புனிதர்களின் பொன்மொழிகள்
எனது அருமை சகோதரர்களே ! ஏராளாமான பாவங்கள் செய்த நாம்,அவற்றை பாவமன்னிப்பு எனும் திருவருட்சாதனத்தில் அறிக்கையிட்டோம் என்ற ஒரே காரணத்துக்காக,அதற்கான தகுந்த பரிகாரம் செய்யாமல் இருந்தால், நாம் எத்தனை ஆண்டுகள் உத்தரிக்கும் ஸ்தலத்தில் வேதனை அனுபவிக்க நேரிடும். ?
புனித.ஜான் மரிய வியான்னி.
1.நம் வாழ்வில் செய்த சாவான பாவத்திற்கு நல்ல பாவசங்கீர்தனம் செய்தால் *நரகம்* கிடையாது.
உதாரணம் - கருக்கலைப்பு(Abortion) செய்துவிட்டு ஒப்புரவு திருவருட்சாதனத்தில் பாவமன்னிப்பு பெற்றால் நரகம் கிடையாது.ஆனால் உத்தரிக்கும் ஸ்தலம் உண்டு.
2.ஒப்புரவு திருவருட்சாதனத்தில் மன்னிப்பு பெற்ற பாவத்திற்கு முறையான பாவ பரிகாரங்கள் செய்தால் *உத்தரிக்கும் ஸ்தலமும்* கிடையாது.
உதாரணம் - கருவிலே சிசுவை கொலை *செய்த பாவத்திற்கு ஈடு செய்யும் விதமாக வாழும்போதே பரிகாரங்கள் செய்தால் உத்தரிக்கும் ஸ்தலமும் கிடையாது.நான் கருவிலே சிசுவை அழித்தேன் என்ற மனவருத்ததோடு அநாதை குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்வது.நமக்கு வரும் துன்பங்களை செய்த பாவத்திற்கு தண்டனையாக அமைந்த மனதோடு ஏற்றுக்கொள்வது.திருப்பலி,செபமாலை,சிலுவைப் பாதையில் பக்தியுடன் பாவபரிகாரத்திற்காக ஒப்புக்கொடுப்பது.ஒறுத்தல் முயற்சிகளை செய்வது உத்தரிக்கும் ஸ்தலத்தை தவிர்க்கும்.இது கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு மட்டுமல்ல உடந்தையாக இருந்த கணவன்,மருத்துவர் உதவி செய்த அனைவருக்கும் பொருந்தும்.
சேசுவுக்கே புகழ் !
தேவமாதாவே வாழ்க!
அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..
Comments
Post a Comment