இறைவனின் இறைவார்த்தைகள் 27/05/2019


சோம்பேறிகள் மாசுபடிந்த கல் போன்றவர்கள்;அவர்களது இழிவு கண்டு எல்லாரும் எள்ளி நகையாடுவர்.சோம்பேறி்கள் குப்பைமேட்டுக்கு ஒப்பானவர்கள்
அதை தொடுவோர் அனைவரும் கையை உதறித் தட்டி விடுவர்.
சீராக்கின் ஞானம் 22(1-2)

நணபர்களே இன்னும் எத்தனை நாட்கள் சோம்பேறிகளாக வாழபோகிறீர்கள் ? இன்னும் எத்தனை நாட்கள் சோம்பேறிதனம் உங்களை ஆளபோகிறது?இறைவனின் படைப்புகள் அனைத்துமே படைப்பின் மேன்மையை உணர்ந்து ஒவ்வோரு நாளையும் சுறுசுறுப்புடன்/ஆராவாரத்தோடு தொடர்கின்றது.ஆனால் படைப்புகளை ஆண்டு ஆளவேண்டிய நீங்கள்(மனிதர்கள்) படைப்புகளின் முதன்மையான நீங்கள் வார முதல் நாள் பணியை தொடங்க ஏன் இவ்வளவு மெத்தனம்?நாளை பார்த்து கொள்ளலாம்,பிறகு செய்யலாம்,நம்மை யார் கேள்வி கேட்பார் இதுவே சோம்பல் தன்மையின் நுழைவாயில் .நணபர்களே உங்கள் முன்னேற்ற வாழ்வின் முதல் தடைகல்லே சோம்பல் தான் உணர்ந்து பாருங்கள் உடைத்தெறியுங்கள் .உடனே செய்ய வேண்டும் ,இன்றே முடித்தாக வேண்டும். எனற நிலைக்கு மாறுங்கள், நீங்கள் வாழ்வில் அடைய இருக்கும் வெற்றிக்கான பயண தூரத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

இயேசுவிற்கே புகழ! அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!