இறைவனின் இறைவார்த்தைகள் 22/05/2019
அன்பு நண்பர்களே ! உங்களை படைத்த ஆண்டவரை வழிபடும்போது அவரை புகழ்ந்து வாழ்த்தி பாடுங்கள் உங்களை இந்த உலகில் ஏதோ ஒரு காரணத்திற்க்காக மனிதனாக படைத்திருக்கிறார் அதற்காக எண்ணிலடங்கா நன்றி கூறுங்கள் ! உங்கள் வழிபாட்டில் உங்கள் தேவைகளும்/வேண்டுதல்களும் மட்டுமே உள்ளதே தவிர நீங்கள் கேட்காமளே தருபவரை புகழுவதில்லை வாழ்த்துவதில்லை அவர் வரமாக தந்தவைகளுக்கு நன்றி செலுத்தவதில்லை , மனம் மாறுங்கள் மனம் திரும்பி வழிபடுங்கள் ! உங்களை கேட்காமலே உங்களுக்கு உயிர் தந்த இறைவனுக்கு முதலில் நன்றி கூறுங்கள் .
"எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே !நீர் வாழ்த்துப் பெறுவீராக ;என்றென்றும் நீர் புகழ்பெறவும் ஏந்திப் போற்றப்பெறவும் தகுதியுள்ளவர்.
மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது எக்காலத்துக்கும் அது புகழ்ந்தேத்தற்குரியது ஏத்தி போற்றக்குரியது "
தானியேல்1-29
"ஆண்டவரை வழிபடுபவோரே, தெய்வங்ளுக்கெள்ளாம் மேலான கடவுளை நீங்கள் அனைவரும் வாழ்த்துங்கள் ;அவருக்குப் புகழ் பாடுங்கள் , நன்றி செலுத்துங்கள்;
ஏனெனில் அவரது இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது"
தானியேல் 1-67
இயேசுவிற்கே புகழ! அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!
Comments
Post a Comment