இறைவனின் இறைவார்த்தைகள் 29/05/2019
உம்முடைய அழியா ஆவி எல்லாவற்றிலும் உள்ளது.ஆகையால் தவறு செய்பவர்களைச் சிறிது சிறிதாய்த் திருத்துகின்றீர்; அவர்கள் எவற்றால் பாவம் செய்கிறார்களோ அவற்றை நினைவுபடுத்தி அவர்களை எச்சரிக்கின்றீர்;ஆண்டவரே அவர்கள் தீமையிலிருந்து விடுபடவும் உம்மேல் நம்பிக்கை கொள்ளவுமே இவ்வாறு செய்கின்றீர்.
அவர்கள் தீய தலைமுறையினர் என்பதும் அவர்களது சிந்தனை முறை ஒருபோதும் மாறாது என்பதும் உமக்குத் தெரியாதனவல்ல இருப்பினும் நீர் அவர்களை சிறிது சிறிதாய் தண்டித்து மனம் திரும்பி அவரஙளுக்கு வாய்ப்பு கொடுத்தீர்
சாலமோனின் ஞானம் 12(2,10 )
நண்பர்களே உங்களை படைத்த ஆண்டவரை தினமும் வணங்காமால்/நன்றி கூறாமல்/இறையச்சம் இன்றி தொடர்ந்து பாவங்களை செய்து இறைவனை விட்டு வெகு தூரம் சென்றாலும்.அவர் உங்களை கைவிடுவதில்லை.உங்களுக்கும் அவருக்கும் உள்ள இடைவேளியை குறைபதற்கே எந்த பாவம் செய்து கடவுளுக்கு எதிராக சென்றீர்களோ அதை நினைவு படுத்தி எச்சரிக்கின்றார் இறைவன் தரும் அரிய வாய்ப்பினை பயன்படுத்தி
மனம் பாருங்கள் உங்கள் மனம் மாறாதது என தெரிந்தும் சிறிது சிறதாய் தண்டித்து அவர் மடியில் அமரவேண்டும் உங்களை அழைக்கிறார்.
Comments
Post a Comment