Posts

Showing posts from November, 2021

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  "The Church belongs to Jesus Christ and it is not a laboratory for theologians to experiment" - Pope Benedict XVI. "திருச்சபை இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமானது, அது இறையியலாளர்கள் பரிசோதனை செய்வதற்கான ஆய்வகம் அல்ல" - திருத்தந்தை பெனடிக்ட் . சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அர்ச்.ஜான் மரிய வியான்னி நிகழ்த்திய இதயத்தைத் தொடும் ஒரு மறையுரையில் உத்தரிக்கும் ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்கள் கூறியதாக பிரசங்கித்தது பின்வருமாறு... (மரித்த  தாயோ, தந்தையோ, மனைவியோ, கணவனோ,பிள்ளைகளோ, நண்பர்களோ ஆன்மா பேசுவது போல கற்பனைச் செய்து படிக்கவும்) ஓ என் சகோதரர்களே,இக்கொடுமையிலிருந்து எங்களை மீட்டருளுங்கள்.அது உங்களால் மட்டுமே முடியும்.கடவுளின் உறவிலிருந்து பிரிந்து நிற்கும் கொடிய வேதனையை நீங்கள் அனுபவித்தால் மட்டுமே , எங்களின் வேதனைகளை புரிந்துக்கொள்ளமுடியும்.இறைநீதியின் பொருட்டு எரியும் நெருப்பில் வேதனையுறுவது கொடிய பிரிவுத் துயர் இது! எனது பிள்ளைகளே, தந்தையே, தாய்மாரே,அழுங்கள் இவ்வளவு எளிதாக எங்களை மறக்க இயலுமோ? உங்களை இந்தளவு நேசித்த எங்களை இப்படி கைவிட்டு விட்டீர்களே? எங்களது தாங்க முடியாத நெருப்பு வேதனையை கண்டுக்கொள்ளமால் எப்படி மகிழ்ச்சியுடன் ஒய்வெடுக்க முடிகிறது. நாங்கள் சம்பாதித்த சொத்து,வீடு அனைத்தையும் நீங்களே அனுபவிக்கிறீர்கள்; ஆனால் இந்தக்கொடிய நெருப்பில் எங்களை கைவிட்டுவிட்டீர்களா? தான தர்மங்கள் எதுவும் செய்யாமல் எங்களுக்கு உதவும்படி திருப்பலி எதுவும் ஒப்புக்...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 உத்தரிக்கும் ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்கள் தங்களைத் தாங்களே பரிசுத்த படுத்த இயலும் என்றால் தங்களுடைய பாவக்கடன்களை எல்லாம் ஒரே நிமிடத்தில் கழித்திருப்பார்கள்.ஆனால் இழந்த இறையருளை நேரடியாக உணர்ந்த இவர்கள், தங்களுக்கு தாங்களே உதவ முடியால நிலையில் இருக்கிறார்கள். அவ்வண்ணமே அந்நிலை படைக்கப்பட்டிருக்கிறது. வேதனையுறும் ஆன்மாக்களால் எதையும் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை இல்லை.இவர்களுக்கு ஏதாவது உதவி கிடைக்க துனபங்களை இலகுவாக்க துன்பத்தின் கால அளவை குறைக்க கடவுளின் அளவற்ற இரக்கத்தில் அடைக்கலம் புகுந்து மண்ணுலகிலிருந்து மானிடர்களாகிய நாம் ஒப்புக்கொடுக்கும் திருப்பலிகளும்,செபமாலைகளும், பிரார்த்தனைகளும் தான தர்மங்களும் மட்டுமே உதவும். புனித காத்தரின். தூய்மை பெறும் ஆன்மாக்களும் நாமும். அருட்தந்தை தாமஸ் அம்பாட்டுகுழியில்.வி.சி சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க! அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்ளின் பொன்மொழிகள்

Image
உத்தரிக்கும் ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்கள் இறைமக்களின் மன்றாட்டாலும் அதைவிட மேலாக  திருப்பலி மூலம் நித்திய இளைபாற்றி அடைகிறார்கள். எனவே மரித்த நமது குடும்ப உறுப்பினர்களுக்கு பாவத்தின் பலனால் விளைந்த தண்டனைகள் குறைக்கப்படவும், "எனது அன்புக்குரிய ஆன்மாவே உனக்காக தயாரக்கி வைத்திருக்கும் நிலைவாழ்வில் எனது நன்மையின் கரங்களில் இளைப்பாறுதலுக்காக வந்து சேர்" என்ற நம் ஆண்டவரின் குரலைக் விரைவில் கேட்க வேண்டுமென்றால் ஒட்டு மொத்த கத்தோலிக்கர்களும் உத்தரிக்கும் ஆன்மாக்களின் நித்திய இளைபாற்றிக்காக மன்றாட வேண்டும் . திருத்தந்தை  புனித 2ஆம் ஜான் பால். சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க! அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
