Posts

Showing posts from February, 2023

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  குளிர்கால நிலத்தில் விழும் பனித்துளிகளைப் போல ஆத்மாக்கள் நரகத்தில் விழுவதை நான் காண்கிறேன். தெய்வீக பழிவாங்கும் நீதியிலிருந்து இந்த ஆத்மாக்களைக் காப்பாற்ற தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பவர்கள் மிகக் குறைவு.  அர்ச். பிரான்சிஸ் சேவியர். I see souls falling into hell like snowflakes falling on the winter ground. And there are so few ,so few who are willing to do whatever they can to spare these souls from divine vindictive justice.” —St. Francis Xavier. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மற்றவர்களை அவமானப்படுத்துவதற்கும், திட்டுவதற்கும் உபயோகப்படுத்தும் வார்த்தைகளிலிருந்து உங்கள் வாயும் நோன்பு இருக்கட்டும்.  மீனையும், கோழியையும் தவிர்த்துவிட்டு, நம் சகோதர சகோதரிகளை வார்த்தைகளால் கடித்து விழுங்கினால் என்ன லாபம்?  தீயவற்றை பேசுபவன் தன் சகோதரனின் சதையை தின்று அயலாரின் உடலைக் கடிக்கிறான்.  - அர்ச்.ஜான் கிறிசோஸ்டம். Let the mouth also fast from disgraceful speeches and railings. For what doest profit if we abstain from fish and fowl and yet bite and devour our brothers and sisters? The evil speaker eats the flesh of his brother and bites the body of his neighbour.  - St. John Chrysostom. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அனைத்து வெற்றிகளுக்கான அடிப்படை சாத்தியம் முதலில் நம் மீதான சுயவெற்றியாகும் . நமது விருப்பத்தை விட்டுக்கொடுத்து, கடவுளுக்கு நம்மை அர்ப்பணித்து பாவமான அனைத்தையும் விரோதமாக்கி மறுப்பதே வெற்றியின் அடிப்படை.  அர்ச். தியோபன்   The possibility and basis for all inner victories is first the victory over oursமes — in the breaking of our will and dedicating ourselves to God, with inimical denial of everything sinful.” st.Thophan  சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  அற்ப மனிதா? கடவுளுக்கு எதிர் வினை விடுக்க நீ யார்? பாத்திரம் தன்னை உருவாக்கியவனிடம்,ஏன் என்னை இவ்வாறு செய்தாய் என்று சொல்லுமோ? ஒரே களிமண் மொத்தையிலிருந்து மதிப்புயர்ந்த கலனையோ மதிப்பற்ற கலனையோ வனைய குயவனுக்கு அம்மண் மீது உரிமையில்லையோ? உரோமையர் 9(19-20) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும்.எசாயா58(7-8) சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  யாராவது உங்களுக்குத் தீமை செய்தால், அவரிடம் அன்பாகவும் பணிவாகவும் நடந்து கொள்ளுங்கள். அப்படிச் செய்வதன் மூலம் அவருடைய பாவத்திலிருந்து அவரை விடுவிப்பீர்கள்.  ~அர்ச். மாக்சிமஸ் When someone does evil to you, be affectionate and humble toward him, and treat him kindly. By doing so you will deliver him from his sin. ~St. Maximus . சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  குழந்தாய், ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால், சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்துகொள். உள்ளத்தில் உண்மையுள்ளவனாய் இரு; உறுதியாக இரு; துன்ப வேளையில் பதற்றமுடன் செயலாற்றாதே. ஆண்டவரைச் சிக்கெனப் பிடித்துக்கொள்; அவரை விட்டு விலகிச் செல்லாதே. உன் வாழ்க்கையின் முடிவில் வளமை அடைவாய். என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள்; இழிவுவரும்போது பொறுமையாய் இரு. நெருப்பில் பொன் புடமிடப்படுகிறது; ஏற்புடைய மனிதர் மானக்கேடு எனும் உலையில் சோதித்துப் பார்க்கப்படுகின்றனர். ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்; அவர் உனக்குத் துணை செய்வார். உன் வழிகளைச் சீர்படுத்து; அவரிடம் நம்பிக்கை கொள். சீராக 2(1-6) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நாம் செய்த பாவங்கள் சர்வேசுரன் ஏற்றுக்கொள்ளாத துக்கத்துயரங்கள் என்பதை கண்டறிந்து, செய்த பாவத்திற்க்காக நம்மை நாமே தண்டித்துக்கொள்வதும்,நம்மை நாமே பழிவாங்குதலுமே தவமாம். அர்ச்.தாமஸ் அக்குவினாஸ். கடந்த கால பாவத்திற்கு பரிகரிப்பதும் வரும்காலத்தில் பரிசுத்த தனத்தில் வாழ முயற்சிப்பதே தவம்.தவமானது முற்றும் துறந்த முனிவர்களுக்கு மட்டுமானதல்ல ,பாவம் செய்யும் அனைவருக்குமானது. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.