Posts

Showing posts from May, 2019

இறைவனின் இறைவார்த்தைகள் 31/05/2019

பெற்ற தந்தையரை மதிப்போார் பாவங்களுக்கு கழுவாய் தேடிகொள்கின்றனர்.அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர்.சொல்லாலும் செயலாலும் உங்...

இறைவனின் இறைவார்த்தைகள் 30/05/2019

பிள்ளாய் முழுமனதோடு ஆண்டவரை நம்பு ;உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே .நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனதில் வைத்து செய் அப்போது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்...

இறைவனின் இறைவார்த்தைகள் 29/05/2019

உம்முடைய அழியா ஆவி எல்லாவற்றிலும் உள்ளது.ஆகையால் தவறு செய்பவர்களைச் சிறிது சிறிதாய்த் திருத்துகின்றீர்; அவர்கள் எவற்றால் பாவம் செய்கிறார்களோ அவற்றை நினைவுபடு...

இறைவனின் இறைவார்த்தைகள் 28/05/2019

சோம்பேறியின் விளைநிலம் வழியாக நான் நடந்து சென்றேன் ;அந்த மதிகேடருடைய திராட்சைத் தோட்டத்தினூடே சென்றேன். அதில் எங்கும் முட்செடி காணப்பட்டது ,நிலம் முழுவதையும் காஞ்சொறி செடி மூடியிருந்தது அதன் சுவர் இடிந்து கிடந்தது.அதை நான் பார்த்ததும் சிந்தனை செய்தேன் ;அந்தக் காட்சி எனக்குக் கற்ப்பித்த பாடம் இதுவே ,இன்னும் சிறிது நேரம் தூங்கு ;இன்னும் சிறிது நேரம் உறங்கு ;கையை முடக்கிக் கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திரு ,அப்போது வறுமை உன்மீது வழிப்பறி கள்வனை போல் பாயும்;ஏழ்மை நிலை உன்னைப் போர்வீரனை போலத்தாக்கும். நீதிமோழிகள் 25(30-34) நண்பர்களே சோம்பல்  உங்களிடம் இருந்தால் உங்கள் உடலில் பலம் இருந்தாலும் அதை உழைப்பிற்காக பபயன்படுத்தமாட்டீர்கள்.அனைத்துஆற்றலும் இருக்கும் ஆனால் முழுமையாக வெளிபடுத்த மாட்டீர்கள். இறைவன் உங்களுக்கு தேர்ந்த விதைகளை(ஆற்றல்) கைகளில் அளித்துள்ளார், முதலில் அதை உணருங்கள். சோம்பலை ஓட்டிவிடுங்கள் ,ஆற்றல் விதைகளை மண்ணில் விதைத்து  கடினமாக உழையுங்கள் ,மிக கடினமாக உழையுங்கள்.உழைப்பின் பயனாக நீங்கள் விதைத்து வளர்ந்த மரங்களிலிருந்து இறைவன் தரும் கனிகளை வரமாக பெறுங...

இறைவனின் இறைவார்த்தைகள் 27/05/2019

சோம்பேறிகள் மாசுபடிந்த கல் போன்றவர்கள்;அவர்களது இழிவு கண்டு எல்லாரும் எள்ளி நகையாடுவர்.சோம்பேறி்கள் குப்பைமேட்டுக்கு ஒப்பானவர்கள் அதை தொடுவோர் அனைவரும் கையை உதறித் தட்டி விடுவர். சீராக்கின் ஞானம் 22(1-2) நணபர்களே இன்னும் எத்தனை நாட்கள் சோம்பேறிகளாக வாழபோகிறீர்கள் ? இன்னும் எத்தனை நாட்கள் சோம்பேறிதனம் உங்களை ஆளபோகிறது?இறைவனின் படைப்புகள் அனைத்துமே படைப்பின் மேன்மையை உணர்ந்து ஒவ்வோரு நாளையும் சுறுசுறுப்புடன்/ஆராவாரத்தோடு தொடர்கின்றது.ஆனால் படைப்புகளை ஆண்டு ஆளவேண்டிய நீங்கள்(மனிதர்கள்) படைப்புகளின் முதன்மையான நீங்கள் வார முதல் நாள் பணியை தொடங்க ஏன் இவ்வளவு மெத்தனம்?நாளை பார்த்து கொள்ளலாம்,பிறகு செய்யலாம்,நம்மை யார் கேள்வி கேட்பார் இதுவே சோம்பல் தன்மையின் நுழைவாயில் .நணபர்களே உங்கள் முன்னேற்ற வாழ்வின் முதல் தடைகல்லே சோம்பல் தான் உணர்ந்து பாருங்கள் உடைத்தெறியுங்கள் .உடனே செய்ய வேண்டும் ,இன்றே முடித்தாக வேண்டும். எனற நிலைக்கு மாறுங்கள், நீங்கள் வாழ்வில் அடைய இருக்கும் வெற்றிக்கான பயண தூரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். இயேசுவிற்கே புகழ! அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அ...

