புனிதர்களின் பொன்மொழிகள்

 






ஒவ்வொரு குருவானவரையம்  வீழ்த்துவதற்க்காக  பசாசு  போராடுகிறான். குருக்களை விமர்சிக்க வார்த்தைகள் நம்மிடம் இருக்குமானால், அவர்களுக்காக  இரண்டு மடங்கு அதிகமாக ஜெபிக்க வேண்டும்.

 - அவிலாவின் புனித தெரசா

Behind Each Priest, There is a Demon Fighting For His Fall. If We Have The Language To Criticise Them, We Must Have Twice As Much To Pray For Them.”

-St Teresa of Avila.

நித்திய குருவாகிய சேசுவே! உமது தாசராகிய குருக்களுக்கு எவரும் தீங்கு செய்யாதபடி அவர்களை உமது இருதயமாகிய தஞ்ச ஸ்தலத்தில் வைத்துக் காப்பாற்றியருளும். அனுதினமும் உமது திருச்சரீரத்தைத் தொட்டு வரும் அபிஷேகம் பெற்ற அவர்கள் கரங்களைக் கறைபடாமல் காப்பாற்றும். விலைமதிக்கப்படாத உமது திரு இரத்தத்தில் தோய்ந்து சிவந்திருக்கும் அவர்களுடைய இதழ்களை நிர்மல சுத்தமாய்க் காத் தருளும். உமது மாட்சிமை பொருந்திய குருத் துவத்தின் உன்னத அட்சரங்களால் முத்திரிக்கப் பெற்ற அவர்கள் இருதயங்கள் உலகப் பற்று இன்றி தூய்மையாயிருக்கச் செய்தருளும். உலகத் தீவினைகள் அவர்களை அணுகாதபடி உமது பரிசுத்த அன்பு அவர்களைச் சூழ்ந்து காக்கும் கேடயமாயிருக்கக்கடவது. அவர்களுடைய பிரயாசை ஏராளமான பலன் கொடுக்கும்படி ஆசீர்வதித்தருளும். யாராருடைய இரட்சணியத்திற்காக உழைக்கிறார்களோ, அவர்களே குருக்களுக்கு இவ்வுலகத்தில் ஆறுதல் சந்தோஷமும், பரலோகத்தில் அழகிய நித்திய கிரீடமுமாயிருப்பார்களாக. 

குருக்களின் அரசியான தேவமாதாவே, குருக்களுக்காக வேண்டிக்கொள்ளும்: எங்களுக்காக ஏராளமான பரிசுத்த குருக்களை பெற்றுத் தந்தருளும். 

ஆமென்.

A Prayer for Priests

O Jesus, Eternal Priest, keep Thy priests within the shelter of Thy Sacred Heart, where none may touch them.

Keep unstained their anointed hands, which daily touch Thy Sacred Body.

Keep unsullied their lips, daily purpled with Thy Precious Blood.

Keep pure and unworldly their hearts, sealed with the sublime mark of the priesthood.

Let Thy Holy Love surround them from the world's contagion.

Bless their labors with abundant fruit, and may the souls to whom they minister

be their joy and consolation here and their everlasting crown hereafter.

Mary, Queen of the Clergy, pray for us: obtain for us numerous and holy priests. Amen

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!