உத்தரிக்கிற ஆன்மாக்களின் புதுமைகள்




உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம்.

ஆஸ்திரியா நாட்டில் புண்ணியவான் ஒருவன் வாழ்ந்து வந்தான்.ஒரு நாள் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மா ஒன்று அவரிடம் தோன்றி தான் உத்தரிக்கிற ஸ்தலத்தில் அனுபவிக்கும் மிகுந்த வேதனை பற்றி விவரித்தது.தன்னை சுற்றிக் கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவருக்கு காட்டி திவ்விய நற்கருணை ஆண்டவரை உட்கொள்கிறபோது சிலமுறை பக்தியில்லாமல் ,அசட்டை தனத்தோடும்,பராக்கோடும்,பெற்றுக் கொண்ட பாவத்திற்கு தண்டனையாய் தான் இப்போது இப்படி கடுமையான நெருப்பில் வெந்து கொண்டிருப்பதாகவும் தனக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டது. அந்தப் புண்ணியவான் அவன் மீது இரக்கப்பட்டு மிகுந்த பக்தியோடும்,சுறுசுறுப்போடும் பரிசுத்ததனத்தோடும் திவ்விய நற்கருணை வாங்கி அப்புண்ணியத்தை தன்னுடைய ஆன்மாக்காக ஒப்புக்கொடுத்தால் அவனுடைய குற்றம் முழுவதும் தீர்ந்து போகும் என்றும் வேண்டிக் கேட்டுக்கொண்டு மறைந்து போனது.

அந்த ஆன்மாவுக்கு உடனே உதவி செய்ய தீர்மானித்த புண்ணியவான் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து திவ்விய நற்கருணை பெற்றுக் கொண்டார். அதன்பின் தியானத்தில் இருக்கும்போது உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மா மறுபடியும் அவனுக்கு தோன்றி மகிழ்ச்சியோடும், நன்றியோடும் அவரிடம் பேசியது.நீர் ஒப்புக்கொடுத்த  நற்கருணையால் தன்னுடைய பாவம் தீர்ந்து நான் மோட்ச்சத்திற்க்கு போவதாக தெரிவித்ததோடு மட்டுமில்லாமல்,அவர் கண்ணெதிரிலேயே மோட்சத்துக்கு சென்ற காட்சியையும் வெளிப்படுத்தியது.

கிறிஸ்தவர்களே!,
நாம் தனிப்பட்ட முறையில் இன்று எவ்வாறு திவ்விய நற்கருணை ஆண்டவரை பெற்றுக் கொள்கிறோம் ? சற்று யோசித்துப்பார்ப்போம்.

பக்தியில்லாமல் ,மரியாதை இல்லாமல், பராக்கும்,அசட்டைத்தனமும் கொண்டு,பாவசங்கீர்தனம் பெறாமல் திருப்பலியில் திவ்விய நற்கருணை வாங்குபவர்கள் தங்கள் குற்றத்திற்கு தண்டனையை உத்தரிக்கிற ஸ்தல நெருப்பில் கட்டாயம் அனுபவித்தாக வேண்டும்.

நம் இல்லத்துக்கு உயர்நிலையில் இருக்கும் ஒரு மனிதர் வருகை தருவதாக இருந்தால் நாம் எப்படியெல்லாம் தயாராக இருப்போம்? ஆனால் நம் ஆன்மாவாகிய வீட்டினுள் ஆண்டவர் இயேசுவை, அரசர்கெல்லாம் அரசரை வரவேற்க நாம் பக்தியில்லாமல் போனால் அப்பாவத்திற்க்கு கடுமையான தண்டனை அனுபவிக்க வேண்டியது நியாயம் தானே?.‌.


ஓ ஆதியும் அந்தமும் இல்லாத பரம பிதாவே ,நான் உமது தெய்வீக குமாரன் இயேசுவின் அதிமிக்க விலைமதிக்கப்படாத பரிசுத்த இரத்தத்தைக் கொண்டு இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது திவ்ய பலிப்பூசையின் பரிபூரண பலன்களை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற அனைத்து பரிசுத்த ஆன்மாக்களுக்காக குறிப்பாக திவ்விய நற்கருணை  அவமரியாதை செய்து வேதனையுறும்  ஆன்மாக்காளுக்காகவும் ஒப்பக்கொடுப்பதோடு எல்லா இடங்களிலும் இருக்கும் பாவிகளுக்காகவும், உலகம் எத்திசையிலிருக்கும் பாவிகளுக்காகவும்,என் வீட்டிலிருக்கும் அனைவருக்காகவும் என் குடும்பத்திலிருக்கும் அனைவருக்காகவும் முழு
மன சம்மதத்துடன் ஒப்புக்கொடுக்கிறேன் .ஆமென்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!