நாம் மாதாவின் உண்மை பக்தர்களா ? காரிய பக்தர்களா ?
உத்தரியம் அணிந்தவர்களாய் மரிப்பவர்களுக்கு நரகம் இல்லை.
தேவமாதா.
அர்ச்.சைமன் ஸ்டாக்கிடம் கூறியது.
Whosoever shall die wearing my Scapular shall not suffer the flames of Hell." -Our Lady of Mount Carmel
மாதா சொரூபங்ளுக்கு புடவைகள் கட்டுவோம்.
மாதா கோவிலில் மொட்டை போடுவோம்.- ஆனால்
உத்தரியம் மட்டும் அணியமாட்டோம.
மாதா கேட்டுக்கொண்ட *ஆன்ம மீட்புக்கான* பக்தி முயற்சிகளை பின்ப்பற்ற மாட்டோம்.
நாம் விரும்புகின்ற *மீட்பிற்கு அவசியமில்லாத காரியப்பக்தி முயற்சிகளை* விரும்பி செய்வோம்.
*மீட்புக்கு உதவாத,இரட்சிப்பிற்கு பயன்ப்படாத, மாதா மீதுள்ள பக்திமுயற்சிகள், அலகையால் புகுத்தப்பட்டவை.*என அர்ச்.லூயிஸ் மரிய மான்ட்போர்ட்
எச்சரித்திருந்தாலும் நாம் கேட்கப்போவதில்லை.காரணம் இந்நாட்களில் நரகத்தைப்பற்றி விழிப்புணர்வு இல்லை.பயம் இல்லை.ஏன்
நரகமே இல்லை, அலகையே இல்லை என நம் ஆண்டவர் கிறிஸ்துவுக்கு எதிரான நவீன கிறிஸ்தவர்களாகிவிட்டோம்.
நாம், நரகம் செல்லாமல் ,மோட்சம் செல்லவேண்டுமென்றே கிறிஸ்து கல்வாரியில் மரித்தார் என்று தெரிந்திருந்தும்,அடிப்படை கத்தோலிக்க விசுவாச சத்தியமான *நரகத்தை*
முழுமையாக இந்நாளில் நாம் நம்புவதுமில்லை.மற்றவர்களுக்கு எச்சரித்து போதிப்பதும் இல்லை.
நரகத்தை விசுவசிப்பவர்களுக்கும், விசுவசிக்காதவர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே.
நரகத்தை விசுவசிப்பவர்கள் கழுத்தில் நிச்சயம் உத்தரியம் இருக்கும்.அவர்களே மாதாவின் அடிமைகள்.மாதாவின் உண்மை பக்தகர்கள்.
வேதாகமத்தில் உத்தரியம்,
அவளுடைய ஊழியர் அனைவருமே இரட்டை ஆடையால் உடுத்தப்பட்டிருக்கிறார்கள்.
கம்பளி ஆடையை தனக்குச் செய்திருக்கிறாள்.மெல்லிய சணலும் கருஞ்சிவப்பு ஆடையும் அவளுடைய போர்வையாம்.
பழமொழி ஆகமம் 31:21-22
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments
Post a Comment