கல்வாரி பாடுகளை,கொடூரமான காயங்களை தாங்கிய நம் ஆண்டவர், நாம் விரும்பி செய்யும் ஒரே ஒரு பாவத்தை தாங்க முடியாதவராய் இருக்கிறார். நமது பாவத்திற்க்காக கிறிஸ்துவின் திருஇரத்தம் சிந்தப்பட்டுள்ளது.நமது பாவத்திற்கு பரிகாரமாக கடவுளுடைய மகனின் உயிர் விலையாக கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு அறிந்திருந்தும், பாவங்களை தவிர்க்காமல் பாவ சந்தர்ப்பங்களையும் விலக்காமல், தொடர்ந்து பாவ வாழ்க்கையிலே வாழ்வதும்,செய்த பாவங்களுக்கு பாவசங்கீர்தனம் செய்யாமல், பரிகாரமும் செய்யாமல் அலட்சியமாக வாழும் கத்தோலிக்கர்களாகிய நாமே இயேசுவின் திருஇருதயத்தை குத்தி கிழிக்கும் முள்முடிகள். கல்வாரி காயத்தை விட பெருங்காயத்தை ஏற்படுத்தும் பாவிகள். இன்றே மனம் திரும்வுவோம். பாவங்களை தவிர்ப்போம்.செய்த பாவத்திற்கு உரிய பரிகாரங்களையும், புண்ணியங்களையும செய்வோம்.ஆண்டவரின் திரு இருதயத்திற்கு ஆறுதல் அளிக்கும் கததோலிக்கர்களாக மாறுவோம். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளு