புனிதர்களின் பொன்மொழிகள்
உலகில் இருக்கின்ற அனைத்து நெருப்பு களையும் ஒன்று சேர்த்தாலும் உத்தரிக்கிற ஸ்தல நெருப்பிற்கு இணை ஆகாது.
அர்ச்.அகுஸ்தினார்.
உத்தரிக்கும் ஸ்தலம் என்றால் என்ன?
தங்கள் மரண நேரத்தில், முழுவதும் பரிசுத்தமாய் இராதவர்களுக்காக, கடவுளின் வாக்குக்கெட்டாத இரக்கமானது, சேசுக்கிறீஸ்துநாதரின் பேறுபலன்களை முன்னிட்டு, மறு உலகத்தில், சுத்திகரிப்பின் ஸ்தலம் ஒன்றைச் சிருஷ்டித்தது. இந்த ஸ்தலம் உத்தரிக்கிற ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே செலவிடப்படும் காலம் உத்தரிப்பின் காலம் எனப்படுகிறது.
உத்தரிக்கிற ஸ்தலத்தைப் பற்றிய கத்தோலிக்கத் திருச்சபையின் போதகம் பின்வரும் இரண்டு வாக்கியங்களில் எடுத்துரைக்கப்படுகிறது:
1) மறு உலகில் இப்படிப்பட்ட அற்பப் பாவங்களைப் பரிகரிப்பதற்கும், பாவத்திற்குரிய அநித்திய தண்டனைகளை அனுபவிப்பதற்கும் உரிய ஒரு தற்காலிக இடம் இருக்கிறது. மரிப்பதற்கு முன் தன் பாவங்களுக்குரிய அநித்திய தண்டனையை முழுவதும் அனுபவிக்காதவர்கள், அதை அனுபவித்துத் தீர்க்கும் இடமாகவும் அது இருக்கிறது.
2) விசுவாசிகள் தங்கள் ஜெபங்கள் மற்றும் நற்செயல்கள் மூலமாகவும், விசேஷமாக திவ்வியபலி பூசையின் மூலமாகவும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் துன்புறும் ஆத்துமங்களுக்கு உதவி செய்ய முடியும்.
உத்தரிக்கும் ஸ்தலத்தில் வேதனையுறும் நமது குடும்பத்தில் மரித்த ஆன்மாக்கள் நித்திய இளைப்பாற்றிக்காக தொடர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுத்து ,செபமாலை செபிப்பது,ஒருத்தல் பரிகாரங்களை செய்து அவர்களது பரிகரிக்கும் தண்டனைகளை குறைக்க வேண்டியது ஒவ்வொரு கத்தோலிக்கர்களின் கடமை.
சேசுவுக்கே புகழ் !
தேவ மாதாவே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment