Posts

Showing posts from July, 2025

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மறைவாக  நாங்கள் செய்கின்ற சிறிய கருணைச் செயல்களால், தொலைதூரத்தில் உள்ள ஆன்மாக்களை  மனமாற்றுகிறோம், தெய்வப்பணியில் ஈடுபடும் தொண்டர்களுக்கு உதவுகிறோம்; அவர்களுக்காக நிறைவான தானங்களை வென்றுக் கொடுக்கிறோம்.அதன் மூலம் நற்கருணை ஆண்டவருக்கு ஆன்மீகம் மற்றும் பொருள் ரீதியாக உண்மையான குடியிருப்புகளை உருவாக்குகிறோம். புனித குழந்தை தெரசம்மாள். By our little acts of charity practiced in the shade we convert souls far away, we help missionaries, we win for them abundant alms; and by that means build actual dwellings spiritual and material for our Eucharistic Lord. - St. Therese of Lisieux.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நற்கருணையாக அவர் ஒவ்வொரு நாளும் விண்ணிலிருந்து இறங்கி வருவது  பேழைகளில் தங்குவதற்காக அல்ல, மாறாக மற்றொரு மோட்சத்தை கண்டுபிடிப்பதற்காகவே, அவர் மகிழ்ச்சியுடன் தங்குவதற்கு மற்றொரு மோட்சமாக நமது ஆன்மாவை தேடியே நற்கருணையாக வருகின்றார். புனித குழந்தை தெரசம்மாள். It is not to remain in a golden ciborium that He comes down each day from Heaven, but to find another Heaven, the Heaven of our soul in which He takes delight. from St. Therese's Autobiography: Story of A Soul இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நீங்கள் நற்கருணை ஆண்டவரை  பெற்றவுடன், உங்களிடம் வந்துள்ள ஆண்டவருக்கு மரியாதை செலுத்த உங்கள் இதயத்தைத் தூண்டுங்கள்; உங்கள் ஆன்மீக வாழ்க்கையைப் பற்றி அவரிடம் பேசுங்கள், உங்கள் மகிழ்ச்சிக்காக உங்கள் ஆன்மாவில் வந்துள்ள அவரைப் பாருங்கள்; முடிந்தவரை அன்புடன் அவரை வரவேற்கவும்,கடவுள் உங்களிடம் வந்திருப்பதற்கு சாட்சியமாக உங்கள் வெளிப்புற செயல்கள் அமையட்டும். - புனித பிரான்சிஸ் சலேசியார். When you have received Him, stir up your heart to do Him homage; speak to Him about your spiritual life, gazing upon Him in your soul where He is present for your happiness; welcome Him as warmly as possible, and behave outwardly in such a way that your actions may give proof to all of His Presence." - St. Francis de Sales இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

Image
  மத்தேயு 5:44-45 நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.“இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். பகைவரை மன்னிக்காமல், அன்பு செய்யாமல். தன்னை துன்புறுத்துவோர் அழிய‌வேண்டும் என இறைவனிடம் வேண்டுவோர் பிசாசின் வாரிசுகள். பகைவரை மன்னிப்பதும் அன்பு செய்வதும் இயலாது என்று வாழும் கிறிஸ்தவர்கள்‌ மிகப்பெரிய தவறை செய்கின்றார்கள்.  இறை வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நாம் நம்பிதான் ஆக வேண்டும் ஏனேனில் சொன்னது இறைமகன் இயேசு. அவரே சொல்லிவிட்டார் என்றால், அதுவே இறுதி முடிந்து விட்டது. வேறு சாட்சியங்களை நாம் தேட வேண்டிய அவசியமில்லை. அவர் சொன்னதால் அதுவே உண்மை, தவறாத உண்மை.நாம் நம்பித்தான் ஆக வேண்டும் செயலில் வெளிப்படுத்தி வாழ வேண்டும். நம்மை சூழ்ந்திருக்கிற மனிதர்கள் இறைவார்த்தைக்கு எதிரானதுதான் சரியானது என்று குறைந்தபட்சம் தாங்கள் நடந்துகொள்ளும் விதத்தைக் கொண்டு உறுதிப்படுத்த முயலலாம். ஆனால் அது நமக்கு முக்கியமில்லை. இயேசுவே எது உண்மை என்று சொல்லி விட்டார்; அதை நம்பு வேண்டும்! மனிதர்க...

