புனிதர்களின் பொன்மொழிகள்

 


திருவருட்சாதனமான நற்கருணையானது பேய்களை விரட்டியடிக்கிறது, பாவம் மற்றும் காமத்திற்கான தூண்டுதல்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது, பாவத்திலிருந்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்துகிறது, கடவுளின் கோபத்தை தனிக்கின்றது, கடவுளை அறியும் புரிதலை தெளிவுப்படுத்துகிறது, கடவுளின் அன்பால் நேசத்தையும் பாசத்தையும் தூண்டுகிறது, நம் நினைவுகளை ஆன்மீக இனிமையால் நிரப்புகிறது, முழு மனிதனையும் நன்மையில் உறுதிப்படுத்துகிறது, நித்திய மரணத்திலிருந்து(நரகம்) நம்மை விடுவிக்கிறது, ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்க்கான தகுதிகளை அதிகரிக்கிறது, நமது நித்திய வீட்டிற்கு(மோட்சம்) நம்மை அழைத்துச் செல்கிறது, மேலும் உடலை நித்திய ஜீவனுக்கு மீண்டும் உயிர்ப்பிக்கிறது.

- புனித தாமஸ் அக்வினாஸ்

The Sacrament of the Body of the Lord puts the demons to flight, defends us against the incentives to vice and to concupiscence, cleanses the soul from sin, quiets the anger of God, enlightens the understanding to know God, inflames the will and the affections with the love of God, fills the memory with spiritual sweetness, confirms the entire man in good, frees us from eternal death, multiplies the merits of a good life, leads us to our everlasting home, and re-animates the body to eternal life,"

- St. Thomas Aquinas

*சாவான பாவத்தோடு நற்கருணை ஒருபோதும் வாங்காதே,நல்ல பாவசங்கீர்தனம் செய்து பரிசுத்தமாக உன் ஆண்டவரை வாங்கு.

*கரங்களில் நற்கருணை வாங்கவே வாங்காதே,நாவில் வாங்கு,உடம்பில் தெம்பு உள்ளவரை மண்டியிட்டு வாங்கு.

*நற்கருணை வாங்கிய பின்‌ குறைந்தபட்சம் 10 நிமிடமாவது உன்னை தேடி வந்துள்ள ஆண்டவருடன் பேசு.அவரோடு பேசாமல், அவரைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கையும்,தொலைபேசியிலும், சக மனிதர்களுடன் பேசி மாபெரும் அவமானத்தை உன்னை தேடி வந்துள்ள ஆண்டவருக்கு ஒருபோதும் செய்துவிடாதே.


இயேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!