இறைவனின் இறைவார்த்தைகள் 26/05/2019

       ஆண்களே உங்கள் மனைவியர் வலுக்குறைந்தவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து அவர்களோடு இணைந்து வாழுங்கள் வாழ்வு தரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்பு கொடுங்கள் அப்போது தான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும். நீங்கள் எல்லாரும் ஒருமனப் பட்டிருங்கள்.பிறரிடம் இரக்கமும் சகோதர அன்பும் பரிவுள்ளமும் மனதாழ்மையும் கொண்டிருங்கள் .தீமைக்கு பதில் தீமை செய்யாதீர்கள் பழிச்சொல்லுக்குப் பழிச்சொல் கூறாதீர்கள் ,மாறாக ஆசி கூறுங்கள்.ஏனென்றால்,கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக்கொள்ளவதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். 1பேதுரு3(7-8)

இறைவனின் இறைவார்த்தைகள் 24/05/2019

திருமணமான பெண்களே , உங்கள் கணவருக்கு பணிந்திருங்கள்.இதனால் அவர்களுள் சிலர் கடவுளுடைய வார்த்தையை ஏற்காதிருந்தாலும் மரியாதையுடைய உங்கள் தூய நடத்தையைக் கண்டு ,கவரபட்டு நல்வழிப்படுத்தப்படுவர் .அப்போது வார்த்தையே தேவைப்படாது .முடியை அழகுபடுத்துதல்,பொன் நகைகளை அணிதல்,ஆடைகளை அணிதல்,போன்ற வெளிப்படையான அலங்காரமல்ல  மாறாக , மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும்.கடவுளின் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது. 1பேதுரு 3(1-4)

இறைவனின் இறைவார்த்தைகள் 23/05/2019

அன்பு நண்பர்களே! உங்களை படைத்த ஆண்டவருக்கு அஞ்சுங்கள்,உங்களை மனிதனாக படைத்து சுதந்திரமாக  வாழ இந்த உலக வாழ்கை கொடுத்தவர் அவரே! உலக ஆசைகளின் பின் செல்லமால் தெரிந்தே தீமைள் செய்யும்போது அவருக்கு அஞ்சி மனம் மாருங்கள் .ஆண்டவருக்கு ஆஞ்சி இறையச்சத்தோடு வாழுங்கள் எதற்கும்/எவறுக்கும் பயப்படாமல்  வாழும் இறைஆசீரை பெறுங்கள். "ஆண்டவருக்கு அஞ்சுவோர் உயிர்வாழ்வர்;அவர்களது நம்பிக்கை தங்களை காப்பாற்றுகிறவர்மேல் இருக்கிறது. ஆண்டவருக்கு அஞ்சுபவர்கள் எதற்கும் நடுங்கவோ , தயங்கவோ மாட்டார்கள் ஏனெனில் அவரே அவர்களது நம்பிக்கை" சீராக்கின் ஞானம் 34[13,14] இயேசுவிற்கே புகழ! அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!

