*"என் பிள்ளைகளே! உத்தரியம் அணிந்துக்கொள்ளுங்கள் " என்ற மாதாவின் அன்பு கட்டளைக்கு கீழ்படியாத மாதாவின் பக்தர்களால் கொண்டாடப்படுவதே கார்மேல் அன்னைத் திருவிழா* மாதாவின் தேரை இழுப்பவர்களுக்கும், பாதை யாத்திரையாக செல்பவர்களுக்கும்,மாதா சொரூபங்களுக்கு புடவை கட்டுபவர்களுக்கும்,தங்க நகை செலுத்துபவர்களுக்கும்,மொட்டை போடுபவர்களுக்கும், நரகம் இல்லை என்ற வாக்குறுதியை நம் மாதா வழங்கவில்லை. *உத்திரியம் அணிந்தவர்களாய் மரிப்பவர்களுக்கே நரகம் இல்லை* என்ற வாக்குறுதியை கார்மேல் மாதா தந்துள்ளார்கள். நாம் விரும்பி செய்யும் பக்திமுயற்சிகளை மாதாவிற்கு செய்வது பாவம் அல்ல, ஆனால் தன் பக்தர்களிடம் மாதா கேட்டுக்கொண்ட பக்தி முயற்சிகளை பின்பற்றாமல் (உத்தரியம் அணியாமல்) நாம் விரும்பி செய்யும், *ஆன்மப்பலன் இல்லாத, காரிய பக்தி முயற்சிகளில் மட்டும் ஈடுப்படுவது மிகப் பெரிய தவறு.* இதனையே, *நமது இரட்சிப்புக்கு / மோட்சம் செல்வதற்கு பயன்படாத, மாதாவின் பக்தி முயற்சிகள் அலகையால் புகுத்தப்பட்ட போலி பக்தி முயற்சிகள்* என புனித லூயிஸ் மரிய மான்ட்போர்ட் பகிரங்கமாக எச்சரிக்கின்றார். மாதா மீதான நம் அன்பின் எ...