Posts

Showing posts from August, 2025

புகைப்படக் கலைஞர்கள்ஸ தேவாலயத்தில் பயபக்தியோடு நடந்துக்கொள்ளவேண்டும்

Image
  புகைப்படக் கலைஞர்கள் திருப்பலியின் போது அல்லது தேவாலயத்திற்குள் நடக்கும் எந்த நிகழ்வுகளிலும் படத்தில் உள்ளவர் போலவே நடந்து கொள்ள வேண்டும், கத்தோலிக்கராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் பயபக்தியையும் முறையான மாரியாதையை வெளிப்படுத்த வேண்டும், நற்தருணையை மதிக்காமல்  சுதந்திரமாக சுற்றித் திரியக்கூடாது! விசுவாசிகள் பங்குபெறும் புனித செயல்களில் கவனம் செலுத்துவதைத் தடுக்கவோ அல்லது திசைதிருப்பவோ கூடாது.  மக்கள் மண்டியிட்டால், புகைப்படக் கலைஞர்களும் மண்டியிட வேண்டும்! This is how photographers in the church should act during the Mass or any ocassions inside the Church, Catholic or not they should show reverence and proper decorum, not freely roaming around without respect for the Blessed Sacrament! They should not interrupt nor distract the faithfuls from focusing on the sacred actions taking place.  If the people are kneeling, if possible photographers should also kneel!

புனித மிக்கேல் அதிதூதரை நோக்கி ஜெபம்

Image
  புனித மிக்கேல் அதிதூதரை நோக்கி ஜெபம் அதிதூதரான புனித மிக்கேலே, எங்கள் போராட்டத்தில் எங்களைத் தற்காத்தருளும். பசாசின் வஞ்சக தந்திரங்களையும், அதன் சற்பனைகளையும் அகற்றி எங்களுக்குத் துணையாயிரும். தாழ்மையான எங்கள் மன்றாட்டைக் கேட்டு சர்வேசுரன் பசாசை கண்டிப்பாராக. நீரும் மோட்ச சேனைக்குத் தலைமையானவரே, ஆத்துமங்களை அழிக்கிறதற்கு உலகத்தில் சுற்றித் திரியும் பேயையும், மற்ற துஷ்ட அரூபிகளையும் தேவ வல்லமையின் பலத்தால் நரகத்தில் தள்ளுவீராக.   ஆமென். St. Michael the Archangel, defend us in battle, be our protection against the wickedness and snares of the devil. May God rebuke him we humbly pray; and do thou, O Prince of the Heavenly host, by the power of God, cast into hell Satan and all the evil spirits who prowl about the world seeking the ruin of souls. Amen.

