இறைவனின் இறைவார்த்தைகள் 31/05/2019
பெற்ற தந்தையரை மதிப்போார் பாவங்களுக்கு கழுவாய் தேடிகொள்கின்றனர்.அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர்.சொல்லாலும் செயலாலும் உங்கள் பெற்றோரை மதியுங்கள் அப்பொழுது உங்களுக்கு ஆண்டவரின் ஆசி கிடைக்கும்.குழந்தாய் உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு அவரது வாழ்நாளெல்லாம் அவர் உள்ளத்தை புண்படுத்தாதே அவரது அறிவாற்றால் குறைந்தாலும் பொறுமையை கடைப்பிடி,நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே.
தந்தையரைக் கைவிடுவோர் கடவுளைப் பழிப்பவர் போல்வர்; அன்னைக்குச் சினமூட்டுவோர் ஆண்டவரால் சபிக்கப்படுவர்.
சீராக்கின் ஞானம் 3(3,4,8,12,13,16)
நணபர்களே உங்களை படைத்த இறைவனை வழிபடும் முன் உங்கள் பெற்றோர்களுடன் சமாதானம் செய்து வாருங்கள்.உங்களை உலகிற்கு கொடுத்து வாழ வைத்தவர்களுடனே அமைதி இல்லாமல் மனகசப்போடு ஒரே வீட்டிலே பேசாமல் வாழ்வது ஒரு வாழ்க்கையா? உன்னுடைய வேலையில்(job) அழிந்து போகும் பணத்திற்காக / பதவிக்காக உன் மீது தவறு இருந்தாலும் பணிந்து /தன்மானத்தில் இறங்கி போகும் மனிதா உன்னை பெற்றவர்களிடம் நிலையான அழியாத அன்புக்காக இறங்கி போக முடியாதோ?உங்களுக்காவே வாழும் ஒரே உறவு உங்கள் பெற்றோர்களே, மனம் திரும்புங்கள் தாய்/தந்தை - மகன்/மகள் உறவை புதுப்பியுங்கள் ,அறிவாற்றல் குறைந்த பெற்றொர்கள் என்றாலும் பொறுமையோடு திருகுடும்பமாய் வாழ்ந்து இறைவனின் ஆசியை பெறுங்கள்.
இயேசுவிற்கே புகழ! அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!
Comments
Post a Comment