பக்தியுடன் உத்தரியம் அணிந்துக்கொள்வதே மாமரிக்கு பிரயமானது‌.

 

*"என் பிள்ளைகளே‌! உத்தரியம் அணிந்துக்கொள்ளுங்கள் " என்ற மாதாவின் அன்பு கட்டளைக்கு கீழ்படியாத மாதாவின் பக்தர்களால் கொண்டாடப்படுவதே கார்மேல் அன்னைத் திருவிழா*

மாதாவின் தேரை இழுப்பவர்களுக்கும், பாதை யாத்திரையாக செல்பவர்களுக்கும்,மாதா சொரூபங்களுக்கு புடவை கட்டுபவர்களுக்கும்,தங்க நகை செலுத்துபவர்களுக்கும்,மொட்டை போடுபவர்களுக்கும், நரகம் இல்லை என்ற வாக்குறுதியை நம் மாதா வழங்கவில்லை. *உத்திரியம் அணிந்தவர்களாய் மரிப்பவர்களுக்கே நரகம் இல்லை* என்ற வாக்குறுதியை கார்மேல் மாதா தந்துள்ளார்கள்.

நாம் விரும்பி செய்யும் பக்திமுயற்சிகளை மாதாவிற்கு செய்வது பாவம் அல்ல, ஆனால் தன் பக்தர்களிடம் மாதா கேட்டுக்கொண்ட பக்தி முயற்சிகளை பின்பற்றாமல் (உத்தரியம் அணியாமல்) நாம் விரும்பி செய்யும், *ஆன்மப்பலன் இல்லாத, காரிய பக்தி முயற்சிகளில் மட்டும் ஈடுப்படுவது மிகப் பெரிய தவறு.* இதனையே,

*நமது இரட்சிப்புக்கு / மோட்சம் செல்வதற்கு பயன்படாத, மாதாவின் பக்தி முயற்சிகள் அலகையால் புகுத்தப்பட்ட போலி பக்தி முயற்சிகள்* என புனித லூயிஸ் மரிய மான்ட்போர்ட் பகிரங்கமாக எச்சரிக்கின்றார்.

மாதா மீதான நம் அன்பின் எல்லா வடிவங்களும்,அதன் பல்வேறு வெளிப்பாட்டு முறைகள் அனைத்திலும்,*பக்தியுடன் உத்தரியம் அணிந்துக்கொள்வதே மாமரிக்கு பிரயமானது‌.* மற்ற பக்தி முயற்சிகளை விட பக்தியுடன் உத்தரியம் அணிவது மட்டுமே விண்ணகம் செல்வதற்கு நமக்கு உதவி செய்யமுடியும் என்பதால். உத்தரியம் அணிந்துக்கொள்ளும் பக்தி முயற்சியே மாமரியால் அதிகம் விரும்பப்படும் பக்திமுயற்சி என்று ஒருகண நேரத் தயக்கம் இன்றி கூறுகிறேன்.

-புனித க்ளாடுதெல்லா கொலம்பியர்

சிலுவை அடியில் கிறிஸ்து "இதோ உன் தாய்" என்று *மாதாவை நமக்கு தாயாக கொடுத்தது, நமது உலகைத் தேவைகளை மட்டும் பூரத்திசெய்துக்கொள்ள அல்ல*. நாமும், நமது தலைமுறைகளும் நரகம் செல்லமால் மோட்சம் சேர வேண்டும் என்பதற்காகவே.

உத்தரியம் அணிவது, நாம் மாதாவின் பாதுகாப்பில் இருக்கிறோம் என்பதற்க்கான சரியான அடையாளம் (ID card).அலகையின் பாவ தந்திரங்களை முறியடிக்கும் பாதுகாப்பு கேடயம்.

நாம் அணியாமல் அலட்சியப்படுத்துகிற ரூ.10 உத்தரியத்திற்கே அலகை அஞ்சி நடுங்குகின்றது.70000 மதிப்புள்ள தங்க நகைக்கு அல்ல.

*வேதாகமத்தில் உத்தரியம்*
அவளுடைய ஊழியர் அனைவருமே இரட்டை ஆடையால் உடுத்தப்பட்டிருக்கிறார்கள்.
கம்பளி ஆடையை தனக்குச் செய்திருக்கிறாள்.மெல்லிய சணலும் கருஞ்சிவப்பு ஆடையும் அவளுடைய போர்வையாம்.
பழமொழி ஆகமம் 31:21-22

*பேயோட்டும் சடங்கில் அலகையின் நேரடி சாட்சியம்*

வணக்கத்திற்குரிய பிரான்சிஸ் இப்பெஸ் என்பவரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம், பரிசுத்த உத்தரியத்திற்குப் பசாசு எந்த அளவுக்குப் பயப்படுகிறது என்று விளக்குகிறது.
ஒரு நாள் அவருடைய உத்தரியம் நழுவிக் கீழே விழுந்தது. அவர் அதற்குப் பதிலாக மற்றொரு உத்தரியத்தை அணிய முயற்சித்தபோது, பசாசு அவரை நோக்கி ஊளையிட்டு,*"ஏராளமான ஆத்துமங்களை எங்களிடமிருந்து பிடுங்கிக்கொள்கிற அந்த அங்கியைக் கழற்றி விடு!*"என்று அலறியது. பிரான்சிஸ் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு. பசாசு உண்மையில் எவற்றிற்கு அதிகமாகப் பயப்படுகிறது என்று வெளிப்படுத்துமாறு அதைக் கட்டாயப்படுத்த அது பதிலுக்கு, “*சேசுவின் திருநாமத்திற்கும், மரியாயின் திருநாமத்திற்கும், பரிசுத்த கார்மெல் உத்தரியத்திற்குமே நாங்கள் மிக அதிகமாகப் பயப்படுகிறோம்*." என்றது

இப்பேற்பட்ட உத்தரியத்தை நமது மரணம் வரை பிரம்மாணிக்கமாய் அணிந்துக்கொள்வது மாதா மீது நாம் கொண்டுள்ள *உண்மை பக்தியின் அடையாளம்.* மாதாவின் அன்பான வார்த்தைக்கு கீழ்படியும் பக்தர்களின் அடையாளம்.

*உத்தரியம் அணியாத மாதா பக்தர்களாலும்,உத்தரியத்தின் மகிமைகளையும்,உத்தரியம் அணியவில்லையென்றால் கத்தோலிக்கர்களுக்கு வரும் ஆபத்தையும் எச்சரிக்காத ஞானமேயப்பர்களாலும், கொண்டாடப்படும் கார்மேல் அன்னை திருவிழாவினால் எந்த ஆன்ம பலனும் இல்லை.*

சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.




Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!