ஜெர்மனியின் ஒளிவிளக்கு என்றியப்படும் மகா அர்ச் ஆல்பர்ட்,மகா பட்டத்தைப் பெறக்காரணம்,அவருடைய அதிமிகு அறிவுப்புலமையாகும்.மகா வல்லுநரான இவர் ஏராளமான நற்பண்புகளின் உடமையாளர் என்றாலும் தன்னுடைய திறமையைப்பற்றி பெருமை பாராட்டுபவர். அதனால் அவரைக் கடவுள் உத்தரிக்கும் ஸ்தலத்திற்கு அன்ப்பினார்.என்று அர்ச்.ஜான் மரிய வியான்னி ஒரு மறையுரையில் குறிப்பிட்டுள்ளார்.அர்ச்.ஆல்பர்ட் தன்னுடைய நண்பருக்கு தோன்றி உத்தரிக்கும் ஸ்தலத்தில் நான் கண்ட நம்பவே இயலாத ஒன்று என்னவென்றால் புனிதர்கள் முத்திபேறுபெற்றோர் போன்றோரில் பலரும் உத்தரிக்கும் ஸ்தலத்தை கடந்தே செல்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். தூய்மை பெறும் ஆன்மாக்களும் நாமும். அருட்தந்தை தாமஸ் அம்பாட்டுகுழியில்.வி.சி சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க! அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.  

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
உயர்ந்தப்பண்புகளையும் ஆன்மீக மதிப்பீடுகளையும் சம்பாதித்துள்ள சில புனிதர்களும் கடவுளின் நடுவர் இருக்கைக்கு முன்பு சிரம் தாழ்த்தி, உத்தரிக்கும் நிலையை நோக்கி செல்கிறார்கள்.ஏனெனில் நம்முடைய பார்வையில் நீதி எனத்தோன்றுவது கடவுளின் பார்வையில் அநீதியாக இருக்கலாம்.அதனாலேயே நாம் புரிந்த நற்செயல்களைப் பற்றிய உயர்வு மனப்பான்மையை கைவிட்டு ,வெறுங்கையுடன் கடவுளின் திருமுன்னிலையில் நிற்க அவர் பரிந்துரைக்கிறார்.இங்கு முதலானோர் விண்ணகத்திலும் முதலானோராய் இருக்க வேண்டும் என்றில்லை.ஆயினும் இங்கு கடைசியானோர் பலரும் விண்ணகத்தில் முதலானோராய் இருக்கிறார்கள் .( நல்ல கள்வன்) அர்ச்.குழந்தை தெரசா. தூய்மை பெறும் ஆன்மாக்களும் நாமும். அருட்தந்தை தாமஸ் அம்பாட்டுகுழியில்.வி.சி சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க! அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.  

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
எனது அருமை சகோதரர்களே ! ஏராளாமான பாவங்கள்‌ செய்த நாம்,அவற்றை பாவமன்னிப்பு எனும் திருவருட்சாதனத்தில் அறிக்கையிட்டோம் என்ற ஒரே காரணத்துக்காக,அதற்கான தகுந்த பரிகாரம் செய்யாமல் இருந்தால், நாம் எத்தனை ஆண்டுகள் உத்தரிக்கும் ஸ்தலத்தில் வேதனை அனுபவிக்க நேரிடும். ? புனித.ஜான் மரிய வியான்னி. 1.நம் வாழ்வில் செய்த சாவான பாவத்திற்கு நல்ல பாவசங்கீர்தனம் செய்தால் *நரகம்* கிடையாது. உதாரணம் - கருக்கலைப்பு(Abortion) செய்துவிட்டு ஒப்புரவு திருவருட்சாதனத்தில் பாவமன்னிப்பு பெற்றால் நரகம் கிடையாது.ஆனால் உத்தரிக்கும் ஸ்தலம் உண்டு. 2.ஒப்புரவு திருவருட்சாதனத்தில் மன்னிப்பு பெற்ற பாவத்திற்கு முறையான பாவ பரிகாரங்கள் செய்தால் *உத்தரிக்கும் ஸ்தலமும்* கிடையாது. உதாரணம் - கருவிலே சிசுவை கொலை *செய்த பாவத்திற்கு ஈடு செய்யும் விதமாக வாழும்போதே பரிகாரங்கள் செய்தால் உத்தரிக்கும் ஸ்தலமும் கிடையாது.நான் கருவிலே சிசுவை அழித்தேன் என்ற மனவருத்ததோடு அநாதை குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்வது.