புனித ஸ்நாபக அருளப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Image
  உண்மைக்கு சான்று பகர்வதே பணியாக கொண்டவரே !  அரசனாக இருந்தாலும் ஒரு மனைவி தான் வைத்திருக்க வேண்டும் என்ற ஆண்டவரின் கட்டளையை துணிந்து அறிவித்தவரே !  கருவிலேயே அர்ச்சிக்கப்பட்டவரே ! மெசியாவின் பிறப்பையும் இறைப்பையும் முன் அறிவித்தவரே ! பெண்களிடம் பிறந்தவர்களுள் தலைசிறந்தவரே !  கிறிஸ்துவின் கல்வாரி திருஇரத்தத்தின் பேறுபலனை முன்னதாக பெற்றவரே ! மீட்பருக்கே ஞானஸ்நானம் வழங்க தகதியற்றவன் என்றவரே ! மீட்பர் வளர வேண்டும் நானோ குறைய வேண்டும் என்றவரே ! உண்மைக்காவும், நீதிக்காகவும் தலையையே தந்தவரே ! புனித ஸ்நாப அருளப்பரே ! பொய்கள் அதிகரித்து,கிறிஸ்துவின் உண்மைகள் மறுக்கப்படும் இக்காலக்கட்டத்தில், நாங்கள் துன்பங்களுக்கு அஞ்சாமல்  உண்மையின்‌ குரலுக்கு என்றும் செவிக்கொடுக்கவும், சான்று பகிரவும் எங்களுக்காக மீட்பர் இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடும்.. புனித ஸ்நாபக அருளப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமேன்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நற்கருணையே கிறிஸ்தவக் குடும்பங்களை ஒன்றிணைக்கிறது. நற்கருணை ஆண்டவரை தவிர்க்கும் கிறிஸ்தவக் குடும்பங்களில் சகோதரத்துவமும், ஒற்றுமையும் அகன்றுவிடும். – புனித பீட்டர் ஜூலியன். The Eucharist is the link that binds the Christian family together. Take away the Eucharist and you have no brotherliness left, - St. Peter Julian Eymard. *ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன் நற்கருணயை தவிர்த்தால் குடும்ப உறவுகளில் பிளவுகள் ஏற்படும். சாவான பாவத்தோடு நற்கருணை பெற்றால் அலகையுடன் உறவு பலப்படும்.* வாசிக்க யோவான் 13-27 இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  சாத்தான் ஒருபோதும் தூங்குவதில்லை. பாவத்திற்குள் நம்மை இழுத்து இரட்சிப்பிலிருந்து விலக்குவதே அவனது நோக்கம். இந்த யுத்தத்தை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. திருவருட்சாதனங்கள், ஜெபம், வேதம், மற்றும் நல்லொழுக்க வாழ்க்கை என கடவுள் நமக்கு ஆயுதங்களைக் கொடுத்துள்ளார்: அவருடைய கிருபையால், சாத்தானை வெல்வது சாத்தியமாகும். 💪 "*அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள்.*" (எபே 6:11). Satan never sleeps. His mission is to pull us into sin and away from salvation. We can’t take the battle lightly. But God has given us weapons: prayer, Scripture ,the sacraments, and a life of virtue. With His grace, victory is possible. 💪 "Put on the full armor of God, so that you can take your stand against the devil’s schemes." Ephesians 6:11. இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உங்கள் மரணத்திற்கு பின்பு  மற்றவர்கள் உங்களுக்காக ஒப்புக்கொடுக்கும் பல திருப்பலிகளை விட, உங்கள் வாழ்நாளில் நீங்கள் பக்தியுடன்  கலந்து கொண்ட திருப்பலிகளே,  உங்கள் ஆன்மாவின்  நித்திய இளைப்பாற்றிக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும்! – புனித தந்தை பியோ A Mass well attended in life will be more useful for your salvation than many others celebrated for you after your death! - St. Padre Pio இயேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  மக்கள் நற்கருணையாக யாரை பெறுகிறோம் என்று உணர்ந்தால், அவர்கள் தாழ்மையுடன் மண்டியிட்டு பலிபீடத்துக்குச் செல்வார்கள். அப்படியிருக்க, வானத்தூதர்கள் நடுங்கும் அந்த இரகசியத்தை  மிக சாதரணமாக நாம் எவ்வாறு அணுக முடியும்? திருத்தந்தை பதிமூன்றாம் லியோ. “If people knew who they were receiving, they would crawl on their knees to the altar.” How then can we approach so casually what even the angels adore with trembling? Pope Leo XIII

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இயேசுவிடம் உங்களை ஒரு புனிதராக மாற்றும்படி கேளுங்கள். ஏனெனில் அவரால் மட்டுமே இது சாத்தியமாகும். தொடர்ந்து பாவசங்கீர்த்தனத்திற்கு செல்லுங்கள். இயன்றவரை  நற்கருணை ஆண்டவரை பெறச் செல்லுங்கள். – புனித டொமினிக் சாவியோ Ask Jesus to make you a saint. After all, only He can do that. Go to confession regularly and to Communion as often as you can," - St. Dominic Savio

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  திருவருட்சாதனமான நற்கருணையானது பேய்களை விரட்டியடிக்கிறது, பாவம் மற்றும் காமத்திற்கான தூண்டுதல்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது, பாவத்திலிருந்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்துகிறது, கடவுளின் கோபத்தை தனிக்கின்றது, கடவுளை அறியும் புரிதலை தெளிவுப்படுத்துகிறது, கடவுளின் அன்பால் நேசத்தையும் பாசத்தையும் தூண்டுகிறது, நம் நினைவுகளை ஆன்மீக இனிமையால் நிரப்புகிறது, முழு மனிதனையும் நன்மையில் உறுதிப்படுத்துகிறது, நித்திய மரணத்திலிருந்து(நரகம்) நம்மை விடுவிக்கிறது, ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்க்கான தகுதிகளை அதிகரிக்கிறது, நமது நித்திய வீட்டிற்கு(மோட்சம்) நம்மை அழைத்துச் செல்கிறது, மேலும் உடலை நித்திய ஜீவனுக்கு மீண்டும் உயிர்ப்பிக்கிறது. - புனித தாமஸ் அக்வினாஸ் The Sacrament of the Body of the Lord puts the demons to flight, defends us against the incentives to vice and to concupiscence, cleanses the soul from sin, quiets the anger of God, enlightens the understanding to know God, inflames the will and the affections with the love of God, fills the memory with spiritual sweetness, confirms the entire ...

