உத்தரிக்கிற ஆன்மாக்களின் எச்சரிக்கைகள்
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம்.
*அடுத்தவருடைய மோக பார்வை என்மீது விழும்படி என்னை நானே அழகுப்படுத்திக்கொண்டதால் உத்தரிக்கும் ஸ்தலத்திலே கடுமையான வேதனை அனுபவிக்கிறேன்.*
ஆண்டவர் புனித பிரிஜித்தம்மாளுக்கு உத்தரிக்கிற ஆன்மாக்கள் பேரில் அதிக பக்தியை ஏற்படுத்த அந்த ஆன்மாக்களை குறித்து பல காட்சிகளை அவருக்கு வெளிப்படுத்தினார் .அவர் ஒருமுறை தியானத்தில் இருந்தபோது
உயர் குடும்பத்தில் பிறந்த ஒர் இளம்பெண் தன் தாயை குறித்து குற்றம் சாட்டி அழுது காட்சி கண்டார்.
என்னை பெற்ற தாயே உம்மால்தான் நான் இவ்வளவு வேதனைகளை உத்தரிக்கிற ஸ்தலத்தில் அனுபவிக்கிறேன்.நீர் என்மீது அளவற்ற பாசம் வைத்து என் ஆசைகளுக்கெல்லாம் இடம் கொடுத்து என்னை அழகுபடுத்திக் காட்டும் ஆடம்பர பொருட்களையெல்லாம் வாங்க அதிக பணம் செலவழித்தீர்.திருமணம் முதலிய பொது நிகழ்ச்சிகளுக்கு என்னை அடிக்கடி அழைத்து போய் என்னை காட்சி பொருளாக்கினீர்.நான் புண்ணிய வழியில் நடக்க எனக்கு கற்பிக்காமல் பாவச்செயல்களால் என் ஆன்மா மோசமடைய வழிகாட்டினீர்.நல்ல வேளையாக நான் இயேசுநாதர் பட்ட பாடுகளின் பேரில் பக்தியாயிருந்து இறக்கும் தறுவாயில் என் பாவத்திற்க்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டதால் நான் நரகத்துக்கு போகாமால் தப்பினேன்.ஆனாலும் என் பாவங்களை தீர்க்க உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பிலே விழுந்து மிகுந்த வேதனை அனுபவிக்கிறேன்.
நான் வாழும் காலத்தில் என் கூந்தலை விதவிதமாய் அலங்கரித்து அதிலே அணிகலன்கள் மலர்களை வைத்து அழகுபடுத்தினேன்.இப்போதோ என் தலையிலே நெருப்பு அம்பு குத்துவதால் மிகுந்த வேதனை அடைகிறேன். நான் வாழுப்போது அடுத்தவருடைய மோக பார்வை என்மீது விழும்படி நடந்ததால் அதற்க்கு பரிகாரமாக என் மார்பிலே நெருப்பாணிகள் அறைப்பட்டிருக்கின்றன .பாசச் சிந்தனையோடு என் இரண்டு கரங்களிலும் வளையல்களை அடுக்கினேன் இப்போதோ நெருப்பு வளையங்களே எனக்கு கை வளையல்களாகி என்னை துன்புறுத்துகின்றன.என் கால்களை அழகுபடுத்த நான் அணிந்த அணிகலன்களுக்கு பதிலாக இங்கு அக்கினிப் பாம்புகள் என் கால்களை சுற்றி கொண்டிருக்கின்றன.இப்பாவங்களை செய்தது உண்மைதான் ஆனால் இவற்றை செய்ய என்னைத் தடுக்காமல் ஊக்குவித்தது என் தாய்தான் .இப்போதும் என்னைப்பற்றி நினைக்காமல் என் விடுதலைக்காக செபிக்காமல் இருப்பதால் நான் மிகுந்த வேதனை அடைகிறேன் என்று அழுது முறையிட்டாள்.
இதை கேட்ட புனித பிரிஜித்தம்மாள் அப்பெண்ணின் ஆன்மாவுக்காக திருப்பலி ஒப்புக்கொடுத்து,ஒரு சந்தி, தர்மம் புண்ணியங்களை செய்து மோட்சம் செல்ல உதவி புரிந்தார்.மேலும் இறந்த அப்பெண் போலவே வழிதடுமாறி வாழும் அவளுடைய தங்கையைச் சந்தித்து அவருடைய சகோதரி குறித்து தாம் கண்ட தரிசனத்தையெல்லாம் அந்தத் தங்கைக்கு வெளிப்படுத்தினார்.
பயந்தும் போன அவள் தன் அக்காவுக்கு ஏற்பட்ட கதி தனக்கும் ஏற்படாதபடி பூமியுலுள்ள செல்வங்கள்,இன்பங்கள் அனைத்தையும் ஒதுக்கி மடத்தில் சேர்ந்து கன்னியராகி சாகும் மட்டும் பாவத்திற்க்கு பரிகாரம் செய்தாள்.
கிறிஸ்தவர்களே! சில பெற்றோர்கள் சினிமா, திருவிழாக்கள்,திருமணம்,வீணாக பொழுதுபோக்கும் இடங்களுக்கு அழைத்துப்போய் அவர்கள் மனங்களை கெடுக்கிறார்கள்.செல்லுமிடங்களில் ஏற்படும் தவறான தூண்டுதலினால் பிள்ளைகள் புத்தி கெட்டு போகின்றனர்.
குழந்தைகளுக்கு,ஒப்புரவு,திவ்வியநற்கருணை ,திருப்பலி,செபமாலை போன்ற ஆன்ம உணவை ஊட்டாமல் ,உலக போக்கில் வளர்த்து வரும் ஒவ்வொரு பெற்றோர்களும் மனம்திருந்த வேண்டும்.நாம் செய்யும் பாவ சுமையோடு நமது பிள்ளைகளை இறை ஒழுக்கத்தில் வளர்க்க தவறவிட்ட பாவசுமையும் சேரந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.இறைவனின் பிள்ளைகளை பெற்றோர்களாகிய நாம் இறை ஒழுக்கத்தோடு வளர்த்து இறைவனிடம் ஒப்படைப்பதே நமது கடமை.
ஓ ஆதியும் அந்தமும் இல்லாத பரம பிதாவே ,நான் உமது தெய்வீக குமாரன் இயேசுவின் அதிமிக்க விலைமதிக்கப்படாத பரிசுத்த இரத்தத்தைக் கொண்டு இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது திவ்ய பலிப்பூசையின் பரிபூரண பலன்களை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற அனைத்து பரிசுத்த ஆன்மாக்காளுக்காகவும் ஒப்பக்கொடுப்பதோடு எல்லா இடங்களிலும் இருக்கும் பாவிகளுக்காகவும், உலகம் எத்திசையிலிருக்கும் பாவிகளுக்காகவும்,என் வீட்டிலிருக்கும் அனைவருக்காகவும் என் குடும்பத்திலிருக்கும் அனைவருக்காகவும் முழு
மன சம்மதத்துடன் ஒப்புக்கொடுக்கிறேன் .ஆமென்.

Comments
Post a Comment