ஏனெனில், *ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்;* தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை; அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர். திருப்பாடல் 37(27-28) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தேவ மனிதனை உருவாக்க பரிசுத்த ஆவியானவரால் செய்யப்பட்ட ஆண்டவரின் அச்சு மாதா.இந்த அச்சில் வார்க்கப்பட்ட யாவரும் மெய்யான தேவனாகிய சேசு கிறிஸ்துவை ஒத்திருக்கிறார்கள். அர்ச்.லூயிஸ் மரிய மோன்டபோர்ட். சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பிள்ளைச் செல்வத்திற்க்காக மகிழும் பெற்றோர்களே ! கடவுளுக்கு ஏற்றவகையில் அவர்களை  வளர்க்காவிட்டால் கடுமையான கணக்கு கொடுக்க நேரிடும் மறவாதீர். அர்ச்.குரியகோஸ் சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  ஆண்டவரே, ஜெபத்தில் உம்மைத் தவிர வேறொன்றை நான் நினைக்கும்போதெல்லாம் என்னை மன்னித்து இரக்கத்துடன் நடந்துகொள்ளும். ஏனென்றால், நான் மிகவும் திசைதிருப்பப்படுவதற்குப் பழகிவிட்டேன் என்பதை உண்மையாக ஒப்புக்கொள்கிறேன். தாமஸ்கெம்பீஸ். Lord, pardon and deal mercifully with me, as often as I think of anything besides You in prayer. For I confess truly that I am accustomed to be very much distracted. Thomas kempis. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். திருப்பாடல் 116(12-14) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார்.மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது. தொடக்க நூல் 6(5-6) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அன்பு எப்படி இருக்கும்?   பிறருக்கு உதவும் கரங்கள் அதற்கு உண்டு. ஏழை எளியோரிடம் விரைந்து செல்லும் கால்கள் அதற்கு உண்டு. துன்பத்தை விரும்புவதைப்பார்க்கும் கண்கள் அதற்கு உண்டு. மனிதர்களின் பெருமூச்சுகளையும் துயரங்களையும் கேட்கும் காதுகள் அதற்கு உண்டு.  புனித அகஸ்டின். What does love look like? It has the hands to help others. It has the feet to hasten to the poor and needy. It has the eyes to see misery and want. It has the ears to hear the sighs and sorrows of men. That is what love looks like." - St. Augustine. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவரின் ஞானம் பெரிது. அவர் ஆற்றல் மிக்கவர்; அனைத்தையும் அவர் காண்கிறார்.ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் மீது அவரது பார்வை இருக்கும்; மனிதரின் செயல்கள் அனைத்தையும் அவர் அறிவார். * இறைப்பற்றின்றி இருக்க யாருக்கும் ஆண்டவர் கட்டளையிட்டதில்லை; பாவம் செய்ய எவருக்கும் அவர் அனுமதி கொடுத்ததும் இல்லை. * சீராக் 15(18-20) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  எல்லா மனித அநீதிகளையும் ஆண்டவரிடம் விட்டுவிடுங்கள், ஏனெனில் கடவுள் ஒருவரே நீதிபதி. உங்களைப் பொறுத்தவரை, தூய்மையான இதயத்துடன் அனைவரையும்(அநீதியாளர்களையும்) நேசிப்பதில் விடாமுயற்சியுடன் இருங்கள்.   புனித   க்ரோன்ஸ்டாட்டின்  ஜான். leave all human injustices to the lord, for god is the judge.but as to yourself, be diligent in loving everybody with a pure heart.  St.John of kronstadt. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நாம் சத்தியத்தையும், ஜீவியத்தையும் மீட்பைப் பற்றி பேசும்போது, ​​ கிறிஸ்துவைப் பற்றியே பேசுகிறோம்.  அர்ச்.அம்புரோஸ் When we speak about truth and life and redemption, we are speaking of Christ. St. Ambrose. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!.அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும்.அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார். எசாயா58-7. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  திவ்விய நற்கருணை ஆண்டவரைப்பெற்றப் பிறகு  உங்களால் முடிந்தவரை தேவாலயத்திலே இருந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள் மேலும் சாவானப் பாவத்தோடு  மறித்துவிடாமல் இருப்பதற்கான அருளை உங்களிடம் வந்திருக்கும் ஆண்டவரிடமே கேளுங்கள்."  அர்ச். ஜான் போஸ்கோ. After Communion remain in church as long as you can to thank Our Lord and ask of Him the grace of not dying in the state of mortal sin - St. John Bosco. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர்.தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். திருப்பாடல்112(1-4-7) சேசுவுக்கே புகழ்! தேவமாதாவேவாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை. எபிரேயர்13-16. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