நமது ஆன்மீக வாழ்வில் புனிதர்களின் பங்கு என்ன?

Image
*நமது ஆன்மீக வாழ்வில் புனிதர்களின் பங்கு என்ன?* *புனிதர்கள் நமது ஆன்மீகத் தோழர்கள், வழிகாட்டும் விளக்குகள் மற்றும் பரிந்துரையாளர்கள். *அவர்கள் தங்கள் விசுவசாம், விடாமுயற்சி மற்றும் கடவுள் மீதான அன்பினால் நம்மை ஊக்குவிக்கிறார்கள். *அவர்களின் முன்மாதிரியின் மூலம், சோதனைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் புனித வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதை  நமக்குக் கற்பிக்கிறார்கள். *அவர்களின் ஜெபங்கள் மூலம், அவர்கள் நம் தேவைகளை கடவுளின் சிம்மாசனத்தின் முன் கொண்டு வர உதவுகிறார்கள். *பரிசுத்தம் அனைவருக்கும் சாத்தியம் என்பதையும  - சாதாரண மக்கள் கடவுளின் கிருபையில் வாழும்போது அசாதாரணமான காரியங்களைச் செய்ய முடியும் என்பதை புனிதர்கள் நமக்கு நினைவூட்டுகிறார்கள்* அவர்களின் வாழ்க்கையிலிருந்து அதகிம் கற்றுக்கொள்வோம், அவர்களின் நற்பண்புகளால் ஈர்க்கப்படுவோம், மோட்சத்தை நோக்கிய நமது பயணத்தில் அவர்களின் பரிந்துரையை நாடுவோம். "நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள். 1 கொரி 11-1 *கடவுளுக்கு மேலாக (நற்கருணைக்கு மேலாக) புனிதர்களை உயரத்துவதும் தவறு.புனிதர்களுக்குரிய வணக்க மரியாதையை ...

பொன்மொழிகள்

Image
  நாம் தூங்கிவிட வேண்டும், சோர்வடைய வேண்டும், பயத்தில் மூழ்கி இருக்க வேண்டும், விரக்தியடைய வேண்டும், ஜெபிப்பதை நிறுத்த வேண்டும், ஒருபோதும் திருப்பலிக்குச் செல்லக்கூடாது, கடவுள் இல்லை என்பது போல் வாழ வேண்டும் என்றே பிசாசு விரும்புகிறான்.  -ஆயர் டொனால்ட் ஹையிங். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் 1பேதுரு 5-8 The devil wants us to fall asleep, give up, stay locked in fear, despair, stop trying, never go back to Mass, and live as if God does not exist."  -Bishop Donald Hyung. Be alert and of sober mind. Your enemy the devil prowls around like a roaring lion looking for someone to devour. 1 Peter 5:8 இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  ஒரு ஆன்மா எந்தளவிற்கு பரிசுத்தமாகவும், கற்புடனும் இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிகமாக நற்கருணைக்காக ஏங்குகின்றது. நற்கருணையிலிருந்தே அந்த ஆன்மா அனைத்து பாவச் சோதனைகளை எதிர்க்கும் வலிமையைப் பெறுகிறது.தனது தெய்வீக மணவாளன்/மணவாட்டியான இயேசுவுடன் மிக நெருக்கமாக அந்த ஆன்மா இணைக்கப்படுகிறது. "எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்" யோவான் 6:56 திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர். The more pure and chaste is a soul, the more it hungers for this Bread [Jesus in the Eucharist], from which it derives strength to resist all temptations to sins of impurity, and by which it is more intimately united with the Divine Spouse; 'He who eats My Flesh and drinks My Blood, abides in Me and I in him,'"John 6:56 - Pope Pius XII, Sacra Virginitas, On Consecrated Virginity

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நேரத்தை திறமையாக பயன்படுத்த சிறந்த வழி, தினமும் அரைமணிநேரம்  திருப்பலியில் செலவழிப்பதே. அருளாளர் பிரடெரிக் ஓசானம் The best way to economize time is to 'lose' half an hour each day attending Holy Mass." - Bls.Frederic Ozanam. இயேசுவுக்கே புகழ்‌! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.