புனிதர்களின் பொன்மொழிகள்
அர்ச்.ஜான் மரிய வியான்னி நிகழ்த்திய இதயத்தைத் தொடும் ஒரு மறையுரையில் உத்தரிக்கும் ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்கள் கூறியதாக பிரசங்கித்தது பின்வருமாறு...
(மரித்த தாயோ, தந்தையோ, மனைவியோ, கணவனோ,பிள்ளைகளோ, நண்பர்களோ ஆன்மா பேசுவது போல கற்பனைச் செய்து படிக்கவும்)
ஓ என் சகோதரர்களே,இக்கொடுமையிலிருந்து எங்களை மீட்டருளுங்கள்.அது உங்களால் மட்டுமே முடியும்.கடவுளின் உறவிலிருந்து பிரிந்து நிற்கும் கொடிய வேதனையை நீங்கள் அனுபவித்தால் மட்டுமே , எங்களின் வேதனைகளை புரிந்துக்கொள்ளமுடியும்.இறைநீதியின் பொருட்டு எரியும் நெருப்பில் வேதனையுறுவது கொடிய பிரிவுத் துயர் இது!
எனது பிள்ளைகளே, தந்தையே, தாய்மாரே,அழுங்கள் இவ்வளவு எளிதாக எங்களை மறக்க இயலுமோ? உங்களை இந்தளவு நேசித்த எங்களை இப்படி கைவிட்டு விட்டீர்களே? எங்களது தாங்க முடியாத நெருப்பு வேதனையை கண்டுக்கொள்ளமால் எப்படி மகிழ்ச்சியுடன் ஒய்வெடுக்க முடிகிறது.
நாங்கள் சம்பாதித்த சொத்து,வீடு அனைத்தையும் நீங்களே அனுபவிக்கிறீர்கள்; ஆனால் இந்தக்கொடிய நெருப்பில் எங்களை கைவிட்டுவிட்டீர்களா? தான தர்மங்கள் எதுவும் செய்யாமல் எங்களுக்கு உதவும்படி திருப்பலி எதுவும் ஒப்புக்கொடுக்காமல் வாழுகிறீர்களே ?எங்களது இக்கொடிய சிறைச்சாலையை திறக்க உங்களால் இயலும் என்றாலும் நீங்கள் எங்களை கைவிடுகிறீர்களே!.எத்துனை கொடுமயானது இத்துன்பங்கள்.
தூய்மை பெறும் ஆன்மாக்களும் நாமும்.
அருட்தந்தை தாமஸ் அம்பாட்டுகுழியில்.வி.சி
சேசுவுக்கே புகழ் !
தேவமாதாவே வாழ்க!
அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment