மோட்சத்தில் நாம் சேர்ந்திருக்க முடியாது..!
*மோட்சத்தில் நாம் சேர்ந்திருக்க முடியாது..!*
ஒரு சமயம் பங்குக் குருக்களின் பாதுகாவலரான அர்ச். ஜான் மரிய வியான்னியாரை புராட்டஸ்ட்டாண்ட் மனிதர் ஒருவர் சந்திக்க வந்தார். அவர் பதித மதத்தவர் என்பதை அறியாத புனித குரு, தமது வழக்கம் போல் நமதாண்டவரைப் பற்றியும் அர்ச்சிஷ்டவர்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்.
சந்திப்பு முடிந்தது. புறப்பட எழுந்த அந்த நபரிடம் அவரது வருகையின் நினைவாக ஒரு சிறு பதக்கத்தை (Medal) வழங்கினார். அதளை பெற்றுக் கொண்ட அந்த புராட்டஸ்டாண்ட் நபர் "தந்தையே, உங்கள் கருத்தின்படி பதிதனான என்னிடம் பதக்கதை கொடுத்துள்ளீர்கனே ஆனால், நாம் ஒரே மதத்தைச் சார்ந்தவர்களாக இல்லாவிட்டாலும், ஒருநாள் நாம் இருவரும், மோட்சத்தில் இருப்போம் என்று நம்புகிறேன்" என்று கூறினான்.
உடனே அர்ச்சிஷ்டவர் அந்த மனிதனின் கரத்தைப் பிடித்தவாறு, ஊடுறுவும் பார்வையால் அவரை கூர்ந்து நோக்கி, "ஐயோ! நண்பரே இந்த உலகில் சேர்ந்து ஒரே மதத்தைப் பின்பற்றாதவர்கள் மோட்சத்தில் சேர்ந்திருக்க முடியாது. மரம் எங்கே விழுகிறதோ அந்தப்பக்கம் தான் சாயும். "என்று இரக்கத்தோடு பதிலளித்தார்.
உடனே "ஆனால், தந்தையே” என்று இடைமறித்து பதிலளிக்கமுயன்ற அந்த நபர் “தன்னில் விசுவாசம் கொண்டிருப்பவன் நித்திய வாழ்வை கொண்டிருப்பான் என்று சேசு கிறீஸ்து சொல்லியிருக்கிறாரே. அவர்மீது என் நம்பிகையை வைக்கிறேன்" என்று தயங்கியவாறு கூறினான்.
அதற்கு அர்ச். வியான்னியார் "சேசுகிறீஸ்து இதுதவிர வேறு அநேக காரியங்களையும் சொல்லியிருக்கிறாரே, திருச்சபையின் சொற்படி கேளாதவன் அஞ்ஞானியைப் போல உனக்கு ஆகக் கடவான் என்றும் சொல்லியிருக்கிறாரே. அதோடு ஒரே மந்தையும் ஒரே ஆயனுமாக இருப்பார்கள்" என்றும், தமது அந்த மந்தைக்கு தலைமை ஆயராக அர்ச். இராயப்பரையும் நியமித்துள்ளாரே. இதனையும் கூட ஏற்றுக் கொள்ள வேண்டுமல்லவா? இன்று இவ்வுலகில் அந்த ஒரே மந்தையும் அதன் தலைமை ஆயரும் எங்கே இருக்கிறார்கள்? அது சுத்தோலிக்கத் திருச்சபையும். அதன் தலைமை ஆயரான பாப்பரசருமல்லவா? அதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமல்லவா?" என்று நயமாகப் பேசினார். அவரது குரலில் கழிவிரக்கம் மேலோங்கியிருந்தது. அம்மனிதன் தலை குனிந்தவாறு மறுப்புக் கூறாமல் சென்று விட்டான்.
அர்ச். ஜான் மரிய வியான்னியார் அம்மனிதன் சத்திய கத்தோலிக்க .விசுவாசத்தைப் பெற ஜெபித்தார்.
ஆமென்
நன்றி: மாதா பரிகாரமலர்

Comments
Post a Comment