்கொடுக்கிறேன் .ஆமென்.

Comments
Post a Comment