முதல் சனி பக்தி முயற்சிகள்

Image
  மாதா பாத்திமாவில் கேட்டுக்கொண்ட *முதல் சனி பக்தி முயற்சிகள்* *மாதாவிற்கு நாம் விரும்பி செய்யும் பக்தி முயற்சிகளை விட, மாதா நம்மிடம் கேட்ட முதல் சனிப்பரிகாரபக்தியை பின்பற்றுவதும், கடைப்பிடிப்பதுமே மாதாவின் மீது  உண்மை பக்தியுள்ள பிள்ளைகளுக்கும், பக்தர்களுக்கும் அழகு.* மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு நிந்தைப் பரிகாரமாக, ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் நாம் செய்ய வேண்டியது  1.நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, 2.தேவமாதாவின் மாசற்ற இருதயத்திற்கு ஆறுதலாக பரிகார நற்கருணை உட்கொள்ளுதல். 3.ஜெபமாலை ஜெபித்தல். 4. மாதாவுடன் 15 நிமிடம் இருந்து தேவ இரகசியங்களைத் தியானித்தல். எதற்க்காக இந்த பரிகாரம் ? 1.ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மரியாயின் அமல உற்பவத்திற்கு எதிராக மாதா ஜென்ம பாவத்தோடு பிறந்தார்கள் என்ற நிந்தைக்குப் பரிகாரமாக. 2. தேவதாயின் தெய்வீகத் தாய்மைக்கு எதிராக மாதா கடவுளின் தாயல்ல என்ற நிந்தைக்குப் பரிகாரமாக. 3. கன்னிமாமரி முப்பொழுதும் கன்னிகை என்னும் சிறப்புக்கு எதிராக மாதா கன்னியல்ல என்ற நிந்தைக்குப் பரிகாரமாக. 4. மாதாவின் உண்மை பக்தியை சிறுவர், இளைஞர்களிடம் போதிக்காமல் ...

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  பொருளாசையை விலக்கி வாழுங்கள். *உள்ளது போதுமென்றிருங்கள்.* ஏனெனில், 'நான் ஒருபோதும் உன்னைக் கைவிடேன்; உன்னை விட்டுப் பிரியேன்' என்று இறைவனே கூறுகிறார்.இதனால் நாம் துணிவோடு 'கடவுளே எனக்குத் துணை, அஞ்சேன், மனிதர் எனக்கு என்ன செய்யமுடியும்?" என்று சொல்ல முடியும். எபிரேயர் 13(5-6) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எஙகளுக்காக வேண்டிக்கொள்ளும்.