இயேசுவை அறியாதவர்களை விட, இயேசுவை நன்கு அறிந்து, மனம் திரும்பாத கத்தோலிக்கர்களுக்கு கடிமான தண்டனையே கிடைக்கும்

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 20-24





*இயேசுவை அறியாதவர்களை விட, இயேசுவை நன்கு அறிந்து, மனம் திரும்பாத கத்தோலிக்கர்களுக்கு கடிமான தண்டனையே கிடைக்கும்*

“கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர். தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.


மூவொரு இறைவனன் (பிதா,சுதன்,பரிசுத்த ஆவி), கடவுளின் மனித அவதாரமான இயேசு கிறிஸ்து, திருச்சபை, நற்கருணை, திருவருட்சாதனங்கள், கடவுளின் தாய் நமக்கும் தாய், இறைவார்த்தை,காவல் சம்மனசுகள்,புனிதர்கள்,அருட்கருவிகள் என இத்தனை பொக்கிஷங்களை ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன் பெற்றிருந்தும் மரணம் வரை மனந்திரும்பாமல் பாவத்தில் நிலைத்திருந்தால்,இயேசுவை அறியாதவர்களை விட, இயேசுவை நன்கு அறிந்து, மனம் திரும்பாத கத்தோலிக்கர்களுக்கு கடிமான தண்டனையே கிடைக்கும்*

கப்பர்நாகுமே(கிறிஸ்தவனே), நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய். ஏனெனில் உன்னிடம் (கிறிஸ்தவர்களுக்கு)செய்யப்பட்ட வல்ல செயல்கள் சோதோமில்(கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு) செய்யப்பட்டிருந்தால் அது இன்றுவரை நிலைத்திருக்குமே! தீர்ப்பு நாளில் சோதோமுக்குக்(கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு) கிடைக்கும் தண்டனையைவிட உனக்குக்(கிறிஸ்துவை அறிந்து மனம் திருந்தாதவர்களுக்கு) கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!