இறைவனின் இறைவார்த்தைகள் 22/05/2019

அன்பு நண்பர்களே ! உங்களை படைத்த ஆண்டவரை வழிபடும்போது அவரை புகழ்ந்து வாழ்த்தி பாடுங்கள் உங்களை இந்த உலகில் ஏதோ ஒரு காரணத்திற்க்காக மனிதனாக படைத்திருக்கிறார் அதற்காக எண்ணிலடங்கா நன்றி கூறுங்கள் ! உங்கள் வழிபாட்டில் உங்கள் தேவைகளும்/வேண்டுதல்களும் மட்டுமே உள்ளதே தவிர நீங்கள் கேட்காமளே தருபவரை புகழுவதில்லை வாழ்த்துவதில்லை அவர் வரமாக தந்தவைகளுக்கு நன்றி செலுத்தவதில்லை ,  மனம் மாறுங்கள் மனம் திரும்பி வழிபடுங்கள் ! உங்களை கேட்காமலே உங்களுக்கு உயிர் தந்த இறைவனுக்கு முதலில் நன்றி கூறுங்கள் . "எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே !நீர் வாழ்த்துப் பெறுவீராக ;என்றென்றும் நீர் புகழ்பெறவும் ஏந்திப் போற்றப்பெறவும் தகுதியுள்ளவர். மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது எக்காலத்துக்கும் அது புகழ்ந்தேத்தற்குரியது ஏத்தி போற்றக்குரியது " தானியேல்1-29 "ஆண்டவரை வழிபடுபவோரே, தெய்வங்ளுக்கெள்ளாம் மேலான கடவுளை நீங்கள் அனைவரும் வாழ்த்துங்கள் ;அவருக்குப் புகழ் பாடுங்கள் , நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவரது இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது" தானியேல் 1-67 ...

இறைவனின் இறைவார்த்தைகள் 21/05/2019

அன்பு நண்பர்களே நீங்கள் நலிவடைந்தோர்க்கும்/ஏழைகளுக்கும்/உங்கள் கீழ் வேலை செய்பவருக்கும்/உங்கள் அதிகாரத்தின் கீழ் இருப்பவர்களுக்கும்/மாற்று திறனாளிகளுக்கு/திருநங்கைளுக்கு உதவ முன்வரவில்லை என்றாலும் பராவாயில்லை ஆனால் அவர்களை கேளி செய்து அதில் சந்தோசமடையாதீர்கள்,மனம் நோகும்படி நடந்து கொள்ளாதீர்கள் அப்படி நீங்கள் செய்வதால் நீங்கள் உங்களை படைத்தவரையே மனம் வேதனை அடைய செய்கறீர்கள் என்பதை இன்று முதல் உணருங்கள் மனம் திருந்துங்கள். ஏழையை ஏளனம் செய்கிறவர் அவரை உண்டாக்கினவரையே இகழுகிறார் பிறருடைய இக்கட்டை பார்த்து மகிழ்கிறவர் தண்டனைக்கு தப்பமாட்டார்கள் நீதிமொழிகள்18-5 ஏழைக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்கு கடன் கொடுக்கிறார் ;அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பி தந்து விடுவார். நீதிமொழிகள் 20-17. இயேசுவிற்கே புகழ! அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!

இறைவனின் இறைவார்த்தைகள் 20/05/2019

                                          கடன் தோல்லையா/வருமானமின்மையா/செல்வங்கள் இருந்தும் வாழ்க்கையில் நிம்மதி இல்லையா?  அபாபோது உடனடியாக நீங்கள் இதை செய்தாக வேண்டும்1.வருமானமே இல்லாதவர்கள் இல்லாதவருக்கு இயன்றதை கொடுங்கள்2.வருமானம் பெறுபவர்கள ஓவ்வாரு மாதமும்(1/10) பத்தில் ஒரு பங்கு உங்களை படைத்த ஆண்டவருக்கு கொடுங்கள்.ஆனால் ஒரு நிபந்தனை நீங்கள் செய்வது உங்கள் ஆன்மாவை தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது .இவ்வாறு நீங்கள் கடைபிடித்தால் உங்களை படைத்தவர் உங்களை ஆசிர்வதித்து பன்மடங்கு திரும்ப அருள்வார். ""கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்; அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படி நனறாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்.நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்"" "லூக்கா 6-38 இயேசுவிற்கே புகழ! அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!