புனிதர்கள் பொன்மொழிகள்

Image
  ஏன் அடிக்கடி திவ்விய நற்கருணை வாங்குகிறாய் என்று யாராவது உங்களைக் கேட்டால், உத்தமமானவர்களும், குறைபாடுள்ளவர்களுமான இரு வகையினரும் திவ்விய நற்கருணை வாங்க வேண்டும்: உத்தமமானவர்கள் தங்கள் உத்தமதனத்தில் நிலைத்திருப்பதற்கும். குறைபாடுள்ளவர்கள், உத்தமதனம் அடைவதற்கும் இதைச் செய்ய வேண்டும் என்று பதில் சொல்லுங்கள். புனித பிரான்சிஸ் சலேசியார்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஆன்மா உடலின் உயிராக இருப்பது போல, பரிசுத்த ஆவியானவர் நம் ஆன்மாக்களின் உயிராக இருக்கிறார்.  - புனித பீட்டர் டாமியன் As the soul is the life of the body, so the Holy Spirit is the life of our souls. -St. Peter Damian இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  *எவ்வளவுக்கு ஒருவன் உலக மேன்மைகளை சம்பாதித்திருந்தானோ, அவ்வளவுக்கு அதிகமாக அவன் மரண சமயத்தில் துன்பப் படுவான்* முடிவு அண்மையில் உள்ளது! முடிவு அண்மையில் உள்ளது! (எசேக். 7:2). இவ்வாழ்வில் ஒருவன் அதிகக் காலம் வாழ்கிறான், மற்றொருவன் அதை விடக் குறுகிய காலம் வாழ்கிறான்; ஆனால் விரைவிலோ, தாமதமாகவோ முடிவு வந்தே தீரும்; அந்த முடிவு வரும்போது, சேசுகிறீஸ்துவை நாம் நேசித்திருக்கிறோம், அவருடைய அன்பிற்காக இவ்வாழ்வின் துன்பங்களையும், உழைப்புகளையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டோம் என்ற எண்ணத்தை விட மரணத்தின் போது நம்மை அதிகம் தேற்றக் கூடியது வேறு எதுவுமில்லை.  ஆகவே, நமக்கு ஆறுதல் தரப் போவது, நாம் சம்பாதித்துள்ள செல்வங்கள் அல்ல, நாம் அடைந்துள்ள பதவிகள் அல்ல, நாம் அனுபவித்துள்ள இன்பங்களும் அல்ல. உலகத்தின் மேன்மை முழுவதும் மரிக்கிற ஒரு மனிதனைத் தேற்ற இயலாது: அதற்குப் பதிலாக அது அவனுடைய வேதனைகளை அதிகரிக்க மட்டுமே உதவுகிறது. எவ்வளவுக்கு அவன் உலக மேன்மைகளை சம்பாதித்திருந்தானோ, அவ்வளவுக்கு அதிகமாக அவன் துன்பப் படுவான்.  புனித சிலுவை அருளப்பர்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  திவ்விய நற்கருணை நம்மில் பற்றியெரியச் செய்யும் நெருப்பு தீச்சுவாலையாக இருக்கிறது. இதன் காரணமாக, நெருப்பைக் கக்கும் சிங்கங்களைப் போல, பசாசுக்கு அச்சம் தருபவர்களாக, அந்தத் திவ்விய பந்தியிலிருந்து நாம் திரும்பி வரலாம்.  புனித கிறிசோஸ்தோம்  முடியும் போதெல்லம் ஆசையோடு திவ்ய நற்கருணை  உண்டால், பசாசு ஒருபோதும் நம்மை சோதிப்பதற்கு கூட தைரியம் அற்றவனாகிறான். இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இயேசுவை அறியாதவர்களை விட, இயேசுவை நன்கு அறிந்து, மனம் திரும்பாத கத்தோலிக்கர்களுக்கு கடிமான தண்டனையே கிடைக்கும்

