புனிதர்களின் பொன்மொழிகள்

 


நீதிமானானவன் நாளொன்றுக்கு ஏழு தரம் பாவத்தைக் கட்டிக் கொள்ளுகிறான் என்று சத்திய வேதத்திலே எழுதி இருக்கிறது .உதாரணமாக ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு பத்து சொற்ப பாவங்களைக் கட்டிக் கொள்ளுகிறான் என்றால், ஒரு வருஷத்திலே அந்த மனுஷன் நாளொன்றுக்கு பத்து பாவங்களைச் செய்கிற விதமாக ஒரு வருஷத்திலே 3650 பாவங்களைக் கட்டிக் கொண்டிருப்பான்.சராசரியாக 60 வருடம் வாழும் ஒரு மனிதன் தனது ஆயுட்காலத்தில் 182500(50*10*365) பாவங்களைச் செய்திருப்பானே. இப்படி பாவங்களைக் கட்டிக் கொண்ட மனிதன் எந்த அளவிற்கு சர்வேசுரனுடைய நீதிக்குப் பரிகாரமாக தண்டனை இடப்பட வேண்டியதாய் இருக்கும் . ஒரு பாவத்துக்கு ஒரு நாள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனையோடு சுத்தகரிக்கப்பட வேண்டுமென்றாலும் , இம் மனிதன் 182500 நாட்கள்(500 வருடங்கள்)அந்த அகோர நெருப்பிலே வேக வேண்டும் , சர்வேசுரனைக் காணாமல் இருக்க வேண்டும் , இத்தனை நாட்கள் நம்மால் காய்ச்சலோடும்,அல்லது பல்வலியோடும் அல்லது வாயிற்று வலியோடும் வருத்தப்பட்டுக் கிடக்க வேண்டுமென்றால் பொறுக்கக் கூடுமோ சொல்லுங்கள் . அந்தந்த பாவம் சொற்ப பாவமென்றாலும் அவைகள் அம்மாத்திரமான பெரும் தொகையாய் இருக்கிறதென்று கண்டு அப்பேற்பட்ட தண்டனைகளுக்குக் காரணம் ஆகிறதினால் அவைகளைச் சொற்ப பொல்லாப்பென்று சொல்லுவீர்களோ ? பயப்படாமல் இருப்பீர்களோ?

 அர்ச் அகுஸ்தீனூஸ் விளக்கம்

சர்வேசுரனின் நீதியின் படி மரித்து பல வருடங்களாக உத்தரிக்கும் ஸ்தலத்தில் வேதனையுறும் நமது குடும்பத்தில் மரித்த ஆன்மாக்களுக்கு நாம் மனமுவந்து ஒப்புக்கொடுக்கும் திருப்பலி,செபமாலை,தான தர்ம புண்ணியங்களால் அவர்கள் தண்டனையை குறைக்கமுடியும் என அறியாமல் இருப்பதும்,‍அறிந்திருந்தும் எதுவும் செய்யமாலிருப்பதும் எப்பேற்பட்ட மடத்தனம்.நாளை நமக்கும் இதே நிலைமை தான்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!