நமக்கு வரும் துன்பங்களை செய்த பாவத்திற்கு தண்டனையாக அமைந்த மனதோடு ஏற்றுக்கொள்வது.திருப்பலி,செபமாலை,சிலுவைப் பாதையில் பக்தியுடன் பாவபர...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உத்தரிக்கும் ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களை அங்குள்ள நெருப்பிலிருந்து விடுவித்து இப்பூவுலகின் மிகப்பெரிய நெருப்பு உலைக்குச்செல்ல ஆண்டவர் அனுமதித்தால் அது அவர்களுக்கு கொதிக்கும் நெருப்பிலிருந்து குளிர்ந்த நீருக்கு செல்லும் அனுபவமாக இருக்கும். அர்ச்.பியோ தூய்மை பெறும் ஆன்மாக்களும் நாமும். அருட்தந்தை தாமஸ் அம்பாட்டுகுழியில்.வி.சி சேசுவுக்கே புகழ் !   தேவமாதாவே வாழ்க! அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேணுடிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்து அவரை விசுவித்து அன்பு செய்யாத ஆன்மாக்கள் உத்தரிக்கும் ஸ்தலத்திற்க்கு தள்ளப்படுவார்கள் என்பது உறுதி. இவ்வுலக வாழ்வின் இடர்கள் மற்றும் இன்னல்கள் மூலம் மரணத்திற்க்குப்பின் நேரடியாக இறைவனைத் தரிசிப்பதற்க்கான அருளாற்றலை நம்மால் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அத்தகைய துன்பங்களை நுகராதவர்கள் வாழ்வை வீணாக்கி விட்டார்கள் என்றே கருதுகிறேன்.மண்ணுல வாழ்வின் வேதனையையும்,சோதனையையும், துன்பத்தையும் வீணாக்கியவர்கள் உத்தரிக்கும் ஸ்தலம் கடக்க வேண்டி வரும் என்பது திண்ணம். அர்ச்.குழந்தை திரைசா. தூய்மை பெறும் ஆன்மாக்களும் நாமும் புத்தகத்திலிருந்து. அருட்தந்தை தாமஸ் அம்பாட்டுகுழியில்.வி.சி சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நீதிமானானவன் நாளொன்றுக்கு ஏழு தரம் பாவத்தைக் கட்டிக் கொள்ளுகிறான் என்று சத்திய வேதத்திலே எழுதி இருக்கிறது .உதாரணமாக ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு பத்து சொற்ப பாவங்களைக் கட்டிக் கொள்ளுகிறான் என்றால், ஒரு வருஷத்திலே அந்த மனுஷன் நாளொன்றுக்கு பத்து பாவங்களைச் செய்கிற விதமாக ஒரு வருஷத்திலே 3650 பாவங்களைக் கட்டிக் கொண்டிருப்பான்.சராசரியாக 60 வருடம் வாழும் ஒரு மனிதன் தனது ஆயுட்காலத்தில் 182500(50*10*365) பாவங்களைச் செய்திருப்பானே. இப்படி பாவங்களைக் கட்டிக் கொண்ட மனிதன் எந்த அளவிற்கு சர்வேசுரனுடைய நீதிக்குப் பரிகாரமாக தண்டனை இடப்பட வேண்டியதாய் இருக்கும் . ஒரு பாவத்துக்கு ஒரு நாள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனையோடு சுத்தகரிக்கப்பட வேண்டுமென்றாலும் , இம் மனிதன் 182500 நாட்கள்(500 வருடங்கள்)அந்த அகோர நெருப்பிலே வேக வேண்டும் , சர்வேசுரனைக் காணாமல் இருக்க வேண்டும் , இத்தனை நாட்கள் நம்மால் காய்ச்சலோடும்,அல்லது பல்வலியோடும் அல்லது வாயிற்று வலியோடும் வருத்தப்பட்டுக் கிடக்க வேண்டுமென்றால் பொறுக்கக் கூடுமோ சொல்லுங்கள் . அந்தந்த பாவம் சொற்ப பாவமென்றாலும் அவைகள் அம்மாத்திரமான பெரும் தொகையாய் இருக்கி...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 நான் என் காவல் தூதரைப் பார்த்தேன், அவர் என்னைப் பின்தொடரும்படி கட்டளையிட்டார். ஒரு கணத்தில் நான் நெருப்பு நிறைந்த ஒரு மூடுபனி இடத்தில் இருந்தேன், அதில் துன்பப்பட்ட ஆத்மாக்களின் பெரும் கூட்டம் இருந்தது. அவர்கள் மனமுவந்து பிரார்த்தனை செய்தார்கள், ஆனால் பயனில்லை, அவர்களுக்காக; நாம் மட்டுமே உதவ முடியும். அவர்களை எரித்துக்கொண்டிருந்த தீப்பிழம்புகள் என்னைத் தொடவே இல்லை. என் காவல் தூதர் ஒரு கணமும் என்னை விட்டு விலகவில்லை. இந்த ஆத்மாக்களிடம் அவர்களின் மிகப்பெரிய துன்பம் என்ன என்று கேட்டேன். கடவுளுக்காக ஏங்குவதுதான் அவர்களின் மிகப்பெரிய வேதனை என்று ஒரே குரலில் பதில் சொன்னார்கள்.   அர்ச் மரியா ஃபாஸ்டினா I saw my guardian angel, who ordered me to follow him. In a moment I was in a misty place full of fire in which there was a great crowd of suffering souls. They were praying fervently, but to no avail, for themselves; only we can come to their aid. The flames, which were burning them, did not touch me at all. My guardian angel did not leave me for an instant. I asked these s...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உத்தரிக்கும் ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்களை கடவுளுக்கு சிபாரிசு செய்யும் பழக்கம், அவர்கள் படும் பெரும் வேதனைகளைத் தணிக்கவும், விரைவில் அவர்களைத் தம்முடைய மகிமைக்குக் கொண்டு வரவும், இறைவனுக்கு மிகவும் பிரியமானது, நமக்கு மிகவும் லாபகரமானது.  இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மாக்கள் அவருடைய நித்திய வாழ்க்கைத் துணைவர்கள், மேலும் அவர்கள் சிறையில் இருந்து விடுதலை பெறுபவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள் அல்லது அவர்களின் வேதனைகளைத் தணிக்கிறார்கள்.  எனவே, அவர்கள் சொர்க்கத்திற்கு வரும்போது, ​​அவர்களுக்காக ஜெபித்த அனைவரையும் அவர்கள் நினைவுகூருவார்கள். அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார். The practice of recommending to God the souls in Purgatory, that He may mitigate the great pains which they suffer, and that He may soon bring them to His glory, is most pleasing to the Lord and most profitable to us. For these blessed souls are His eternal spouses, and most grateful are they to those who obtain their deliverance from prison, or even a mitigation of their torments. When, therefore, t...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உலகில் இருக்கின்ற அனைத்து நெருப்பு களையும் ஒன்று சேர்த்தாலும் உத்தரிக்கிற ஸ்தல நெருப்பிற்கு இணை ஆகாது. அர்ச்.அகுஸ்தினார். உத்தரிக்கும் ஸ்தலம் என்றால் என்ன? தங்கள் மரண நேரத்தில், முழுவதும் பரிசுத்தமாய் இராதவர்களுக்காக, கடவுளின் வாக்குக்கெட்டாத இரக்கமானது, சேசுக்கிறீஸ்துநாதரின் பேறுபலன்களை முன்னிட்டு, மறு உலகத்தில், சுத்திகரிப்பின் ஸ்தலம் ஒன்றைச் சிருஷ்டித்தது. இந்த ஸ்தலம் உத்தரிக்கிற ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே செலவிடப்படும் காலம் உத்தரிப்பின் காலம் எனப்படுகிறது.  உத்தரிக்கிற ஸ்தலத்தைப் பற்றிய கத்தோலிக்கத் திருச்சபையின் போதகம் பின்வரும் இரண்டு வாக்கியங்களில் எடுத்துரைக்கப்படுகிறது:  1) மறு உலகில் இப்படிப்பட்ட அற்பப் பாவங்களைப் பரிகரிப்பதற்கும், பாவத்திற்குரிய அநித்திய தண்டனைகளை அனுபவிப்பதற்கும் உரிய ஒரு தற்காலிக இடம் இருக்கிறது. மரிப்பதற்கு முன் தன் பாவங்களுக்குரிய அநித்திய தண்டனையை முழுவதும் அனுபவிக்காதவர்கள், அதை அனுபவித்துத் தீர்க்கும் இடமாகவும் அது இருக்கிறது.  2) விசுவாசிகள் தங்கள் ஜெபங்கள் மற்றும் நற்செயல்கள் மூலமாகவும், விசேஷமாக திவ்வியபலி பூசையின் ம...