Image
 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 20-24 *இயேசுவை அறியாதவர்களை விட, இயேசுவை நன்கு அறிந்து, மனம் திரும்பாத கத்தோலிக்கர்களுக்கு கடிமான தண்டனையே கிடைக்கும்* “கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர். தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். மூவொரு இறைவனன் (பிதா,சுதன்,பரிசுத்த ஆவி), கடவுளின் மனித அவதாரமான இயேசு கிறிஸ்து, திருச்சபை, நற்கருணை, திருவருட்சாதனங்கள், கடவுளின் தாய் நமக்கும் தாய், இறைவார்த்தை,காவல் சம்மனசுகள்,புனிதர்கள்,அருட்கருவிகள் என இத்தனை பொக்கிஷங்களை ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன் பெற்றிருந்தும் மரணம் வரை மனந்திரும்பாமல் பாவத்தில் நிலைத்திருந்தால்,இயேசுவை அறியாதவர்களை விட, இயேசுவை நன்கு அறிந்து, மனம் திரும்பாத கத்தோலிக்கர்களுக்கு கடிமான தண்டனையே கிடைக்கும்* கப்பர...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சோதோம் மற்றும் கொமோராவின்  தேசங்களுக்குள் எவ்வளவு அதிகமாக பாவங்கள் ஊக்குவிக்கப்பட்டு இயல்பாக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு அதிகமாகப் பொறுமையோடு காத்திருக்கும் கடவுளுடைய தண்டனைகளும் அதிகரிக்கும். அனைவரும் மனந்திரும்பி நற்செய்தியை நம்புங்கள். கடவுளின்  இரக்கம் அனைவருக்கும் வழங்கப்படுகின்றது ஆனால் அவரது  நீதியை ஒருவராலும் அவமதிக்க முடியாது. கலாத்தியர் 6:7 ஏமாந்து போகவேண்டாம்; கடவுளைக் கேலிசெய்ய முடியும் என நினைக்காதீர்கள். ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார். The more the sins of Sodom and Gomorrah are promoted and normalized within nations, the greater the chastisements that await. Let all repent and believe in the Gospel, for God’s mercy is offered, but His justice will not be mocked. Galatians 6:7 "Do not be deceived: God is not mocked, for whatever one sows, that will he also reap." இயேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க, புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுளிடம் நமது தேவைகளை கேட்பதற்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறோமோ, அதே அளவு நேரத்தை அவரிடமிருந்து  பெற்றுக்கொண்ட நன்மைகளுக்காக நன்றி செலுத்துவதிலும் செலவிட வேண்டும்! - புனித வின்சென்ட் தே பவுல். We should spend as much time in thanking God for His benefits, as we do in asking Him for them! - St. Vincent de Paul இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

முதல் வெள்ளி பக்தி முயற்சி

Image
  *முதல் வெள்ளி பக்தி முயற்சி* நமது பாவங்களால் கடவுளின் இதயம் நோகடிக்கப்படுகின்றது.மனிதர்களின் உதவியும், ஆறுதலும் கடவுளுக்கு தேவைப்படுகின்றது என்ற *இரகசியம்* மனிதர்களுக்கு கடவுளால் தெரிவிக்கப்பட்டதே  திருஇருதய பக்தி.  "நீயாவது எனக்கு ஆறுதல் கொடு" என்று புனித மார்கரீத் மரியம்மாள் வழியாக மனுகுலத்திடம் நம் ஆண்டவர் கேட்ட திரு இருதய பக்திமுயற்சி இன்று பல கிறிஸ்தவ குடும்பங்களால் கைவிடப்பட்டுவிட்டது.அடுத்த தலைமுறைகளுக்கு இதை பற்றி தெரியாத சூழ்நிலை உருவாகிவிட்டது. ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளி திருஇருதய ஆண்டவரிடம் நமது உலக வரங்களை கேட்பதற்கு அல்ல. நாம்,நமது குடும்பம், நமது தலைமுறைகள் செய்த பாவங்களால் இயேசுவின் திருஇருதயத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு பரிகாரம் செய்து அவருக்கு ஆறுதல் தரவேண்டிய நாளே முதல் வெள்ளி. *மனிதர்கள் கடவுளுக்கு உதவ முடியுமா ?ஆறுதல் தர‌முடியுமா ?* இயேசுவின் சிலுவைப் பாதையில் சீமோன் , வெரோணிக்காமள் உதவியது போல இந்நாளில், நாமும் , நம் குடும்பமும் இயேசுவின் திரு இருதயத்தை காயப்படுத்தும் பாவங்களை தவிர்த்து புண்ணியங்களை செய்து, நமது பாவங்களுக்கு பரிகாரமாகவும், உ...

புனிதர்கள் பொன்மொழிகள்

Image
  நீங்கள் புனித மக்களைக் கண்டுபிடிக்க கத்தோலிக்க திருச்சபைக்கு வந்திருந்தால், நீங்கள்  தவறு செய்துவிட்டீர்கள்.  கடவுளைக் கண்டுபிடிக்க கத்தோலிக்க திருச்சபைக்கு வந்திருந்தால், நீங்கள் சரியானதைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். புனித ஜான் கிறிசோஸ்டம். If you've come to church to find holy people, you've made a mistake. If you came to find God, you chose correctly. St. John Chrysostom

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  என்னுடைய எல்லா நம்பிக்கையும், என்னுடைய விசுவாசத்தின் உறுதியும், நமக்காகவும், நமது இரட்சிப்புக்காகவும் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற திருஇரத்தத்தில்தான் உள்ளது.  -புனித அகஸ்டின் All my hope, and the certainty of my faith, is in the precious blood of Christ, which was shed for us and for our salvation.  -St. Augustine இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.