உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

 


மத்தேயு 5:44-45

நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.“இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.

பகைவரை மன்னிக்காமல், அன்பு செய்யாமல். தன்னை துன்புறுத்துவோர் அழிய‌வேண்டும் என இறைவனிடம் வேண்டுவோர் பிசாசின் வாரிசுகள்.

பகைவரை மன்னிப்பதும் அன்பு செய்வதும் இயலாது என்று வாழும் கிறிஸ்தவர்கள்‌ மிகப்பெரிய தவறை செய்கின்றார்கள். 

இறை வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நாம் நம்பிதான் ஆக வேண்டும் ஏனேனில் சொன்னது இறைமகன் இயேசு. அவரே சொல்லிவிட்டார் என்றால், அதுவே இறுதி முடிந்து விட்டது. வேறு சாட்சியங்களை நாம் தேட வேண்டிய அவசியமில்லை. அவர் சொன்னதால் அதுவே உண்மை, தவறாத உண்மை.நாம் நம்பித்தான் ஆக வேண்டும் செயலில் வெளிப்படுத்தி வாழ வேண்டும்.

நம்மை சூழ்ந்திருக்கிற மனிதர்கள் இறைவார்த்தைக்கு எதிரானதுதான் சரியானது என்று குறைந்தபட்சம் தாங்கள் நடந்துகொள்ளும் விதத்தைக் கொண்டு உறுதிப்படுத்த முயலலாம். ஆனால் அது நமக்கு முக்கியமில்லை. இயேசுவே எது உண்மை என்று சொல்லி விட்டார்; அதை நம்பு வேண்டும்! மனிதர்கள் இறந்து போவார்கள், காலங்கள் மாறும் ஆனால் நம் ஆண்டவரின் சத்தியமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.

அவர் வார்த்தையின் படி வாழ்ந்து விண்ணக தந்தையின் மக்களாக மாறுவதும்.அவர்‌ வார்த்தைக்கு கீழ்படியாமல் பிசாசின் வாரிசுகளாக மாறுவதும் நம்மிடமே உள்ளது.

இயேசுவுக்கே புகழ் !

தேவமாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!