இறைவனின் இறைவார்த்தைகள் 28/05/2019
சோம்பேறியின் விளைநிலம் வழியாக நான் நடந்து சென்றேன் ;அந்த மதிகேடருடைய திராட்சைத் தோட்டத்தினூடே சென்றேன். அதில் எங்கும் முட்செடி காணப்பட்டது ,நிலம் முழுவதையும் காஞ்சொறி செடி மூடியிருந்தது அதன் சுவர் இடிந்து கிடந்தது.அதை நான் பார்த்ததும் சிந்தனை செய்தேன் ;அந்தக் காட்சி எனக்குக் கற்ப்பித்த பாடம் இதுவே ,இன்னும் சிறிது நேரம் தூங்கு ;இன்னும் சிறிது நேரம் உறங்கு ;கையை முடக்கிக் கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திரு ,அப்போது வறுமை உன்மீது வழிப்பறி கள்வனை போல் பாயும்;ஏழ்மை நிலை உன்னைப் போர்வீரனை போலத்தாக்கும்.
நீதிமோழிகள் 25(30-34)
நண்பர்களே சோம்பல்
உங்களிடம் இருந்தால் உங்கள் உடலில் பலம் இருந்தாலும் அதை உழைப்பிற்காக பபயன்படுத்தமாட்டீர்கள்.அனைத்துஆற்றலும் இருக்கும் ஆனால் முழுமையாக வெளிபடுத்த மாட்டீர்கள். இறைவன் உங்களுக்கு தேர்ந்த விதைகளை(ஆற்றல்) கைகளில் அளித்துள்ளார், முதலில் அதை உணருங்கள். சோம்பலை ஓட்டிவிடுங்கள் ,ஆற்றல் விதைகளை மண்ணில் விதைத்து கடினமாக உழையுங்கள் ,மிக கடினமாக உழையுங்கள்.உழைப்பின் பயனாக நீங்கள் விதைத்து வளர்ந்த மரங்களிலிருந்து இறைவன் தரும் கனிகளை வரமாக பெறுங்கள்.
இங்கு
விதைகள்-ஆற்றல்,
மரம்-நீங்கள் செய்யும் வேலை/தொழில்
Comments
Post a Comment