புனித ஸ்நாபக அருளப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
உண்மைக்கு சான்று பகர்வதே பணியாக கொண்டவரே !
அரசனாக இருந்தாலும் ஒரு மனைவி தான் வைத்திருக்க வேண்டும் என்ற ஆண்டவரின் கட்டளையை துணிந்து அறிவித்தவரே !
கருவிலேயே அர்ச்சிக்கப்பட்டவரே !
மெசியாவின் பிறப்பையும் இறைப்பையும்
முன் அறிவித்தவரே !
பெண்களிடம் பிறந்தவர்களுள் தலைசிறந்தவரே !
கிறிஸ்துவின் கல்வாரி திருஇரத்தத்தின் பேறுபலனை முன்னதாக பெற்றவரே !
மீட்பருக்கே ஞானஸ்நானம் வழங்க தகதியற்றவன் என்றவரே !
மீட்பர் வளர வேண்டும் நானோ குறைய வேண்டும் என்றவரே !
உண்மைக்காவும், நீதிக்காகவும் தலையையே தந்தவரே !
புனித ஸ்நாப அருளப்பரே !
பொய்கள் அதிகரித்து,கிறிஸ்துவின்
உண்மைகள் மறுக்கப்படும்
இக்காலக்கட்டத்தில்,
நாங்கள் துன்பங்களுக்கு அஞ்சாமல்
உண்மையின் குரலுக்கு என்றும் செவிக்கொடுக்கவும், சான்று பகிரவும் எங்களுக்காக மீட்பர் இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடும்..
புனித ஸ்நாபக அருளப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆமேன்.

Comments
Post a Comment