புனிதர்களின் பொன்மொழிகள்

 



*எவ்வளவுக்கு ஒருவன் உலக மேன்மைகளை சம்பாதித்திருந்தானோ, அவ்வளவுக்கு அதிகமாக அவன் மரண சமயத்தில் துன்பப் படுவான்*

முடிவு அண்மையில் உள்ளது! முடிவு அண்மையில் உள்ளது! (எசேக். 7:2). இவ்வாழ்வில் ஒருவன் அதிகக் காலம் வாழ்கிறான், மற்றொருவன் அதை விடக் குறுகிய காலம் வாழ்கிறான்; ஆனால் விரைவிலோ, தாமதமாகவோ முடிவு வந்தே தீரும்; அந்த முடிவு வரும்போது, சேசுகிறீஸ்துவை நாம் நேசித்திருக்கிறோம், அவருடைய அன்பிற்காக இவ்வாழ்வின் துன்பங்களையும், உழைப்புகளையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டோம் என்ற எண்ணத்தை விட மரணத்தின் போது நம்மை அதிகம் தேற்றக் கூடியது வேறு எதுவுமில்லை. 

ஆகவே, நமக்கு ஆறுதல் தரப் போவது, நாம் சம்பாதித்துள்ள செல்வங்கள் அல்ல, நாம் அடைந்துள்ள பதவிகள் அல்ல, நாம் அனுபவித்துள்ள இன்பங்களும் அல்ல. உலகத்தின் மேன்மை முழுவதும் மரிக்கிற ஒரு மனிதனைத் தேற்ற இயலாது: அதற்குப் பதிலாக அது அவனுடைய வேதனைகளை அதிகரிக்க மட்டுமே உதவுகிறது. எவ்வளவுக்கு அவன் உலக மேன்மைகளை சம்பாதித்திருந்தானோ, அவ்வளவுக்கு அதிகமாக அவன் துன்பப் படுவான். 

புனித சிலுவை அருளப்பர்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!